பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 157

இச்சிறுகுடில் என்ன மாதவஞ் செய்தது - செய்யாததைச் செய்தது போலக்
கூறிய மரபுவழுவமைதி.  இது, உலகநவிற்சியணி.  விநயத்தால் தன்னை மிகத்
தாழ்த்தி, தனது சம்பந்தமான மாளிகையை 'இச்சிறு குடில்' என்றான்.
பயோததி முதலியனவல்லாததும், மாதவம் செய்யாததுமாகிய எனது இச்சிறு
குடிசையில் நீ எழுந்தருளியது, உனது இயற்கைக் கருணையேயென முகமன்
கூறியபடி.

    'முன்னமே துயின்றருளிய' என்ற அடைமொழியை, பன்னகாதிபப் பாயல்,
பச்சையாலிலை என்பவற்றிற்குங் கூட்டலாம்.  பயஸ் + உததி = பய உததி;
இவ்வடசொற்றொடர், தமிழில் பயோததியென விகாரப்பட்டு வழங்கிற்று.  பயம்
- பால், உததி - கடல்: சுருதி - எழுதாக்கிளவியாய்த் தொன்றுதொட்டுக்
கேள்வியால் வருவதெனக் காரணக்குறி.                         (140)

81.-விதுரன் கண்ணனுக்குவிருந்து சமைப்பித்தல்.

மும்மையாகியபுவனங்கண்முழுதையுமருந்தும்
எம்மையாளுடைநாயகன்விருந்தினுக்கிசைந்தான்
அம்மவென்றனனாறுநூறாயிரமடையர்
தம்மைநோக்கினனவர்களும்விரைவுடன்சமைத்தார்.

     (இ -ள்.) 'மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் - மூன்று வகையான
[சுவர்க்க மத்திய பாதாளமென்னும்] உலகங்களெல்லாவற்றையும், அருந்தும் -
(பிரளய காலத்தில்) உட்கொண்டருளிய, எம்மை ஆள் உடை நாயகன் -
நம்மையெல்லாம் அடிமையாகவுடைய தலைவனாகிய திருமால், விருந்தினுக்கு
இசைந்தான் - (எளிய எனது குடிசையில்) விருந்துண்ண உடன்பட்டான்; அம்ம
- (இது) ஆச்சரியம்'! என்றனன் - என்று கருதி, ஆறு நூறாயிரம் மடையர்
தம்மை நோக்கினன் - ஆறு லட்சஞ் சமையற்காரரை (க் குறிப்பாக)ப்
பார்த்தான்; அவர்களும் - அச்சமையலாளரும், விரைவுடன் சமைத்தார் -
துரிதமாகச் சமையல் செய்தார்கள்; (எ - று.)

    உலகங்கள் ஏழும் பதினான்குமாயிருக்க, மூன்று
என்றதுஎன்னையெனின்,- மேல், கீழ், நடு என்கிற நோக்கத்தாலென்க; (அன்றி,
கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என மூவகைப்பட்ட உலக
மென்றுமாம். கிருதகம் - செய்யப்பட்டது; பூமி, பாதாளம் முதலாயின.
அகிருதகம் - செய்யப்படாதது:  தபோலோக, சத்தியலோகங்கள்.
கிருதகாகிருதகம் - செய்யப்பட்டதும், செய்யப்படாததுமாயிருப்பது:
சுவர்க்கலோகம் முதலியன.  பிரமனது தினப்பிரளயத்தில் அழிவது
கிருதகமென்றும், அங்ஙனம் அழியாமலிருப்பது அகிருதகமென்றும்,
பாதியழிந்தும் பாதியழியாமலுமிருப்பது கிருதகாகிருதகமென்றும் உணர்க.)
திருமால் மூன்று உலகங்களையும் உண்பது, யாவும் அழியுங் கற்பாந்த
காலத்தில்.  மும்மை - மூன்று என்ற மாத்திரமாய் நின்றது.  முழுது -
முழுமையென்னும் பகுதியினடியாகப் பிறந்த ஒன்றன்பாற் குறிப்பு
வினையாலணையும் பெயர்.  இச்சொல் பன்மைப்பொருளை யுணர்த்தி, ஒருமை
விகுதியை ஏற்றுவரும்.  விருந்து - இங்கே, புதிதாய் வந்தவனுக்கு இடும்
உணவுக்கு இருமடியாகு