திருமகளோடுஉவமித்தது. திருமகளுவமை - அழகுக்கும் செல்வநிறைவிற்குமாம். செழுந்திரு என விசேடித்தது, அவள் போல இவள் இடையில் விட்டு நீங்காளாதலால். துகிலுரிதல் - வஸ்திராபஹரணம்: "அருகணுகி மடவரலையஞ்சாமல் துகிலுரிவா னடர்ந்தபோதில், இருகைநறுமலர் குவிய எம்பெருமானிணை யடிக்கே யிதயம்வைத்தாள்", 'ஆறாகி யிருதடங்கண் அஞ்சன வெம்புனல் சோரவளகஞ்சோர, வேறானதுகில் தகைந்த கைசோர மெய்சோர வேறோர் சொல்லுங், கூறாமற் கோவிந்தா கோவிந்தா வென்றரற்றிக் குளிர்ந்து நாவில், ஊறாத வமிழ்தூறவுடல்புளகித்து உள்ளமெலா முருகினாளே," "அருமறை சொல்லிய நாமமாயிரமு முரைத்தழைக்க" எனக் கீழ்ச் சூதுபோர்ச்சருக்கத்து வந்ததை இங்கே உணர்க. மாண்டார், மாள் - பகுதி; மாட்சிமைப்பட்டார் என்ற பொருளில், மாண் - பகுதி. வேண்டுவது மேம்படுநல்லறமேயோ என்பதற்கு - இராச்சியத்தையிரப்பது பெருமைபெறத் தக்க சிறந்த இராசதருமந்தானோ? என்றும் உரைக்கலாம். உயிர் நீங்கிய உடலை 'மாண்டார்' என உயர்திணையாற் கூறினது, மரபுவழுவமைதி. (84) 25. | பொன்னாருந்திகிரியினான் போனாலும் பொறைவேந்தன் புகன்றவெல்லாஞ், சொன்னாலுமவன்கேளான் விதிவலியாற் கெடு மதிகண் டோன்றாதன்றே, யெந்நாளுமுவர்நிலத்தி னென்முளைவித்திடினும்விளை வெய்திடாது, பன்னாகந்தனக்கமிர்தங் கொடுத்தாலும் விடமொழியப் பயன்கொடாதே. |
(இ -ள்.) பொன் ஆரும் திகிரியினான் - பொன் மயமாகப் பொருந்திய சக்கராயுதத்தை யுடையவனான கண்ணபிரான், போனாலும் - தூதுசென்றருளினாலும், பொறை வேந்தன் புகன்ற எல்லாம் - பொறுமைக் குணத்தையுடைய யுதிட்டிரராசன் கூறிய சமாதான வார்த்தைகளை யெல்லாம், சொன்னாலும் - (கண்ணன்) சொல்லியருளினாலும், அவன் கேளான் - அத்துரியோதனன் கேட்டு அதன்படி நடக்கமாட்டான், (ஏனெனில்),- விதிவலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே - போகூழின் வலியினால் அழிதற்குக் காரணமான அறிவுக்கு (நீதி) கட்புலப்படாதாம்; எ நாளும் உவர் நிலத்தின் என் முளைவித்திடினும் விளைவு எய்திடாது - எப்பொழுதும் களர் நிலத்தில் எந்த விதையை விதைத்திட்டாலும் (அது) விளைதலை யடையமாட்டாது; பன்னாகந் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய பயன் கொடாதே - பாம்புக்குப் பாலை யூட்டினாலும் அது விஷத்தைத் தவிர வேறு நல்ல பயனைத் தராதன்றோ! மூன்றுநான்காம் அடிகளில் உபமானங்கள் - எவ்வளவு நல்ல உபதேசத்தை எத்தனைக் காலம் செய்தாலும் அது தீயோர் மனத்திற் சென்று பதிந்து பலியாதென்ற கருத்தையும், தீயோர்க்கு நல்லன உபதேசித்தால் அவர் அதற்கு எதிராகத் தீங்குகளையே புரிவரென்ற கருத்தையும் விளக்க வந்தன. இங்கே 'உவர்நிலம்' என்றது, விதைத்த விதையையெல்லாம் முளைக்க வொட்டாமற் |