பக்கம் எண் :

174பாரதம்உத்தியோக பருவம்

களின்வரிசைகளும், சொட்டை - வளை தடிகளும், வாள் - வாளாயுதங்களும்,
பரிசை - கேடகங்களும், துகிலுடன் - விருதுக்கொடிச்சீலைகளும், கை களாசி
- கையிற் கொள்ளுதற்கு உரிய படிக்கங்களும், இவை - (என்னும்) இவற்றை,
கொண்டு - கைகளில் எடுத்துக்கொண்டு, உலாவி வரு - ஒழுங்காக நடந்து
வருகிற, கன்னி மங்கையர்கள் அனைவரும் - மணம்பெறாத இளம் பெண்கள்
பலரும், மிக்க வேதியர்கள் - மிகுந்த வேதம்வல்ல அந்தணர்களும், வல்ல
பல்கலை விதத்தில் உள்ளவர்கள் - தாம்தாம் வல்ல அநேகவகையான
சாஸ்திரங்களின் பகுப்புக்களில் தங்கியுள்ளவர்களும், யாவரும் - மற்றும்
எல்லோரும், தக்க தம்பியரும் - (தனக்குத்) தகுந்த தம்பிமார்களும், வந்து
சூழ- வந்து தன்னைச் சுற்றிலுமிருக்க, உயர்தரணி மேல் நிருபர்தம் பிரான்-
சிறந்தபூமியிலுள்ள அரசர்களுக்கெல்லாந் தலைவனான துரியோதனன்,- (எ -
று.)- 'வாசவன்கொலென வைகினான்' என 103-ஆம் கவியோடு இயையும்.

    ஆலவட்டம் - கால்செய்வட்ட மென்பர்; வட்டவடிவமான
ஒருவகைப்பெருவிசிறி.  பரிசை - தன்மேற்பிரயோகிக்கப்படும் ஆயுதங்களைத்
தடுத்தற்குப் பிடிக்கும் ஒருகருவி.  மங்களகரமாகச் சில வஸ்திரத்தைச்
சுருக்கிப்பிடிக்கும் மரபும் உண்டு.  களாசி - தாம்பூலம் முதலியவை ஏந்தும்
ஒரு வகைப் பாத்திரம்.  கைக்களாசி - சிறுகளாசியுமாம்.  தம்பிமார்களும்
தமையன்போலவே கொடுமையிற் சிறந்தவராதலால், 'தக்க தம்பியர்'
என்றது.                                                (161)

102.நிரைகதிர்க்கனக நீள்சுவர்ப்பவளவுத்திரத்திடைநிரைத்த
                                   வொண்,
பருமணிக்கிரணபற்பராக வயிரத் துலாமிசைபரப்பிவெண்,
டரளவர்க்க வயிடூரியப்புதிய கோமளப் பலகை
                                  தைத்துமா,
மரகதத்தினொருகோடி தூணிரை யமைத்தமண்டப
                                 மருங்கரோ.

     (இ -ள்.) நிரை - தொகுதியான, கதிர் - ஒளியையுடைய, கனகம் -
பொன்னினாற்செய்யப்பட்ட, நீள் சுவர் - நீண்ட சுவர்களின் மேல், பவளம்
உத்திரத்து இடை - பவழத்தாற்செய்யப்பட்ட உத்திரங்களுக்கு
இடையிடையிலே, நிரைத்த - ஒழுங்காக அமைக்கப்பட்ட, ஒள் பரு மணி
கிரணம் பற்பராகம் வயிரம் துலாம் - ஒளியுள்ள பருத்த மாணிக்கங்களாலும்
ஒளியையுடைய பதுமராக மென்னும் இரத்தினங்களாலும் வயிரக்கற்களாலும்
அமைந்த வரிச்சல்களை, மிசை பரப்பி - மேலே பரப்பவைத்து, வெள்தரளம்
வர்க்கம் - வெண்மையான முத்துக்களின் திரள்களாலும், வயிடூரியம் -
வைடூரியமென்னும் இரத்தினங்களாலும் செய்யப்பட்ட, புதிய கோமளம்,
பலகை- புதுமையான அழகிய பலகைகளை, தைத்து - பதித்து, மா
மரகதத்தின் -சிறந்த மரகத ரத்தினத்தாலாகிய, ஒரு கோடி தூண் -
ஒருகோடி தூண்களை,நிரை அமைத்த - வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள,
மண்டபம் மருங்கு - சபாமண்டபத்தினிடத்திலே,- (எ - று.) - 'வைகினான்'
என அடுத்தகவியோடுஇயையும்.  அரோ - ஈற்றசை.

    இங்ஙனம் பொன்னாலும் நவரத்தினங்களாலுமே அமைந்துள்ளது
மண்டபமெனச் செல்வச் சிறப்பை வருணித்ததனால்,