மற்றும்எல்லாப் பக்கங்களிலும் இடம்விட்டுப் புடைபெயர்தற்கு உரிய இடத்தைப் பெறாமையால், துன்னி நின்றவர் ஏகுமின் ஏகுமின் என்னும் ஓசையே - நெருங்கி நின்றவர்கள் 'போங்கள் போங்கள்' என்று (பிறரைநோக்கிப்) பலகாற்சொல்லுகிற ஒலிகளே, உள்ளன - நிறைந்துள்ளன; (எ- று.)
மிக்கநெருக்கத்தால் மன்னவர்களின் நாற்படைகளும் போக்கிடமில்லாமல் ஒன்றோடொன்று நிலைதடுமாறு மென்க. "தோகையர் குழாமுமைந்தர் சும்மையுந் துவன்றியெங்கும், ஏகுமினேகு மென்றிடையிடை நிற்றலல்லாற், போகிலமீளகில்லா பொன்னகர் வீதியெல்லாம்" என்ற கம்பராமாயணம் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. மன்னர் வேழம் என்பதற்கு - அரசர்கள் ஏறும் யானைகளென்று உரைத்து, சேனை - நால்வகைப்படை யென்றுங் கொள்ளலாம். அடுக்குகள் - விரைவும், பன்மையுங் குறிக்கும். ஒரே அடியில், 'பின்னும் முன்னும்' என மாறுபட்ட சொற்கள் வந்தது - தொடைமுரண். (123) 64.-இது - அந்நகரத்துக்கடைத்தெருவின் வருணனை. வரையெலாம்பலவனமெலாங்கடலெலாம்வளைந்த தரையெலாம்படுபொருளெலாந்தனித்தனிகுவித்த நிரையெலாங்கவராவணநீர்மையைப்புலவோர் உரையெலாந்தொடுத்துரைப்பினுமுவமைவேறுளதோ. |
(இ -ள்.) வரை எலாம் - எல்லாமலைகளிலும், பல வனம் எலாம் - பலவகைப்பட்ட எல்லாக்காடுகளிலும், கடல் எலாம் - எல்லாக் கடல்களிலும், வளைந்த தரை எலாம் - (அக்கடல்) சூழ்ந்த எல்லாநாடுகளிலும், படு - உண்டாகிற, பொருள் எலாம் - எல்லாப்பொருள்களையும், தனித்தனி குவித்த - வெவ்வேறாகக் குவித்துவைத்துள்ள, நிரை எலாம் - வரிசைகளையெல்லாம், கவர் - (தன்னிடத்திலே) கொண்டுள்ள, ஆவணம் - கடைவீதியினது, நீர்மையை - தன்மையை, புலவோர் - புலவர்கள், உரை எலாம் தொடுத்து உரைப்பினும் - (தங்கள்) சொற்களையெல்லாம் புனைந்து வருணித்துச் சொல்லத் தொடங்கினாலும், உவமை வேறு உளதோ - (அக்கடைத்தெருவிற்கு எடுத்துச்சொல்லத்தக்க) உபமானப்பொருள் வேறு (உலகத்தில்) உள்ளதோ? [இல்லையென்றபடி]; (எ - று.) எனவே,அதற்கு அதுவே உவமையா மென்றவாறு. அதிசயோக்தி முதலிய புனைந்துரைவகையாற் கற்பித்துக்கூறினாற் கூறலாமே யன்றி, பொருளொப்புமை யெடுத்துச்சொல்லக்கிடையாதென்பதாம். மலைபடு பொருள்கள் - மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம் முதலியன. காடுபடு பொருள்கள் - இறால், தேன், அரக்கு, மயிற்பீலி, நாவி முதலியன. கடல்படுபொருள்கள் - உப்பு, முத்து, பவளம், சங்கு, ஓர்க்கோலை முதலியன. நாடுபடு பொருள்கள் - செந்நெல், சிறுபயறு, கரும்பு, வாழை, செவ்விளநீர் முதலியன. பல என்பதைப் பிறவற்றிற்குங் கூட்டலாம். இனி, பலவநம் என வடசொற்றொடராக எடுத்து, பயன்களைத்தரும் வனமென்றுங் கொள்ளலாம். தரை - (பொருள்களைத்) தரிப்பது. ஆவணம், உவமை - ஆப |