பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 197

தந்த,வரிசிலையிதுநீ நொய்தின்வாங்குதி" எனக் கம்பராமாயணத்துக் கூறியபடி
பரம்பரையாக இராமபிரானிடம் வந்துசேர்ந்த திருமால்வில், பின்பு
வழிமுறையாக விதுரனளவும் வந்து சேர்ந்திட்டதுபோலும்.

     கம்சசபையிற் கிருஷ்ணபலராமர் செல்லுகையில், தம்மைக் கொல்லும்படி
அவனாலேவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய பெருமல்லர்கள் சிலர்வந்து
எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய, அவர்களையெல்லாம்
இந்தயாதவவீரரிருவரும் மற்போரினாலேயே கொன்றுவென்றிட்டனரென்பது
கதை.  ஆவேசாவதாரமான பலராமனினும் அம்சாவதாரமான கண்ணன்
பிரதானனாதலால், அவனையே இங்குத் தலைமையாக எடுத்துக் கூறியது.

     சொல்இரண்டு புகலேன் என்றது, சுருக்கமாகவன்றிப் பல வார்த்தை
கூறேனென்றும், இன்று சொன்ன சொல் என்றுந் தவறே னென்றுங்
கருத்துப்படும்.  பின் இரண்டடிகள் - பரமபாகவதரான விதுரரது பாக்கிய
விசேஷத்தை விளக்கின.  மிகுந்ததவஞ் செய்திருந்தாலொழிய இங்ஙனங்
கண்ணன் அருள்செய்யப் பெரும்பேறு கிடைக்காதாதலால், 'எண்ணிலாததவ
மெய்தினான்' என்றார். இனி, 'வில்லிரண்டனினுயர்ந்தவில்'
எனப்பாடங்கொண்டு, பிரசித்தமான இரண்டு விற்கள்போலச் சிறந்த
வில்லென்றுஉரைத்தல்,  அடுத்த கவியில் "அச்சுதன் சந்தவில்லு
மரன்வில்லுமொப்பதொரு தாமவில்" என்பதனோடும், பாரதவெண்பாவில்
"கண்ணுதலான்றன் சிலைக்குங் காகுத்தன்றன் சிலைக்கு, மெண்ணுங்
கானேராமெழிற்சிலை" என்றதனோடும், இயையும்.  மேல் 141-ஆங் கவியில்
"வில்லின்" என்பதற்கு - இதற்கேற்ப, விற்கள் போலவெனக் கொள்ளலாம். (191)

132.-விதுரன் சபையைவிட்டுச்சென்றபிறகு அங்குள்ள அரசர்
வருந்துதல்.

அந்தவில்லினைமுறித்தவில்லிதனதாலயம்புகுதவச்சுதன்
சந்தவில்லுமரன்வில்லு மொப்பதொரு தாமவில்லினை முறிப்பதே
முந்தவில்லியரிலெண்ணும்வில்லுடையவிசயன்வந்தமரின்முடுகினால்
எந்தவில்லியெதிர்நிற்கும்வில்லியினியென்றுகாவலரிரங்கினார்.

     (இ -ள்.) அந்த வில்லினை முறித்த - (அங்ஙனம்) அவ்வில்லை
முறித்துப் போகட்ட, வில்லி - வில்வித்தையில்வல்ல விதுரன், தனது ஆலயம்
புகுத - தன்னுடைய திருமாளிகையைச் சென்றடைய,- காவலர் -
(அச்சபையிலுள்ள) அரசர்கள் பலரும், 'அச்சுதன் சந்தம் வில்லும் -
திருமாலினது அழகிய வில்லையும், அரன்வில்லும் - சிவபிரானது வில்லையும்,
ஒப்பது - ஒத்திருப்பதாகிய, ஒரு தாமம் வில்லினை - ஒளியையுடையதொரு
வில்லை, முறிப்பதே - (இவன்) முறித்தெறிந்துவிடுவதா? வில்லியரில் முந்த
எண்ணும் - வில்வீரர்களுள் முதன்மையாக (யாவராலும்) மதிக்கப்படுகின்ற,
வில்உடைய விசயன் - (சிறந்த காண்டீவமென்னுந்) தனுசையுடைய