இம்மதிலுக்குஒருவாறு உவமையாக அமைக்கப்பட்டதாமென்று சொல்லும்படி, புரிசை - மதில், பரந்தது - பரவியுள்ளது; (எ - று.) முன்னிரண்டடிகளில் தொடர்புயர்வுநவிற்சியணியும், பின்னிரண்டடிகளில் தற்குறிப்பேற்றவணியுமாக வேறுபாடுதோன்ற விரவிவந்த சேர்வையணி. சக்கரவாளமலை - பூமியைச் சூழ்ந்த கடலைச் சுற்றிலும் கோட்டை மதில்போல வளைந்திருப்பதொரு மலை; சக்கரம்போல வட்டமாக இருத்தலால், சக்கரவாளமென்று பெயர். (120) 61.-அந்நகரத்துக்கொடிச்சீலைகளின் வருணனை. பகலினுங்கடும்பரிதிதன்கதிர்பரப்பாமல் இகலியெங்கணுமெறிந்துகால்பொருதலினேத்திப் புகலுகின்றமந்தாகினித்தரங்கமேபோல அகல்விசும்பிடைமிடைவனநெடுங்கொடியாடை. |
(இ -ள்.) நெடு - நீண்ட, கொடி ஆடை - கொடிகளின் சீலைகள், - கடும்பரிதி பகலினும் தன் கதிர் பரப்பாமல் - வெப்பத்தையுடைய சூரியன் மத்தியான காலத்திலும் தனது கிரணங்களை வீசாதிருக்கும்படி, இகலி எங்கணும் கால் எறிந்து பொருதலின் - (அவனோடு) பகைத்து எல்லா விடங்களிலும் காற்று வீசி மோதுதலினால், - ஏத்தி புகலுகின்ற மந்தாகினி தரங்கமே போல - (யாவராலும்) புகழ்ந்து கூறப்படுகின்ற தேவகங்கா நதியினது அலைகள் போலவே, அகல் விசும்பிடை மிடைவன - இடம் பரந்த ஆகாயத்தில் நெருங்குவன; (எ - று.) ஆகாயத்தில் மிக வுயரத்தில் நெருங்கி அசைந்து சூரிய கிரணங்களையும் உட்புகவொண்ணாதபடி மறைத்து விளங்குகிற வெண்மையான கொடிச் சீலைகள் வெண்ணிறமான ஆகாசகங்காநதியின் அசைகின்ற குளிர்ந்த அலைகளை யொக்குமென்பதாம்: உவமையணி. காற்றிலே கொடிச் சீலைகள் அசைவதைச் சூரியனிடத்துப் பகையாற் பகலினும் கதிர் பரப்பாமல் மறைப்பதாகக் குறித்தது, தற்குறிப்பேற்றவணி. விசும்பிடை மிடைவன நெடுங் கொடியாடை - பிராசமென்னுஞ் சொல்லணி. ஒவ்வொரு நிழலும் அவ்வப்பொருளின் அடியில் தங்குதற்கு உரிய காலமான நடுப்பகலிலும் நிழல் செய்யும்படி மிகப்பல கொடிகள் நெருங்கி நீண்டு உள்ளன வென்க. பகலினும், உம் - அப்போது நிழல் தருதலின் அருமையை விளக்குதலால், உயர்வுசிறப்பு; இதனை எச்சவும்மையாக்குதல் சிறப்பின்றாம். ஆகாச கங்கைக்கு மந்தாகிநி யென்றுபெயர். கொடி யாடை - த்வஜபடம். "கங்கை யென்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்", "எழுமையுங் கூடி யீண்டியபாவ மிறைப்பொழுதளவினி லெல்லாங், கழுவிடும் பெருமைக்கங்கை" என்ற பெரியார் பாசுரங்களாலும், ஏத்திப்புகலப்படும் மந்தாகினியின் மகிமையை அறிக. அணியணியாக வீசியடித்தலால், கொடிநிரைக்கு அலைவரிசை உவமையாம். (121) |