பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 187

களாகவுள்ளபூமி முழுவதையும் (தம்மதாகப்) பெற்ற, குருகுலத்தவர் -
குருவம்சத்திற் பிறந்த அரசரது, இயற்கை - சுபாவம், நன்று - மிக
நன்றாகவுள்ளது!  என - என்று, மொழிந்தனன் - கூறினான்; (யாவனெனில்),
கரிய கோவலன் - கருநிறமுடைய கண்ணபிரான்;

     நன்று- சிறிதும் நன்றன்று என்றபடி; பிறகுறிப்பு; எதிர்மறையிலக்கணை.
திசைக்களிறு - ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சநம்,
புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் எனஎட்டு.  அவை - கிழக்குமுதலிய
திக்குக்களில் முறையே கீழிருந்து பூமியைத் தாங்குவன; இவற்றின் பெண்
யானைகள் - அப்பிரமு, கபிலை, பிங்கலை, அநுபமை, தாமிரவர்ணி,
சுப்ரதந்தீ,அங்கனை, அஞ்சநாவதி எனப்படும்.               (178)

119.-துரியோதனன்கோபத்துடன் மறுத்துக் கூறுதல்.

பேரராவணைதுறந்தமாயனிவைபேசவன்பினொடுபின்னையுஞ்
சீரராவினை யுயர்த்தகோவும்விழிதீயெனும்படி செயிர்த்துளே
போரராநிருபன்மணிநெடுஞ்சுடிகையாயிரங்கொடுபொறுத்தபார்
வீரரானவரதல்லவோவுரிமைவேண்டுமோ வெனவிளம்பினான்.

     (இ -ள்.) பேர் - பெரிய, அரா - ஆதிசேஷனாகிய, அணை -
சயனத்தை; துறந்த - விட்டு இங்கு வந்து அவதரித்த, மாயன் - கண்ணன்,
இவைபேச - இவ்வார்த்தைகளைச் சொல்ல,- சீர் அராவினை உயர்த்த
கோவும்- சிறந்த பாம்புக்கொடியை உயர எடுத்த துரியோதன ராசனும்,
வன்பினொடு -கொடுமையுடனே, விழி தீ எனும்படி உளே செயிர்த்து -
கண்கள்நெருப்பென்னும்படி மிகச்சிவக்குமாறு மனத்திலே கோபித்து, 'போர்
அராநிருபன் - போர் செய்யவல்ல பாம்புகளுக்குத் தலைவனாகிய
ஆதிசேஷன்,மணி நெடு ஆயிரம் சுடிகை கொடு - மாணிக்கத்தையுடைய
நீண்டஆயிரந்தலைகளால், பொறுத்த - சுமக்கப்பெற்ற, பார் - பூமி, வீரர்
ஆனவரதுஅல்லவோ - வீரர்களுடைய பொருளன்றோ? உரிமை
வேண்டுமோ -(அதனை அடைவதற்குப்) பாத்தியதை தகுதியோ?' என -
என்று,பின்னையும் விளம்பினான் - மறுபடியும் கூறினான்; (எ - று.)

     நீசொல்லுகிறபடி பாண்டவர்கள் உரியவராயினும், நாங்கள்
வீரர்களாதலால் நாங்களே ஆளத்தக்கவ ரென்பதாம்.  பேரரா - பாம்புகளுட்
பெரிய பாம்பு; தலைமை நாகம்.  வன்பினொடு பேச என்றும் இயைக்கலாம்.
அன்பினொடு எனப்பிரித்து, பாண்டவர் பக்கல் அன்புடனே சொல்ல
என்றுமாம்.  கண்கள் மிகச்சிவத்தல் - பெருங்கோபக்குறி.  மனிதரைக்
காப்பவனென்னும் பொருளை யுணர்த்தும் நிருபனென்ற பெயர் - இங்கே
காரணங்கருதாமல், அரசனென்ற மாத்திரமாய் நின்றது.  சுடிகை - உச்சிக்
கொண்டை.

120.-கண்ணன் இறுதியாகத்துரியோதனனைப் போர்
வேண்டுதல்.

பொய்வளர்ந்த மொழிமன்னன்மற்றிவை புகன்ற பின்பு புயவலியினால்
ஐவர்தங்களரசுங்கொடாமலடலாண்மைகொண்டெதிரடர்த்தியேன்