லும்முதலியன. வெண்மை - இனம் விலக்குதற்கு வந்ததல்லாத இயற்கையடைமொழி. வெண்ணிறமுடைமைபற்றி, வெள்ளியென்று பெயர். அளித்து உவந்த என்றும் பிரித்து உரைக்கலாம். விசையன் - இடைப்போலி; கொல் - அசை. (198) 139.-கர்ணன் வீடுமனைநோக்கிநிஷ்டூரமாகச் சில கூறுதல். அவன்மொழிந்தமொழிதன்செவிப்படலு மருகிருந்தமுதருந்துநீ, யிவனுடன்சிலர்பகைக்கின் மற்றவர்தமிசையுமாண்மையுமியம்புவாய், புவனமொன்றுபடவரினுமென்றனொடு பொருவராயி னெதிர்பொர விடாய், சிவனுமென்கணையையஞ்சுமென்று நனிசீறினானிரவிசிறுவனே. |
(இ -ள்.) அவன் மொழிந்த மொழி - (இங்ஙனம்) அவ்வீடுமன் சொன்னவார்த்தை, தன் செவி படலும் - தனதுகாதில் நுழைந்த வளவிலே [அதனைக்கேட்டமாத்திரத்தில் என்றபடி],- இரவி சிறுவன் - சூரிய புத்திரனான கர்ணன்,-(அவ்வீடுமனை நோக்கி), 'அருகு இருந்து அமுது அருந்தும்நீ - (எப்பொழுதும்இத்துரியோதனனது) சமீபத்திலே யிருந்து (அவனது) அன்னத்தையுண்ணுகிற நீ,(எப்போதும்), இவனுடன் சிலர் பகைக்கில் - இத்துரியோதனனுடன் வேறுயாரேனும் சிலர் பகைமைகொண்டால், (அப்பொழுது), மற்று அவர் தம்இசையும் ஆண்மையும் இயம்புவாய் - எதிரிகளான அவர்களது கீர்த்தியையும்பராக்கிரமத்தையுமே எடுத்துக்கூறும் இயல்புடையாய்; புவனம் ஒன்றுபடவரினும்- எல்லாவுலகத்தாரும் ஒருமிக்கத் திரண்டு வந்தாலும், என்தனொடு பொருவர் ஆயின் - என்னுடனே போர் செய்யவல்லவரானால், எதிர் பொர விடாய் - எதிர்த்துப் போர் செய்ய விடுவாய்; சிவனும் என்கணையை அஞ்சும் - சிவபிரானும் எனது அம்புக்கு அஞ்சுவான்,' என்று - என்று சொல்லி, நனி சீறினான் - மிகுதியாகக் கோபித்தான்; (எ - று.)
சிவன்என்ற சொல்லுக்கு - (யாவர்க்கும்) மங்களத்தைச் செய்பவனென்றுபொருள்; சிவன - சுபம். உம் - உயர்வுசிறப்பு; அது - அப்பிரானதுவெகுண்டு உலகமழிக்கும் ஆற்றலையும், முன் அருச்சுனன் வில் நாணற்றுத்திகைக்கும்படி எதிர்த்துப் போர்செய்த திறமையையும் குறிக்கும். இவன்இங்ஙனங் கூறினது பேதைமை யென்பார், 'சிறுவன்' என்றார். சிவனும் என்கணையை அஞ்சும் - "அச்சக் கிளவிக்கு ஐந்து மிரண்டும், எச்சமிலவே பொருள் வயினான' என்பதனால், இரண்டாம் வேற்றுமை விரியாகக்கூறினான். (199) 140.- யாவரும் தம்தம்இருப்பிடங்கட்குச் செல்லுதல். இரவிமைந்தனொடுகங்கைமைந்தனெதிர் வாய்மையொன்றையு மிசைத்திலன், பொரவறிந்திடுதுமன்றுவெஞ்சமரிலென்றெழுந்து தனி போயினான், அரவவெங்கொடியுயர்த்தகோவுமிகலரசருக்கு விடைநல்கினான், விரவுபைந்துளபமாலையான்விதுரன்மனையிலுற்றது விளம்புவாம். |
|