பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 115

புன்சிரிப்புக் கொண்டருளி, 'இகலோர் சொன்ன அ வண்ணம் புகலாமல் -
வலிமையையுடைய மற்றைப் பாண்டவர்கள் கூறின அந்தப்படி கூறாமல், இவன்
- இச்சகதேவன், விரகு உரைத்தான் - தந்திரமாகச் சொன்னான்,' என்ன -
என்று கருதி, அவனோடு - அச்சகதேவனுடனே, ஆங்கு - அவ்விடத்தில்
[அல்லது அப்பொழுது], ஓர் பை வண்ணம் மணி கூடந்தனில் எய்தி - பசுமை
நிறமுள்ள மரகத ரத்தினங்களால் அமைக்கப்பட்டதொரு மண்டபத்தினுள்ளே
(மற்றவர்களைவிட்டுச்) சென்று,- (சகதேவனை நோக்கி,)- 'பாரதம் போர்
பயிலாவண்ணம் - பாரத யுத்தம் நடவாதபடியும், உய்வண்ணம் - (எல்லாரும்)
அழியாது பிழைத்து வாழும்படியும், நீ-, உபாயம் சொல்லுக - (தக்கதோர்)
உபாயத்தைச் சொல்வாயாக', என - என்று சொல்ல, உரம்கொள் வேலான் -
வலிமையைக்கொண்ட வேலாயுதத்தை யுடையவனான சகதேவன், தொழுது -
(கண்ணனை) வணங்கி, உரைப்பான் - கூறுபவனானான்; (எ - று.)-அதனை,
அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

    கண்ணனுக்கு நகைப்பு, தனது திருவுள்ளக்கருத்தை உள்ளபடியறிந்து
கூறிய சகதேவனது திறத்தைக் கண்டு வியந்ததனாலானது.  தனது கருத்தை
வெளியிடாதிருக்கவேண்டி இங்ஙனம் கண்ணன் சகதேவனைத் தனியே
வினாவுமாறு ஏகாந்தமாக அழைத்துச் சென்றன னென்க.  விரகு உரைத்தான் -
(நமது) மாயையை எடுத்துக் கூறினான் என்றுமாம்.  பாரதப்போர் - பாரத
வம்சத்தாருள் நிகழும் போர்.                                   (93)

வேறு.

34.-சகதேவன் கூறும்உத்தரம்.

நீபா ரதவமரில்யாவரையு நீறாக்கிப்
பூபாரந் தீர்க்கப்புரிந்தாய் புயல்வண்ணா
கோபாலா போரேறேகோவிந்தா நீயன்றி
மாபா ரதமகற்றமற்றார்கொல் வல்லாரே.

இதுவும் அடுத்த கவியும் - ஒரு தொடர்.

     (இ -ள்.) 'புயல் வண்ணா - மேகம்போலக் கரிய திருநிறமுடைய வனே!
கோபாலா - பசுக்களைக் காக்கும் இடைச்சாதியில் வளர்ந்தவனே! போர் ஏறே
- போரில் ஆண்சிங்கம் போன்றவனே! கோவிந்தா - கோவிந்தனென்னுந்
திருநாமமுடையவனே!-நீ-, பாரதம் அமரில் - பாரத யுத்தத்தில், யாவரையும்
நீறு ஆக்கி - எல்லாரையும் அழியச் செய்து, பூ பாரம் தீர்க்க - பூமிதேவியின்
சுமை மிகுதியை யொழிக்க, புரிந்தாய் - விரும்பியருளினாய்; (ஆதலால்) மா
பாரதம் - (உன் கருத்துப்படி நிகழும்) பெரிய பாரதப் போரை, நீ அன்றி -
(அதனை நடத்தும்) நீயே யல்லாமல், அகற்ற வல்லார் - ஒழிக்கவல்லவர்,
மற்று ஆர்கொல் - வேறு யாரோ? [எவருமில்லை யென்றபடி]; (எ - று.)