பக்கம் எண் :

186பாரதம்உத்தியோக பருவம்

தம்பிமார்இருவருக்கு, இந்த வாழ்வும் அரசும் - இந்தக் குருநாட்டரரது
சாட்சியையும் அதற்கு உரிய செல்வத்தையும், கொடுத்தவனும் கொடுத்த
அரசனும், நின்குலத்து ஒருவன் இங்கு உளான் - உனது குலத்திற் பிறந்த
ஒருத்தன் இவ்விடத்திலே (இப்பொழுது) இருக்கிறான்;(அங்ஙனமிருக்க), உயர்
முறைமையால் - (உன்னினும் பிராயத்தில்) மூத்ததன்மையால், மா நிலம்
அனைத்தினுக்கும் முந்த உரிய - பெரிய பூமி முழுவதுக்கும் பழைமையாகப்
பாத்தியதையையுடைய, அரசருக்கு - யுதிட்டிரன் முதலியோர்க்கு, நீ -, ஐந்து
மாநகரும் கொடாது ஒழியின் - ஐந்து பெரிய ஊர்களையாயினுங் கொடாமல்
விடுவாயானால், உனது அரசு இயல் - உனது அரசாட்சியின் இயல்பு,
என்னதுஆகும் - என்ன நீதியுடையதாம்? [நீதி சிறிதுமில்லாத தென்றபடி];
(எ - று.)

     தந்தை- சந்தனு, இளையதாய் - பரிமளகந்தி.  இருதம்பியர்
சித்திராங்கதனும், விசித்திரவீரியனும்.  கொடுத்தவன் - வீடுமன் முதல்
மனைவியான கங்கை வீடுமனைப் பெற்றுச் சந்தனுவைவிட்டு நீங்கினபின்,
சந்தனு, செம்படவன் வளர்த்த மகளாகிய பரிமளகந்தியென்பவளைக் கண்டு
காமுற்று மணம்பேச, அவள் தந்தை 'மனுநீதி முறைப்படி மூத்த மனைவியின்
குமாரன் அரசாள, என் மகளுக்குப் பிறக்கும்பிள்ளை அரசின்றிக்
கீழ்மைப்பட்டு நிற்பானாதலால், நான் உனக்கு மகளைக் கொடேன்'
என்றுசொல்ல, அதனை யறிந்த பீஷ்மன், தந்தைக்கு மணஞ்
செய்வித்தற்பொருட்டு, தான் மணஞ்செய்து கொள்வதில்லையென்றும்,
இராச்சியத்தைத் தன் தம்பிக்கே கொடுப்பேனென்றும் தேவர்கள்
முன்னிலையில்பயங்கரமான சபதஞ்செய்து, அம்மகளைத் தந்தைக்கு மணஞ்
செய்வித்து,பின்பு அவளுக்குப் பிறந்த சித்திராங்கதன், விசித்திரவீரியன்
என்பவர்க்கேமுன்னையவாக்குப்படி அரசாட்சியைக் கொடுத்தானென
வரலாறு அறிக.  'கங்கைதன் வயிற்றிற்றோன்றித்தாதைதன்காதல் தீர்ப்பான்,
எங்களுக்கரசும் வாழ்வு மிரு நிலமுழுதுந் தந்து"எனமேற்கன்னபருவத்தில்
துரியோதனன் கூறுமாறுங் காண்க.                           (177)

118.ஒருகுலத்தினி லிரண்டுமன்னவ ருடன்பிறந்துரிமை
                              யெய்தினால்,
இருகுலத்தவரு மொக்கவாழ்வுறுதலெக்குலத்தினு
                              மியற்கையே,
பொருகுலக்களிறுவளர்திசைக்கண்மிகு புகழ்பரப்பி
                          யெழுபுவிபெறுங்,
குருகுலத்தவரியற்கை நன்றென மொழிந்தனன்
                        கரியகோவலன்.

     (இ -ள்.) ஒரு குலத்தினில் - ஒரே மரபில், இரண்டு மன்னவர் -
இரண்டு அரசர், உடன் பிறந்து - ஒக்கத்தோன்றி, உரிமை எய்தினால் -
அரசாட்சியுரிமையையடைந்தால், இரு குலத்தவரும் - இரண்டு திறத்தாரும்,
ஒக்க வாழ்வு உறுதல் - ஒருநிகராக வாழ்வையடைதல், எ குலத்தினும் -
எல்லாக் குலங்களிலும், இயற்கையே - (நிகழும்) இயல்பேயாம்; பொரு -
போர்செய்யுந் தன்மையுள்ள, குலம் - சிறந்த, களிறு - யானைகள்
[திக்கஜங்கள்],வளர் - வளர்ந்து நிற்கப் பெற்ற, திசைக்கண் - எட்டுத்
திக்குக்களிலும்,மிகுபுகழ் பரப்பி - மிகுந்த கீர்த்தியைப் பரவச்செய்து, எழு
புவிபெறும் - ஏழுதீவு