பக்கம் எண் :

206பாரதம்உத்தியோக பருவம்

சீற்றம் -தொழிற்பெயர்; சீறு - பகுதி, அம் விகுதி, ற் - விரித்தல் விகாரம்.
ஆங்கண் - அக்கண் என்பதன் மெலித்தலும் நீட்டலும்.  'இருப்பவுங்குரிசில்'
எனவும் பாடம்.

    இதுமுதல் ஐம்பதுகவிகள் - முதற்சீரும் நான்காம்சீரும் விளச்சீர்களும்,
மற்றை நான்கும்மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்.                                          (201)

142.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: விதுரன்
சொல்லும் உத்தரம்.

ஆவதுகருதானாகிலமைச்சர்சொற்கேளானாகில்
வீவதுகுறியானாகில்விளைவதுமுணரானாகில்
நாவதுகாவானாகிலவனுக்காநடந்துபோரிற்
சாவதுபழுதென்றன்றோசகத்துளோர்சாற்றுகின்றார்.

     (இ -ள்.) '(ஒருவன்), ஆவது கருதான் ஆகில் - (தனக்கும் பிறர்க்கும்)
நன்மையாகுங் காரியத்தை ஆலோசியானானாலும், அமைச்சர் சொல் கேளான்
ஆகில் - மந்திரிகளது வார்த்தையைக் கேட்டுநடவானானாலும், வீவது
குறியான் ஆகில் - (தான்) அழிவதைச் சிந்தியானானாலும், விளைவதும்
உணரான் ஆகில் - (இம்மை மறுமைகளில் தனக்கு இனி) விளையும்
பயன்களை அறியானானாலும், நா அது காவான் ஆகில் - (தனது) நாக்கை
(த்தீச்சொற் சொல்லாமல்) அடக்கிவையானானாலும், அவனுக்கு ஆ நடந்து-
அவனுக்கு உதவியாகச் சென்று, போரில் சாவது - யுத்தத்தில் இறப்பது,
பழுது- குற்றமாகும்' என்று அன்றோ சகத்து உளோர் சாற்றுகின்றார் -
என்றேஉலகத்திலுள்ள  பெரியோர்கள்  எல்லோரும்
சொல்லுகிறார்களன்றோ?                           (எ - று.)

    ஆவதுகருதாமை முதலாக இங்குக்கூறிய துர்க்குணங்களையுடைய
துரியோதனனுக்கு உதவியாகச்சென்று போரில் இறத்தல் பழிபாவங்களைத்
தருவதாதலால், அதனை ஒழித்தேன் என்பதாம், 'ஆகில்' எனப் பலவிடத்தும்,
வந்தவை - வினைச்செவ்வெண்.  இவை - 'பழுது' என்பதைக்
கொண்டுமுடியும்.  "யாகாவாராயினு நாகாக்க காவாக்கால், சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு" என்ற திருக்குறளினாலும், மொழியடக்கம் - மற்றை
மெய்யடக்க மனவடக்கங்களினும் முக்கியமாதலை அறிக.  ஆவது, வீவது,
விளைவது - எதிக்கால வினையாலணையும் பெயர்கள்.  நாவது, அது -
அசை.சாவது - எதிர்காலத் தொழிற்பெயர்.  இனி, நாவது -
நாவினிடத்ததான சொல்எனக் குறிப்புவினையாலணையும்பெயருமாம்.
அன்றோ - தேற்றம்.                                     (202)

143.

செல்வம்வந்துற்றகாலைத்தெய்வமுஞ்சிறிதுபேணார்
சொல்வனவறிந்துசொல்லார்சுற்றமுந்துணையுநோக்கார்
வெல்வதேநினைவதல்லால்வெம்பகைவலிதென்றெண்ணார்
வல்வினைவிளைவுமோரார்மண்ணின்மேல்வாழுமாந்தர்.