செல்வங்களையுடைய பெரிய அவ்வத்தினாபுரியின், தெருவினை - வீதிகளை, ஒப்பனை செய்தார் - அலங்காரம் செய்தார்கள்; (எ - று.) கண்ணன் தனக்குப் படைத்துணையாகப்பலசேனைகளைக் கூட்டி யனுப்பியருளிய உபகாரத்தைக்கருதியும், அரசர்க்குள் ஒருவர்க்கொருவர் செய்யவேண்டும் மரியாதைக்கிரமம் பற்றியும், துரியோதனன் இங்ஙனம் கண்ணனைக் கௌரவித்து உபசரிக்கக் கருதிக் கட்டளையிட்டான். 'தொல்லைநாயகன் வந்தனன் என்றலும்' என்றது - தொடர்ச்சியை விளக்கவந்தஅநுவாதம்; கூறியது கூறலன்று; (அநுவாதம்-முன்பு சொன்னதை மீண்டும் ஒருபயனை நோக்கிச் சொல்லுதல்; இது குற்றமன்று. கூறியது கூறல் - முன்புசொன்னதை ஒருகாரணமுமின்றி மீண்டுஞ் சொல்லுதல்; இது குற்றமாம்.) மல்லல்- வளப்பமுணர்த்தும் உரிச்சொல்; "மல்லல் வளனே" என்பது தொல்காப்பியம். யோசனை, காதம் என்பன - ஒருபொருளன; அது - ஏழரைநாழிகை வழி;(நாற்காதத்தை யோசனையென்பது - ஜைந நூல் வழக்கு.)மற்றைத்தேவர்கட்குப் போல எம்பெருமானுக்கு நாயகத்தன்மை நடுவில்ஏறிட்டுக் கொண்டதன்று என்பார், 'தொல்லைநாயகன்' என்றார். (131) 72.- துரியோதனன் கண்ணனையெதிர்கொள்ளச்செல்ல, சகுனி தடுத்தல். மின்னுமாமுகிற்பல்லியவிதங்கண்முன்முழங்க மன்னர்மன்னவனெழுந்தனன்மாலெதிர்கொள்வான் என்னைநீயவற்கெதிர்செல்வதென்றுதன்மருகன் றன்னைவன்பொடுதகைந்தனன்கொடுமைகூர்சகுனி. |
(இ -ள்.) மின்னும்-மின்னுகிற, மா முகில் - பெரிய மேகங்களின் முழக்கம்போல, பல் இயம் விதங்கள் - அநேகமான வாத்தியங்களின் வகைகள், முன்முழங் - (தனக்கு) முன்னிடத்திலே மிகவொலிக்க,- மன்னர் மன்னவன் - அரசர்க்கரசனான துரியோதனன்,- மால் எதிர்கொள்வான் - கண்ணனை எதிர்கொண்டு உபசரித்தற் பொருட்டு, எழுந்தனன் - புறப்பட்டான்; (அப்பொழுது), - கொடுமை கூர் சகுனி - கொடுந்தன்மை மிக்க சகுனியானவன்,- அவற்கு நீ எதிர்செல்வது என்னை என்று - 'அவனுக்கு நீ எதிர்கொண்டு போவது என்ன காரியம்?' என்று கூறி, தன் மருகன் தன்னை- தனது மருமகனாகிய துரியோதனனை, வன்பொடு தகைந்தனன் - (எதிர் செல்ல வொட்டாது) வலியத் தடுத்துவிட்டான்; (எ - று.) கொட்டுவன ஊதுவன முதலிய பலவகையும் அடங்க 'பல்லிய விதங்கள்' என்றார். மால் எதிர்கொள்வான்-உயர்திணையில் இரண்டனுருபு தொக்கது. முகில் - உவமத்தொகை. சகுனி - காந்தார தேசத்தரசன்; சுபலனென்னும் அரசனது புத்திரன்; திருதராட்டிரனது மனைவியாகிய காந்தாரியுடன்பிறந்தவன்; ஆதலால், துரியோதனாதியர்க்கு மாமன்: சூதாடுதலில் மிக வல்லவன். இம்மை மறுமைகளில் எண்ணிறந்த நன்மைகளைத் தருதற்கு ஏற்ற கண்ணனை யெதிர்கொள்ளுதலைத் தடுத்த தீவினையுடைமை பற்றி, 'கொடுமை |