யொத்தவளானதிரௌபதி,- வரிமலர் கண்புனல்சோர - (உத்தமவிலக்கணமாக அமைந்த சிவந்த) இரேகைகளையுடைய பூப்போன்ற (தனது) கண்களினின்று நீர் சொரியவும், மலர் மறந்த குழல் சோர - (பலகாலமாகப்) பூமுடித்தலைமறந்துள்ள தன்கூந்தல் கீழேபுரளவும், விரை மலர் செம் சே அடிக்கீழ் வீழ்ந்து அழுதாள் - வாசனையையுடைய தாமரைமலர்போன்ற மிகச் சிவந்த (கண்ணபிரானது) திருவடிகளில் விழுந்து புலம்பினாள்; (எ - று.)- புலம்பும் வகையை, அடுத்த மூன்று பாடல்களிற் காண்க. ஐம்பொறிகளையும் உரியபுலன்களிற் செலுத்தி ஒற்றுமைப்பட்டு நிற்கும் மனம்போலப் பஞ்சபாண்டவர்களையும் உரியதொழில்களிற் பிரவேசிக்கும்படி செய்விக்கிற கண்ணபிரானும் போரை விரும்பாமல் சமாதானத்தையே நாடிக் கூறியதனால், திரௌபதி 'இனித் தன் சபதம் நிறைவேறுமாறு இல்லை' என்று கருதித் தனதுகருத்து முற்றுப்பெறுமாறு வேண்டி அக்கண்ணபிரானது திருவடிகளிலே விழுந்து புலம்புவாளாயின ளென்க. கீழ்க் கவியை நோக்கி, 'இது' என்றது - சந்தியாயிற்று. முன்னிரண்டடியைச் சகதேவனது வார்த்தையாகக் கொண்டால், கீழ்க்கவியிற்கூறியதன் விவரமான அநுவாதமென்க. இருநிலத்தில் - அத்தினபுரி, இந்திரப்பிரத்தம் என்னும் இரண்டு இராச்சிய பாகங்களிலென்றுமாம். தருமனுக்கும், உம் - அரசாட்சிக்கு உரிய மூத்தமகனான தருமபுத்திரனுக்கும் என உயர்வுசிறப்பும், எதிரதுதழுவிய எச்சப்பொருளு முடையது. எனக்கும், உம் - இறந்தது தழுவிய எச்சம். பதின்மூன்று வருடமாக விரிந்த கூந்தலாதலின், 'மலர் மறந்த குழல்' எனப்பட்டது. வரிக்கண் என இயையும்; வரி மலர் என எடுத்து, வண்டுகள் மொய்க்கும் மலரெனினுமாம். வரிமலர் - தாமரை யென்றேனும், கருங்குவளை யென்றேனும் கொள்க. செம் சே - மிகுதியுணர்த்த வந்த ஒரு சொல்லடுக்கு. சே - செம்மையென்னும் பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டு இடைநின்ற மகரமும் கெட்டது. சேவடி, வ் - உடம்படுமெய்; பண்புப்பெயரின் இடைமகரம் வகரமாகத்திரிந்ததாகவுங் கொள்ளலாம். திருவடிகள் சிவந்திருத்தல், உத்தமவிலக்கணம். செம்-அழகிய, சே - சிவந்த எனினுமாம். அடிக்கீழ், கீழ் - ஏழனுருபு. மின் உவமை - மென்மைக்கும், ஒளிக்கும். (102) 43.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: திரௌபதி புலம்புதல். சாலக்கனகன்றனிமைந்தனைமுனிந்த காலத்தவனறைந்தகற்றூணிடைவந்தாய் மூலப்பேரிட்டழைத்தமும்மதமால்யானைக்கு நீலக்கிரிபோன்முன்னின்றநெடுமாலே. |
(இ -ள்.) கனகன் - பொன்னிறமாகிய உடம்பையுடையவனான இரணியன், தனிமைந்தனை - ஒப்பற்ற (தனது) புத்திரனான பிரகலாதனை, சால முனிந்த காலத்து - மிகவுங்கோபித்த காலத்தில், அவன் அறைந்த கல் தூணிடை - அவ்விரணியன் கையால்தாக்கின |