பக்கம் எண் :

114பாரதம்உத்தியோக பருவம்

யின்தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே
அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி
உடம்புநரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன்
என்பதாம்.

     மருதிடைச்சென்ற கதை:-கண்ணன் குழந்தையா யிருக்குங் காலத்தில்
துன்பப்படுத்துகின்ற பல திருவிளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்து
நந்தகோபன் மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற்
கயிற்றினாற் கட்டி ஓருரலிலே பிணித்து விட, கண்ணன் அவ்வுரலை
யிழுத்துக்கொண்டு தவழ்ந்து, அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவிலே
எழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப்பட்டபடியினாலே
அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவிலே, முன் நாரதர் சாபத்தால்
அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னுங் குபேர புத்திரர்
இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர் என்பதாம்.  அந்தக் குபேர புத்திரர்கள்
முன்பு ஒரு காலத்தில் பல தெய்வமகளிருடனே ஆடையில்லாமல் ஜலக்கிரீடை
செய்துகொண்டிருக்கையில், நாரத மகாமுனிவர் அங்கு எழுந்தருள,
மங்கையரனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க.  இந்த
மைந்தர்மாத்திரம் மதுபான மயக்கத்தால் வஸ்திர மில்லாமலே யிருக்க, நாரதர்
கண்டு கோபங்கொண்டு 'மரங்கள்போ லிருக்கிற நீங்கள் மரங்களாவீர்' என்று
சபித்து, உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, 'நெடுங்காலஞ்
சென்றபின்பு திருமால் உங்களை யடையுஞ் சமயத்தில் இவ்வடிவமொழிந்து
முன்னைய வடிவம் பெற்று மீள்வீர்' என்று சாபவிடை கூறிப்போயினரென்று
அறிக.

     சகடமுதைத்த கதை:-நந்தகோப கிருகத்தில் ஒரு வண்டியின்
கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒருநாள்
அச்சகடத்திலே கம்சனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத்
தன்மேலே விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதை அறிந்து, பாலுக்கு அழுகிற
பாவனையிலே தனது சிறிய திருவடிகளை மேலே தூக்கியருள, அவ்வடிகளால்
உதைபட்ட மாத்திரத்தில், அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுட்பட
அழிந்ததென்பது.                                              (92)

33 - கண்ணன் 'யுத்தம்நேராதிருப்பதற்கு உபாயம்யாது?'
என்ன, சகதேவன் விடைகூறத் தொடங்குதல்

இவ்வண்ணஞ்சாதேவ னியம்புதலுநகைத்தருளி யிகலோர்சொன்ன,
அவ்வண்ணம்புகலாமல்விரகுரைத்தா னிவனென்ன
                                   வவனோடாங்கோர்,
பைவண்ணமணிக்கூடந் தனிலெய்திப் பாரதப்போர்
                                       பயிலாவண்ணம்,
உய்வண்ணஞ்சொல்லுகநீ யுபாயமெனத்தொழுதுரைப்பா
                                   னுரங்கொள்வேலான்.

     (இ -ள்.) இ வண்ணம் - இந்தப்படி, சாதேவன் - சகதேவன்,
இயம்புதலும் - சொன்னவுடனே, (கண்ணபிரான்), நகைத்தருளி -