பக்கம் எண் :

128பாரதம்உத்தியோக பருவம்

யும் பெயர்,(இதன் தன்மை - எல்லோமென்றும், படர்க்கை - எல்லாரென்றும்
வரும்) 'கண்டிருந்தீ ரெல்லீரும்' என்றது, பாண்டவரைவரையும்.       (106)

47.- இதுவும் அது.

சண்டமுகி லுருமனைய சராசந்தன்றனக்கஞ்சி
வண்டுவரை யரணாக வடமதுரைகைவிட்ட
திண்டிறன்மா தவன்மதியோதிகழ்தருமன் றன்மதியோ
பண்டுமவர் கருத்தறிந்தும்பார்போய்வேண் டுவதென்றான்.

    (இ - ள்.) சண்டம் - உக்கிரமான, முகில் உரும் - மேகத்தில்
தோன்றுகிறஇடியை, அனைய - ஒத்த, சராசந்தன் தனக்கு-ஜராசந்தனுக்கு,
அஞ்சி -பயந்து, வள் துவரை அரண் ஆக - அழகிய துவாரகாபுரியையே
காப்பிடமாகக்கொண்டு, வடமதுரை கைவிட்ட - வடக்கிலுள்ள (தனது)
மதுராபுரியை முழுவதும் விட்டு நீங்கின, திண் திறல்  மாதவன் - மிகுந்த
வலிமையையுடைய கண்ணனது, மதியோ - அறிவின் காரியமோ? திகழ்
தருமன் தன் மதியோ - விளங்குகின்ற யுதிட்டிரனது அறிவின் காரியமோ?
பண்டு அவர் கருத்து அறிந்தும் - முன்னமே அத்துரியோதனாதியரது
எண்ணத்தை (உலூகன் முதலியோரால்) தெரிந்திருந்தும், பார்போய்
வேண்டுவது - (மறுபடி) சென்று இராச்சியத்தை யாசிப்பது, என்றான் - என்று
கூறினான் (சாத்தகி); (எ - று.)

    இவ்விரண்டு கவிகளும் சாத்தகிவார்த்தை யென்பது, வருங்கவியில்
"சாத்தகிநின்றிவையுரைப்ப" என்பதனால் விளங்கும், முதலிரண்டடிகளால்,
பகைவர்க்குப்பயந்தோடுகிறவனென்று கண்ணனது பராக்கிரமத்தை இகழ்ந்து
கூறியபடி. 'திண் திறல்' என்ற மிகுந்த வலிமை குறிக்கிற ஒரு
பொருட்பன்மொழியும்,இங்கு இகழ்ச்சிபற்றி வந்ததுபோலும்; அல்லது,
பலமிருந்தும் தைரியமில்லையென்றதை உணர்த்தியதுமாம்.  புத்திசாலியான
சாத்தகி இங்ஙனம் பெரியோரைஇகழ்ந்தது, இதனாலேனும் அவர்க்கு வீராவேச
முண்டாகி அவர்கள் போருக்குஎழுந்து பகையை யொழிக்க வேண்டுமென்ற
நல்ல கருத்தினா லென்க.

    முதலிரண்டடிகளிற் கூறிய விவரம்:- மகததேசத்து அரசனும்
தேவர்களுக்குப்பகைவனும் ஆகிய பிருகத்திரத னென்பவன் மைந்தனில்லாக்
குறையால்வனத்திற்சென்று சண்டகௌசிகமாமுனிவனை வணங்கி வரம்வேண்ட,
அவன்தனது வாசஸ்தானமாக இருக்கும் மாமரத்தின் கனியொன்றைக்கொடுக்க,
அதனை அவன் காசிதேசத்தரசன் பெண்களாகிய தன் மனைவிமார்
இருவர்க்கும் பகிர்ந்து கொடுத்தான்; அதனால் அவ்விருவரிடத்தும்
பாதிபாதியாகக் குழந்தை பிறந்தது; அவற்றை அவன் ஊர்ப்புறத்தில்
எறிந்துவிடும் படி கட்டளையிட, அங்ஙன மெறியப்பட்ட அப்பகுதிகளை
அந்தக் கிராம தேவதையாகிய ஜரையென்பவள்  இரவில் ஊர்வலம்
வருகையில் கண்டு  எடுத்துப் பொருத்தி உயிர்ப்பித்து, தன்னாற்
பொருத்தப்பட்ட காரணத்தால் ஜராசந்தனென்று பெயரிட்டு வளர்க்கும்படி