சௌந்தரியம் பராக்கிரமம் என்பவற்றிற் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற கர்ணனை இளமையிற்பெற்ற அன்பையுடைய குந்திதேவியினது வாசஸ்தானத்தை அடைந்தருளினான்; (எ - று.) இச்சருக்கத்தில், கண்ணனது மாயையின் காரியமான பல அற்புதச் செய்கைகளை நோக்கி வியந்து, பலவிடத்து அவனை 'மாயோன்' எனக் குறிக்கிறார்; விதுரனைத் துரியோதனனினின்று பிரித்த அற்புதத்தைக் குறித்துக் கீழ் 145 - ஆங் கவியில் 'மாயன்' எனக்கூறி, இனிக்குந்திமூலமாகக் கர்ணனைத் துரியோதனனினின்று பிரிக்கத் தொடங்கிய அற்புதத்தைக் குறித்துஇங்கு 'மாயோன்' என்றார். கன்னிகையாயிருந்தகாலத்துக் குந்தி கர்ணனைப்பெற்றமை விளங்க, இங்கு 'கன்னி' எனப்பட்டாள். 'காதற்கன்னி' என்றது -அப்பொழுது சூரியனைவிரும்பினதனாலும், தன் மக்களிடத்து இயல்பாகஅன்புடைய ளாதலாலும், கண்ணனிடத்து விசுவாசமுடைய வளாதலாலு மென்க. இனி, 'வண்மையருளழகாண்மை பேசும்' என்பதற்கு - தனது ஈகை முதலியகுணங்களைத் தானேபுகழ்ந்து கூறும் இயல்புடைய என்றும், 'கன்னனைப்பயந்த'என்பதற்கு - (தனது சிறந்த குமாரனான அருச்சுனனுக்கு நெடுங்காலமாகப்பெரும்பகையாய்ச் சிறந்த வில்வல்லமையையும் தவறாத கொடிய கறுவுள்ளநாகாஸ்திரத்தையும் உடைமைபற்றிக்) கர்ணனை அஞ்சின என்றும்உரைக்கலாம். கேள்விக்குக் குற்றம் ஐயம் திரிபு அறியாமைகள். இங்கே,கேள்வி - அனுபவமுடைய நல்லாசிரியர் பக்கலில் உறுதிமொழிகளைஉபதேசிக்கக் கேட்டல். கீழ் ஆரணிய பருவத்தின் முதலில் "அன்னையைச்சுபலன் பாவை யருகுற விருத்தி" என்றதனால், காந்தாரி வீட்டை யடுத்துக்குந்தி இருந்தனளென அறிக. (207) 148.-குந்தி தனது மாளிகைக்குஎழுந்தருளிய கண்ணனை விருப்பத்தோடு காணுதல். மண்டலமதியமன்னமாசறுமுகத்தினாளுந் திண்டிறன்மருகன்றன்னைச்சென்றெதிர்கொண்டுகண்டு வெண்டிரைமகரவேலைவிரிபுனன்முகந்துதோன்றுங் கொண்டலைமகிழ்ந்துகாணுங்குளிர்பசுந்தோகைபோன்றாள். |
(இ -ள்.) (அப்பொழுது), மண்டலம் மதியம் அன்ன - சந்திரமண்டலத்தைப்போன்ற, மாசு அறு முகத்தினாளும் - களங்கமில்லாத முகமண்டலத்தையுடைய குந்தி தேவியும், திண் திறல் மருகன்தன்னை-மிக்க வலிமையையுடைய தனது மருமகனான கண்ணனை, சென்று எதிர்கொண்டு கண்டு - எதிர்கொண்டுபோய்ப் பார்த்து, வெள் திரை மகரம் வேலை விரிபுனல்முகந்து தோன்றும் கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசு தோகைபோன்றாள் - வெண்மையான அலைகளையும் சுறாமீன்களையுடைய கடலின்மிகுந்த நீரை மொண்டுகொண்டு மேலெழுகின்ற காளமேகத்தைச் சந்தோஷித்துப் பார்க்கின்ற அதனாற்குளிர்ந்த பசுநிறமுள்ள மயிலை யொத்தாள்; (எ-று.) |