கீழ் உருக்கரந்துறையவேணுமென்று தீர்மானித்த பாண்டவர், இப்போது இன்னார்இன்னார் இன்னஇன்ன உருக்கொண்டு இன்னின்ன தொழில் புரியவேணுமென்று மேல்நிகழ்த்தவேண்டிய, யாவற்றையும் ஆராய்ந்து தீர்மானித்தன ரென்க. வெற்றிதரக்கூடிய மங்கை யாதலால், காளியை வணங்கினர். மெய்த்திறலுடையயாவும் என்றது - அட்சயபாண்டம் போன்றவற்றைக் காட்டுமென்னலாம். ஒருவிரகால் ஒளித்துவைத்தன ரென்றது- அஜ்ஞாதவாசஞ் செய்யுங்காலம் முற்றுமளவும் தாம் வைத்த பொருள்களில் எதுவும் கெடாதவாறு இருக்கும்படி வைத்தமையைத் தெரிவிக்கும். தமக்குஉரிய படைக்கலங்களோடு நகரிற்சென்றால் தம்மை நாட்டவ ரஞ்சுவதோடு மறைந்துறைதற்கு இடையூறுமா மென்ற காரணத்தால், ஆயுதங்களையெல்லாம் வன்னிமரத்தின்மீது மறையவைத்து மந்திரத்தாற் பிறர் கவராதபடி ரட்சையுமியற்றினர்பாண்டவ ரென்க. நாணியைக் கழற்றிவிட்டு நீட்டிய காண்டீவம்போன்ற அவ்வவர்களுக்குரிய விற்களையும் மற்றுமுள்ளவற்றையும் வெயில் மழை முதலியவற்றால் நலிவுநேரிடாதபடியும் மானுடர் அண்டாதபடியும் தோலைக்கொண்டு சுற்றச்செய்து பொதிந்து யுதிஷ்டிரன் நகுலன் மூலமாக மரத்தின் மீது அவற்றை வைத்தன னென்றும், ஒருவருஷம் முற்றுமளவும் அவற்றைப் பாதுகாக்குமாறும், அருச்சுனனுக்காவது தனக்காவது மீண்டும் பெறநினைக்கையில் பெறமுடியுமாறும் தேவர்களைக் குறித்து அபிமந்திரித்தும் வைத்தனனென்றும், காளிஸ்தோத்ரங்கூறப்பட்டதென்றும் விவரங் காண்க.(10) 11.-தருமன் துறவியுருக்கொண்டுநிற்க, அவனை வணங்கி விராடன் ஆசிபெறுதல். தம்பியர்வணங்கித் தனது தாளிணையிற்றங்கவோர்தாபதவடிவும் உம்பரும்வியப்பக்கங்கனென்றுரைக்குமொருதிருநாமமுந்தரித்து வெம்பரிதியினுஞ்செம்மை கூர்வடிவம்வெண்புரிநூலொடுவிளங்க ஐம்புலன்மகிழச்சென்றுகண்டிறைவந்தடிதொழவாசியுமுரைத்தான். |
(இ -ள்.) தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க- தம்பிமார்கள்வணங்கித் தன்னுடைய திருவடித்தாமரைகளில் தங்கவும், உம்பர்உம் வியப்ப -தேவர்களும் அதிசயிக்கவும், ஓர் தாபதம் வடிவு உம்- ஒப்பற்றதுறவிவேஷத்தையும், கங்கன் என்று உரைக்கும் ஒரு திருநாமம்உம்- கங்கனென்று சொல்லும் ஒருபெயரையும், தரித்து-தாங்கிக்கொண்டு, (யுதிஷ்டிரன் வேத்தவை சார்ந்தானாக),- வெம்பரிதியின்உம் செம்மை கூர் வடிவம்-வெம்மை பொருந்திய சூரியனைக் காட்டிலும் செந்நிறம்மிக்க (அவ்யுதிஷ்டிரனது) வடிவம், வெண் புரிநூலொடு விளங்க - வெண்மைபொருந்திய முப்புரிநூலுடனே விளங்காநிற்க, ஐம்புலன் மகிழ கண்டு -(தன்னுடைய) பஞ்சேந்திரியங்களும் மகிழ்ச்சிகொள்ளுமாறுஅம்முனிவனை(ச் சேய்மையிற்) கண்டு, வந்து -(தன்னிடத்தினின்று புறப்பட்டு) வந்து, இறை - விராடராசன், சென்று -(துறவியிருக்கு மிடத்துப்) போய், அடி |