வீடுமன்துரோணன் என்பவர்க்குமுன் விதுரனைக் கூறுமாறு காண்க. முன்னேஅழிந்த புகழ்போக மற்றதும் இப்பொழுது அழிந்து விட்டதென்ன, 'உன்பேரனைத்து மழிந்தது' என்றார். (193) 134.-இதுவும் அடுத்தகவியும் -துரியோதனன் வீடுமனை நோக்கி விதுரனைப்பற்றி அலட்சியமாகக் கூறியவை. பிதாமகன்பரிவுடன் முனிந்துசிலபேச நாசமுறுபேரனாம், விதாரமொய்ம்பனும் விதுரனல்லது வில்வல்லவீரர் பிறரில்லையோ, வுதாரசீலனுயரங்கர்கோன்வரிவிலொன்றுமே யமையு முற்றெழும், பதாதியோடமரிலைவரும்படமலைந்திடப் பரணிபாடவே. |
இதுமுதல் நான்குகவிகள் - ஒரு தொடர். (இ -ள்.) பிதாமகன் - வீடுமன், பரிவுடன் - வருத்தத்துடனே [அல்லது அன்புடனே], முனிந்து - கோபித்து, சில பேச - சிலவார்த்தைகளைச் சொல்ல, நாசம் உறு பேரன் ஆம் - அழிவையடைதற்குரிய பௌத்திரனாகிய, விதாரம் மொய்ம்பனும் - போரில்வல்ல துரியோதனனும், (கூறுவான்); - விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ - விதுரனேயன்றி வில் வித்தையில் திறமையுள்ள வீரர் மற்றவர் எவருமில்லையோ? உதார சீலன் - (லோபஞ்சிறிதுமில்லாத) தானத்தையே ஒழுக்கமாகக் கொண்டவனாகிய, உயர் அங்கர்கோன் - சிறந்த அங்கதேசத்திலுள்ளார்க்குத் தலைவனான கர்ணனது, வரிவில் ஒன்றுமே - கட்டமைந்த வில்லொன்று தானே, அமரில் - போரில், ஐவரும் - பாண்டவர் ஐந்துபேரும், உற்று எழும் பதாதியோடு - மிக்கு எழுகின்ற சேனைகளுடனே, பட - அழியவும், பரணி பாட - (புலவர்கள்) பரணியென்னும் பிரபந்தத்தைப் பாடப் பெறவும், மலைந்திட-போர்செய்தற்கு, அமையும்-போதும்; (எ - று.)- 'விதாரமொய்ம்பனும்' என்றது, மேல்136ஆங் கவியில் 'என்றுகூற' என்பதனோடு இயையும். பரணி - தொண்ணூற்றாறு பிரபந்தவகையுள் ஒன்று; அது போர்முகத்து ஆயிரங்களிற்றியானையைக்கொன்ற வீரனைத் தலைமகனாகக்கொண்டு கடவுள்வாழ்த்தும் வாயில்கடைதிறப்பும் பாலைநிலமும் காளிகோயிலும் பேய்களோடுகாளியும் காளியோடு பேய்களும் சொல்லத் தான்சொல்லக் கருதியதலைவன்சீர்த்தி விளங்கலும் அவன் வழியாகப் புறப்பொருள்தோன்ற வெம்போர் வழங்க விரும்பலும் என்னும் இவற்றையெல்லாம் இருசீரடி முச்சீரடியொழித்து மற்றைய அடியாக ஈரடிப்பஃறாழிசையாற் பாடுவது. கலிங்கத்துப் பரணி முதலியன காண்க. பாட்டன் பெயரைப் பௌத்திரனுக்கு இடுவது பெரும்பாலும் உலகமரபாதலால்,அம்மகன்மகனுக்கு, 'பேரன்' என்பது காரணப்பெயர். நாசமுறு பேரன் -எதிர்கால வினைத்தொகை: அழியும் பெயரையுடையானென்றுமாம். கீழ்க்கவியில் 'பேர்' என்றதற்கும் இவ்வாறே, சிவபிரானது நெற்றிக்கண்ணின்நெருப்புக்கு இரையாய் |