பக்கம் எண் :

198பாரதம்உத்தியோக பருவம்

அருச்சுனன்,அமரின் வந்து முடுகினால் - போரில் வந்து பராக்கிரமித்தால்,
இனி எதிர் நிற்கும் வில்லி எந்த வில்லி - (அவனுக்கு) இனிமேல் எதிரில்
நிற்கும் வில் வீரன் எந்த வில்லாளி? (எவருமில்லை யென்றபடி)', என்று',
இரங்கினார் - மனமிரங்கினார்கள்; (எ - று.)

    ஏகாரம் - துரியோதனனது அநர்த்தத்துக்குக் காரணத்தை நோக்கின
கழிவிரக்கம்.  எனவே, அருச்சுனனைத் தகுதியாக எதிர்க்க வல்லவன்
இப்பக்கத்தில் விதுரனே யென்பதாம்.  பகவான் எழுந்தருளப்பெற்றதனால்,
ஆலயமென்றது;  "மார்வமென்பதோர் கோயிலமைத்து" என்றாற்போல.
அச்சுதன் - அச்யுதன், (தன்னைச் சரணமடைந்தவர்களை)
நழுவவிடாதவனென்றும், அழிவில்லாதவனென்றும் பொருள்.
தலைமைநோக்கி,அச்சுதன் சந்தவில்லை முதலிற் கூறினது.  முன்கவியில்
"வில்லிரண்டினுமுயர்ந்த வில்" என்றதனோடு இக்கவியில், "அச்சுதன்
சந்தவில்லு மரன்வில்லுமொப்பது" என்றது மாறுகொளக்கூற லாகாது;
முன்னது- கவிக்கூற்றும், பின்னது - அங்குள்ள அரசர் கூற்று மாதலால்;
இனிஅக்குற்றத்திற்குச் சிறிதும் இடமின்றி, 'ஒப்பதரு' எனப்
பாடங்கொள்ளினும்அமையும்.  புகுந்தது - சாரியை.  அரன் - (உகாந்த
காலத்தில்உலகமனைத்தையும்) அழிக்குங் கடவுள்; (தன்னையடைந்தவர்களது
துன்பங்களை) ஒழிப்பவனென்றும் பொருள் கூறுவர்.          (192)

133.-வீடுமன் துரியோதனனைக்கண்டித்தல்.

காரனைத்தும்விடு தாரையன்னபல கணைகளேவியமர்கருதும் வில்,
வீரனைப்பழுதுரைத்தநீ பகையையெங்ஙனே தனிகொல் வெல்லுவாய்,
பாரனைத்துமினியைவராளும்வகை பண்ணுவித்தனையழிந்ததுன்,
பேரனைத்துமெனவுள்ளழிந்து சிலபேசினானுயர் பிதாமகன்.

     (இ -ள்.) (பின்பு), உயர் பிதாமகன் - (கௌரவ பாண்டவர்க்குச்) சிறந்த
(பெரிய பாட்டனான) வீடுமன்,- உள் அழிந்து - (நடந்த செய்தியை நோக்கி)
மனஞ் சிதைந்து,- 'கார் அனைத்தும் விடுதாரை அன்ன - மேகங்களெல்லாம்
பெய்கின்ற மழைநீர்த்துளிகளையொத்த, பல கணைகள் - அநேகபாணங்களை,
ஏவி - செலுத்தி, அமர் கருதும் - போர்செய்தலையே விரும்புகிற,
வில்வீரனை- வில்லில் வல்ல வீரனான விதுரனை, பழுது உரைத்த -
நிந்தனைபேசிய,  நீ -பகையை - பகைவர்களை, எங்ஙனே - எவ்வாறு,
வெல்லுவாய் -சயித்திடுவாய்? தனிகொல் - தனியாகவோ? இனி -, பார்
அனைத்தும் -பூமிமுழுவதையும், ஐவர் ஆளும் வகை - பாண்டவர்களே
அரசாளும்படி,பண்ணுவித்தனை - (நீயே) செய்வித்துவிட்டாய்; உன் பேர்
அனைத்தும்அழிந்தது - உனது புகழ் முழுவதும் அழிந்து விட்டது,' என -
என்று, சிலபேசினான் - சில வார்த்தைகளைக் கூறினான்; (எ - று.)

    பிதாமஹன் - தந்தைக்குத்தந்தை.  இக்கவியால், வீடுமன் துரோணன்
கிருபன் அசுவத்தாமன் கர்ணன் முதலிய எல்லா வீரரினும் விதுரன்
சிறந்தவனென்பதுவிளங்கும்; மேல் கன்னபருவத்தும்,