(இ -ள்.) (பின்பு), கங்கை மைந்தன் - வீடுமன், இரவி மைந்தனொடு- கர்ணனுடனே, எதிர் வாய்மை ஒன்றையும் - பிரதியான வார்த்தையொன்றையும்,இசைத்திலன் - கூறாதவனாய், 'அன்று - (போர் நடக்கும்) அக்காலத்தில்,வெம் சமரில் - கொடிய போர்க்களத்தில், பொர - போர் செய்கையில்,அறிந்திடுதும் - (இவனது ஆண்மையை நேரில்) அறிவோம்,' என்று - என்றுகருதி, எழுந்து தனி போயினான் - (அச்சபையைவிட்டு) எழுந்து தனியேசென்றான்; அரவம் வெம் கொடி உயர்த்த கோவும் - பாம்பின்வடிவமெழுதியகொடிய துவசத்தை உயர எடுத்த துரியோதனராஜனும், இகல் அரசருக்கு -வலிமையையுடைய அரசர்களுக்கெல்லாம், விடை நல்கினான் - (சபையினின்று)செலவு கொடுத்து அனுப்பினான்; (இதுநிற்க), விரவு பை துளபம் மாலையான் -பொருந்தின பசிய திருத்துழாய் மாலையையுடைய கண்ணபிரானது, விதுரன்மனையில் உற்றது - விதுரனது மாளிகையில் நடந்த செய்தியை, விளம்புவாம் - (இனிக்) கூறுவோம்; (எ - று.) - அதனை மேற்காண்க.
நான்காமடி - கவிக்கூற்று, விளம்புவாம் - கவிகளுக்கு உரிய இயற்கைத் தன்மைப்பன்மை, என்று - என்று சொல்லி, வாய்மை - வாயின்தன்மை; வாய் -சொல்லுக்குக் கருவியாகுபெயர். இசைத்திலன் - முற்றெச்சம். உற்றது -வினையாலணையும் பெயர். (200) வேறு. 141.-விதுரன் வில்லைமுறித்த காரணத்தைக் கண்ணன் வினாவுதல். பொருசிலைமுறித்தவீரன்கோயிலிற்புகுந்துநேமிக் குரிசிலைவணங்கியாங்கணிருப்பவக்குரிசினோக்கி இருசிலையுண்டென்றிந்தவிருநிலத்தியம்பும்வில்லின் ஒருசிலைமுறித்தசீற்றமென்கொலோவுரைசெயென்றான். |
(இ -ள்.) (இது நிற்க), பொரு சிலை முறித்த வீரன் - போர் செய்தற்கு உரியவில்லை முறித்துப்போகட்ட சுத்தவீரனான விதுரன், கோயிலில்புகுந்து - (தனது) சிறந்த மாளிகையிலே சென்று, நேமிகுரிசிலை வணங்கி - (அங்குத் தனக்குமுன் சென்றிருந்த) சக்கரபாணியான கண்ணபிரானை நமஸ்கரித்து, ஆங்கண் இருப்ப - அவ்விடத்தில் இருக்கையில்,- அ குரிசில் - அந்தக்கண்ணபிரான், நோக்கி - (விதுரனைப்) பார்த்து, 'இருசிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் ஒரு சிலை முறித்த சீற்றம் - இரண்டு சிறந்த விற்கள் உள்ளனவென்று இந்தப்பெரிய பூலோகத்திற் (பிரசித்தமாகச்) சொல்லப்படுகிற விற்களுள் ஒன்றாகிய உனது வில்லை (நீ) முறித்துப்போகட்ட கோபம், என்கொலோ - யாது காரணம்பற்றியதோ? உரைசெய் - சொல்,' என்றான், என்று கேட்டருளினான்; (எ - று.) விதுரன் வில்முறித்தசெய்தியைக் கண்ணன் தனது ஞானத் திருக்கண்ணினாலும் ஜனவதந்தியினாலும் அறிந்தன னென்க. |