டான்; நால்இரு திசையினும் - எட்டுத்திக்குக்களிலும், முரசு - பேரிகைகள், தழக்கின் - ஆரவாரத்துடனே, எழ - மிக்குத் தோன்ற, சமரில் - போரில், உழக்கினால் அலது - கலக்கினாலல்லாமல், உணர்வனோ - (அவன்) அறிவானோ? (அறியான்),' என்று உரைத்தான் - என்று (துரியோதனன் தன்மையை) எடுத்துக் கூறினான்; (எ - று.) துரியோதனன் முறைப்படி நடவாதவ னென்பது அவனது கொடியிலேயேவிளங்கு மென்பான், அத்துரியோதனனை 'அடலரவுயர்த்தகோன்' என்றான். இவ்வாறு விசேஷ்யத்தை ஒருகருத்துப் படச்சொல்வது, கருத்துடையடைகொளியணியாம்.உழக்கினால் - 'உழ' என்பதன்பிறவினையான உழக்கு - பகுதி: உரிமை - உரிய பொருளுக்குப் பண்பாகுபெயர். நாலிருதிசை - பண்புத்தொகை; நான்கு பெருந்திக்குக்களும், நான்கு மூலைத் திக்குக்களும். வழக்கு - மூத்தவனுக்கு அரசு உரியது என்பதும், 'பன்னிரண்டுவருஷம் வனவாசமும் ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ் செய்துவந்தால் உரியபாகத்தைக் கொடுப்பேன்' என்று கூறிய சொல் தவறாமல் முன் கொடுத்ததை மீண்டும் கொடுத்தல்வேண்டு மென்பதும் என்க. (153) 94.-கண்ணன்'அரசுகொடாவிடின் பாண்டவர் போரினாற் பெறுவர்' என்றல். வாளைவாவியிலுகண்டெழவளரிளங்கமுகின் பாளைவாயளிமுரன்றெழும்பழனநாடுடையான் நாளைவாழ்வவர்க்களித்திலனெனிலெதிர்நடந்து மூளைவாயுகமுடிப்பர்வெம்போரெனமொழிந்தான். |
(இ -ள்.) (அதுகேட்டுக் கண்ணபிரான்), 'வாளை-வாளைமீன்கள், வாவியில் - நீர்நிலைகளிலே, உகண்டு எழ - துள்ளியெழும்புதலினால், வளர் இளங்கமுகின் பாளைவாய் - (அருகில்) வளர்ந்துள்ள இளமையான பாக்கு மரங்களின் பாளைகளிலுள்ள, அளி - வண்டுகள், முரன்று எழும் - ஒலித்து எழப்பெற்ற, பழனம் நாடு - கழனிகளுடைய குரு நாட்டை, உடையான் - (தனதாக) உடையவனாகிய துரியோதனன், நாளை - நாளைக்கு, வாழ்வு - செல்வவாழ்க்கையை [இராச்சியபாகத்தை], அவர்க்கு - அப்பாண்டவர்கட்கு, அளித்திலன் எனில் - கொடானானால், - (அந்தப்பாண்டவர்கள்), எதிர்நடந்து - எதிர்த்து வந்து, மூளை வாய்உக - (அத்துரியோதனாதியர்களது) மூளைகளை வாய்வழியே சிந்தும்படி, வெம் போர் - கொடிய யுத்தத்தில், முடிப்பர் - (அவர்களை) அழித்திடுவார்கள்,' என - என்று, மொழிந்தான் - கூறியருளினான்; (எ - று.) முன்னிரண்டடி, மருதநில வருணனை. கமுகம்பாளையில் வண்டு ஒலித்து எழுதற்கு வாவியின் வாளை குதித்தெழுதல் காரணமாதலால், எழ என்னுஞ் செயவெனெச்சம் - இறந்தகாலம். நாளை - எதிர்காலங் குறிப்பதோ ரிடைச்சொல்: இனி விரைவில் என்றபடி. 'அவர்க்கு' என்றதிலுள்ள அகரம் -நெஞ்சறி சுட்டு; அன்றி, பிரசித்தியைக் காட்டுவதுமாம். மூளை - ஒருவகைநிணம். (154) |