னதுதிருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகிய நீரே கங்காநதி யென்பது. கருணையங்கடலென்றதற்கு ஏற்ப, 'கங்கைமாநதி கால்வழி' என்பது ஒரு சமத்காரம்; கால் - வாய்க்கால். (151) 92.-கண்ணன் தான் தூதுவந்தமைகூறுதல். தோட்டுவந்துசெந்தேனுகர்சுரும்புசூழ்தொடையாய் காட்டுவந்துமுன்றிரிந்துதங்கடவநாள்கழித்து நாட்டுவந்தபேரைவர்க்குநற்குருநாடு கேட்டுவந்தனமென்றனன்விதுரனுங்கேட்டான். |
(இ -ள்.) (அதுகேட்ட கண்ணபிரான்), - (விதுரனை நோக்கி), 'தோடு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் - பூவிதழ்களில் வந்து சிவந்ததேனைப்பருகுகிற வண்டுகள் சுற்றிலும் மொய்க்கப்பெற்ற மாலையையுடையவனே! - முன் காடு உவந்து திரிந்து - முன்னே காடுகளில் மகிழ்ச்சி கொண்டு சஞ்சரித்து, தம் கடவ நாள் கழித்து - (முன்பு அஜ்ஞாதவாசத்தில்) தாங்கள் கழிக்கக் கடமைப் பட்டனவான நாள்களையும் கழித்து, நாடு வந்த - (இப்பொழுது) மச்ச தேசத்து உபப்பிலாவியத்தில் (வெளிப்பட்டு) வந்துள்ள, பேர் ஐவர்க்கு - ஐந்துபேருக்கு [பஞ்சபாண்டவர்க்கு], நல் குருநாடு கேட்டு - சிறந்த குருநாட்டிற் பாகங்கேட்டற்கு, வந்தனம் - வந்தோம்,' என்றனன் - என்று கூறியருளினான்; - விதுரனும்-, கேட்டான் - (அதனை அன்போடு) கேட்டான்; (எ - று.) 'விதுரனுங்கேட்டான்,' என வேண்டாது கூறினது, அவன் பாண்டவரிடத்தில் மிக்க அன்புகொண்டுள்ளவனாதலால் கண்ணன் கூறியதைப்பேராவலோடு கேட்டுக்கொண்டாடினா னென்பதைக் குறிப்பிக்கும். முதலடியில்உவந்த எனப் பிரித்து - மகிழ்ந்து என்றும், இரண்டாமடியில் வந்து எனப்பிரித்து - சென்று என்றும் உரைத்தலுமாம். பேரைவர் - பெருமையையுடையஐவரென்றுமாம். கேட்டு - கேட்க என்னுஞ் செயவெனெச்சத்தின் திரிபு. (152) 93.-விதுரன், சமாதானத்தில்துரியோதனன் அரசுகொடான் என்றல். முழக்கினாலுயர்முரசுயர்த்தவன்றனக்குரிமை வழக்கினாலறிந்தடலரவுயர்த்தகோன்வழங்கான் தழக்கினாலிருதிசையினுமுரசெழச்சமரில் உழக்கினாலலதுணர்வனோவென்றவனுரைத்தான். |
(இ -ள்.) (அங்ஙனம் கண்ணபிரான் கூறியதற்கு, உடனே),- அவன் - அவ்விதுரன், - 'அடல் அரவு உயர்த்த கோன் - கொடுமையையுடைய பாம்புக்கொடியை உயர எடுத்த அரசனாகிய துரியோதனன், முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன் தனக்கு - ஆரவாரத்தால் மிக்க முரசின்வடிவை யெழுதிய கொடியை உயரவெடுத்தவனாகிய யுதிட்டிரனுக்கு, உரிமை - உரிய இராச்சியபாகத்தை, வழக்கினால் அறிந்து - நீதிப்படி உணர்ந்து, வழங்கான் - கொடுக்கமாட் |