பக்கம் எண் :

196பாரதம்உத்தியோக பருவம்

                                      வந்துதன்,
னில்லிரண்டுதினம்வைகுதற்குலகிலெண்ணிலாத
                                தவமெய்தினான்.

     (இ -ள்.) 'சொல் இரண்டு புகலேன் - (யான்) இரண்டு வார்த்தை
சொல்லமாட்டேன்; இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் - இனிமேல்
போரில் (எவர்பக்கத்தும்) நின்று கொடிய அம்பைத் தொடுக்கமாட்டேன்,'
எனா - என்று சொல்லி, வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை - (உலகத்திற்
பிரசித்தமான சிவதநுசு விஷ்ணு தநுசு என்ற) இரண்டு விற்களுட் சிறந்த
(விஷ்ணுவினதாகிய தனது) வில்லை, வேறு இரண்டுபட வெட்டினான் -
தனித்தனி இரண்டுதுண்டாம்படி வெட்டியெறிந்துவிட்டான்; (யாவனெனில்) -
மல் இரண்டினையும் - (சாணூரன் முஷ்டிகன் என்னும்) இரண்டு
மல்லர்களையும், இருவர் ஆகி - (தானும் பலராமனுமாக) இரண்டு
பேராயிருந்து, முன் மலைந்த - முன்னே [இளம்பிராயத்தில்] போர் செய்து
அழித்த, காளம் முகில் - கரியமேகம்போன்ற ஸ்ரீ கிருஷ்ணபகவான், தன்
இல்- தனது மாளிகையிலே, வந்து இரண்டுதினம் வைகுதற்கு - எழுந்தருளி
இரண்டு நாள் தங்கியருளுதற்கு, உலகில் - இவ்வுலகத்திலே, எண் இலாத
தவம்எய்தினான்-அளவில்லாத தவப்பேற்றைப் பெற்றவனான விதுரன்;
(எ - று.)

     வில்இரண்டு இன்னவையென்பது, அடுத்த கவியில் "அச்சுதன்
சந்தவில்லுமரன் வில்லும்" என்றதனாலும் அறியப்படும்.  இவ்விரண்டு
விற்களின் வரலாற்றையுஞ் சிறப்பையும் "ஒருகால்வரு கதிராமென
வொளிகால்வன வுலையா, வருகார்தவழ் வடமேருவின் வலிசால்வன வையம்,
அருகாவினை புரிவானுள னவனாலமைவனதாம், இருகார்முக முளயாவையு
மேலாதன மேனாள்", "ஒன்றினையுமையாள்கேள்வ னுவந்தனன்
மற்றையொன்றை, நின்றுலகளந்த நேமி நெடியமால் நெறியிற் கொண்டான்"
எனக் கம்பராமாயணத்துப் பரசுராமப்படலத்துக் கூறியதனாலும் உணர்க. 
இனி,வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை என்பதற்கு - தனது
விற்களிரண்டுட்சிறந்ததொரு வில்லையென்றும், பிரசித்தமான சிவவில்,
விஷ்ணு வில் என்றஇரண்டினுஞ் சிறந்த தனதுவில்லை யென்றும்
பொருள்படுமாயினும், மேல் -141-ஆங் கவியில் "இருசிலையுண்டென்றிந்த
விருநிலத்தியம்பும் வில்லின்,ஒருசிலை முறித்த சீற்றம்" எனக் கண்ணன்
கூறியருளுதலை நோக்கி, அவற்றையொழித்து, பொருத்தமான பொருள்
கொள்ளப்பட்டது.  சிவன்வில்திருமால்வில் என்ற அவ்விரண்டனுள்,
பலமுறை முறிந்துபோனசிவன்வில்லினும் என்றும் முறியாத திருமால்வில்
சிறந்ததாதல் அறிக; அதனை"ஆனம்முடையுமையண்ணலை
யந்நாளுறுசிலைதான், ஊனம்முளது","செருமலைகின்ற போழ்தில்
திரிபுரமெரித்த தேவன், வரிசிலையிற்றது""ஊன்வில்லிறுத்த மொய்ம்பு"
"வேதியா விறுவதேயன்றி வெண்மதிப், பாதியான்பிடித்தவில்
பற்றப்போதுமோ" என்ற கம்பர்வாக்குக் கொண்டும் தெளிக. "வெற்றி,
காட்டிய கரியமாலும் கார்முகந்தன்னைப் பாரில், ஈட்டிய தவத்தின்
மிக்க இரிசிகற்கீந்துபோனான்", "இரிசிகனெந்தைக்கீய வெந்தையுமெனக்குத்