அந்தயுத்தமும், வல் கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனது - வலிய மலைமீதுபொருந்திய கொழுந்துவிட்டெரிகின்ற தீபம்போல எங்கும் விளக்கமுற்றுப்பரவியது; (எ - று.) பலநகரங்களிலும் இதேபேச்சாயிற் றென்றவாறு. சூரியன் குன்றின் மேலிட்ட விளக்குப்போன்று உலகெங்கும் பிரகாசித்தனனன்றோ: அதுபோலவே கீசகர்களின்வதமும் எங்கும் தெரிய லாயிற்றென்க. இருள்வலி - இருளையொழிக்கும் வலிமைபெற்றவன் எனச்சூரியனுக்கு அன்மொழித்தொகை. (157) 106.-தன் மைத்துனன்மார்கந்தருவரா லிறந்தது கேட்டு விராடன் மெலிவுழத்தல். புலியினும்பெரும்போரிற்றனித்தனி வலியராகியமைத்துனர்யாரையும் பலியிடுங்கந்தருவரைப்பார்க்கவே மெலிவுழந்தனன்விற்கைவிராடனே. |
(இ -ள்.) பெரும் போரில் - பெரிய போர்முனைகளில், புலியின்உம் தனித்தனி வலியர் ஆகிய - புலியைக்காட்டிலும் தனித்தனி வலிமையைக் காட்டுபவராகிய, மைத்துனர் யாரைஉம் - (தன்) மைத்துனர் யாவரையும், பலியிடும் - உயிர்ப்பலிகொண்ட, கந்தருவரை -, பார்க்கவே-, வில் கை விராடன் - வில்லையேந்திய கையையுடைய விராடமன்னவன், மெலிவு உழந்தனன் - மனச்சோர்வடைந்தான்; (எ - று.) மைத்துனர் யாரையும் பலியிடுங் கந்தருவரைப் பார்த்தல் தன் மைத்துனன்மாருயிரைக் கந்தருவர்கொள்ளை கொண்டா ரென்று உணர்தல். பார்த்தல் - இங்கு, மனத்தாற் காணல். பார்க்கவே என்ற இடத்து, பற்றவே என்றும் பாடமுண்டு. (158) 107.-பெரும்பாலும்அஜ்ஞாதவாசகாலம் கழிந்துவிட்டதால் பாண்டவர் இனி விரைவில் வெளிப்படுவோமென்ற மனப்பான்மையோ டிருத்தல். காண்டகுந்தம வேடங்கரந்துறை யாண்டுசென்றதினிச்சிலநாளென மீண்டுதோன்றுதுமென்றுவிரதராம் பாண்டுமைந்தரும்பான்மையினண்ணினார். |
(இ -ள்.) விரதர் ஆம் - விரதவொழுக்கத்தை யுடையவரான, பாண்டு மைந்தர்உம் - பாண்டவர்களும்,- 'காண்தகும் தம வேடம் - (இன்னாரென்று) கண்டறியத்தக்க நிஜரூபத்தை, கரந்து - மறைத்துக்கொண்டு, உறை - வசிக்கின்ற, யாண்டு - ஒருவருஷமும், இனி சில நாள் என - இனிச் சில நாளே யுள்ளன என்னுமாறு, சென்றது - |