பக்கம் எண் :

190பாரதம்உத்தியோக பருவம்

                                            வோ,
துளிவரும்புனல் பரிந்தருந்தியிடுசோறுதின்றுயிர் சுமந்துதோள்
இளிவரும்படியிருந்த பாவியருமின்று மானநிலையுணர்வரோ.

     (இ -ள்.) ஐவருக்கும் உரியாளை - பாண்டவரைந்து பேருக்கும் உரிய
மனைவியான திரௌபதியை, மன் அவையில் - இராச சபையிலே,
(துச்சாதனனால்), அளிவரும் குழல்பிடித்து - வண்டுகள்மொய்க்கப்பெற்ற
கூந்தலைப் பிடித்து இழுத்து வந்து, நான் -, எளி வரும் துகில் உரிந்தபோது
-அவமானமுண்டாதற்குக் காரணமான வஸ்திராபஹரணத்தைச் செய்த
காலத்தில்,அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ - (யாதொன்றுஞ்
செய்யமுடியாமல்)பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களன்றோ;
துளிவரும் புனல் பரிந்துஅருந்தி - (காட்டில்) சிறுதுளிகளாக வருகின்ற
[கிடைத்தற்கரிய] நீரைவருத்தப்பட்டு (அல்லது விரும்பி)க் குடித்து, இடு
சோறு தின்று -(யாவராயினும்) இட்ட சோற்றைத் தாம் உண்டு, உயிர்
சுமந்து - அரிதின்உயிரைத்தாங்கி, தோள் இளி வரும்படி இருந்த - புயங்கள்
இழிவடையும்படிபிழைத்திருந்த, பாவியரும் - பாவிகளான
அப்பாண்டவர்களும், இன்று -இப்பொழுது, மானம் நிலை உணர்வரோ -
மானத்தின் நிலைமையைஅறிவார்களோ? [அறியாரென்றபடி]; (எ - று.)

    அருந்துகில் எளிவு உரிந்தபோது எனப்பிரித்து இயைத்து, பிறரால்
களைதற்கு அருமையான ஆடையை யான் எளிதில் கவர்வித்தபொழுது
என்றுஉரைப்பாருமுளர்.  துரியோதனனது அக்கிரமத்துக்குத் துச்சாதனன்
கைபோலஅபேதமாகத் துணை நின்றனனாதலால், 'நான் அளிவருங்குழல்
பிடித்துத்துகிலுரிந்தபோது' என்றது.  துளிவரும்புனல் பரிந்தருந்தி என்றது,
கடுங்காட்டில் வேண்டியபொழுது நீர் கிடைத்தலரிதாதலின்; அதனைக் கீழ்
நச்சுப்பொய்கைச் சருக்கத்து வரலாற்றாலுமறிக.  இடுசோறு என்றது வனவாச
காலத்தில் சூரியன் கொடுத்த அக்ஷயபாண்டத்தாலும், அஜ்ஞாத வாசத்தில்
விராடராசனாலுங் கிடைத்த உணவை.  'உண்டு' என்பதற்குப் பதிலாக
'தின்று'என வினை மாற்றிக் கூறியது, இகழ்ச்சி விளக்கும்.  இளிவரும்,
இளிவா -பகுதி; அது - இழி வா என்ற இரண்டு பகுதிகள் ஒருசொல்
தன்மைப்பட்டுப்போலிபெற்று நின்றது.  இராச்சிய முழுவதையும் இரண்டற
ஆளும்பாக்கியசாலிகளான எங்கள்போலன்றி, பாண்டவர்கள் இருந்த
இராச்சியத்தையும்இழந்து அலைந்து வருந்துதற்கேற்ற
தீவினையுடையரென்பான்,பாவியரென்றான்.                   (183)

124.அன்னையானவரு மிருவராமுதலளித்த தந்தையர்களை வராம்,
பின்னையாசைகொடு குருகுலத்துரிமைபெறுவரா மொரு
                                      பிறப்பிலோர்,
மின்னையாமிவர்களைவரும் பரிவினொடுதனித்தனி
                                      விரும்புவார்,
என்னையாமவரொடொருகுலத் தரசனென்பதம்மவிவை
                                    யென்கொலாம்.

     (இ -ள்.) (இப்பாண்டவர்க்கு), அன்னை ஆனவரும் இருவர் ஆம் -
தாயானவர்களும் இரண்டுபேராம்; முதல் அளித்த தந்தையர்