உண்ணுதற்கு,பெருங் குட திசை பாவையில் படிந்தான் - பெரிய மேற்குத் திக்குக் கடலில் நீராடினான்;(எ - று.) ஒருவன்ஒருதொழிலைச் செய்ததைப்பார்த்த மாத்திரத்தில் தானும் அத்தொழிலைச் செய்யவேண்டுமென்ற கருத்து உண்டாதலாகிய உலகவியல்பு, இங்கே சூரியனிடத்து ஏற்றிக் கூறப்பட்டது. சூரியன் முதலிய கிரக நக்ஷத்திர தாரகைகளெல்லாம் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமிப்பனவற்றைக் கீழ்க்கடலில் உதித்து மேல்கடலில் அஸ்தமிப்பனவாகத் தோற்றமாத்திரத்தைக்கொண்டு வருணித்தல், கவிமரபு. சூரியன் கடலில் மூழ்குதற்குக் காரணமாகாத தானும் மேருவுக்கு அப்புறத்து அவ்வமுதருந்துங்கருத்தை ஏதுவாகக் கற்பித்துக் கூறியதனால், ஏதுத்தற்குறிப்பேற்றவணி: உண்ணும்பொழுது நீராடியுண்டல் மரபாதலின், 'அமுதருந்தப் பரவையிற்படிந்தான்' என்றார். 'மேருவுக்கு அப்புறம்' என்றது, மேருவின்வடபுறத்தை. 'அமுதருந்த' என்றது, அமுதருந்துதல் அமரரான தேவர்க்கெல்லாம் இயல்பாதலால். கவசம் உடம்பைப் பாதுகாத்தல்போல ஞானம் உயிரை நற்கதியிற் செலுத்திப் பாதுகாத்தல் பற்றி, 'ஞானகஞ்சுகம்' எனப்பட்டது. இச்செய்யுளிலுள்ள உம்மைகள் மூன்றனுள், முன்னது - பின்னையவற்றைநோக்கி எதிரதுதழுவிய எச்சமும், மற்றையிரண்டு உம்மைகள் - முன்னையதைநோக்கி இறந்ததுதழுவிய எச்சமுமாம். பாநு என்னும் சொல்லுக்கு - விளங்குபவனென்றும், விளக்குபவனென்றும் பொருள். குடக்கு + திசை = குடதிசை; திசைப்பெயர் முன் திசைப்பெயர்வர நிலைமொழிஈற்றுயிர் மெய்யும் ககரவொற்றும் நீங்கின. (145) 86.-செவ்வானத்தோற்றத்தின் வருணனை. கருதியந்தணர்யாவருந்தங்கடன்கழிப்பச் சுருதியென்னும்வெஞ்சாபமேலம்புகைதொடுத்துப் பரிதிதன்பெரும்பகைவர்மேல்விடுத்தலிற்பரந்த குருதியாமெனநிவந்தெழச்சிவந்ததுகுடபால். |
(இ -ள்.) அந்தணர் யாவரும் - பிராமணர்களெல்லாரும், தம் கடன் கழிப்ப கருதி - (மாலைக்காலத்தில்) தாம்கழிக்கவேண்டிய கடமைகளைக் கழிக்க எண்ணி, சுருதி என்னும் வெம் சாபம்மேல் - வேத மந்திரமாகிய கொடிய வில்லின்மேலே, அம்பு கை தொடுத்து - (அர்க்கிய) நீராகிய பாணத்தைக் கையால் வைத்து, பரிதி தன் பெரும் பகைவர்மேல் விடுத்தலின் - சூரியனது பெரிய பகைவர்களான (மந்தேகரென்னும்) அசுரர்களின்மேலே பிரயோகித்தலால், பரந்த - (எங்கும்) பரவிய, குருதி ஆம் என - இரத்தமாகும் (இது) என்னும்படி, நிவந்து எழ - (செவ்வானம்) மிக்குத்தோன்றுதலால், - குட பால் - மேற்குத் திசை, சிவந்தது - செந்நிறமடைந்தது; (எ - று.) மந்தேகாருணமென்னுந் துவீபத்தில் வாழும் மந்தேகரென்னும் அரக்கர்கள் உக்கிரமான தவத்தைச்செய்து பிரமனிடத்து வரம் |