பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 211

    உவமையணி, நீர்கொண்டமேகம் - நீலநிறமுள்ள கண்ணனுக்கும்,
மேகத்தைக்கண்டு தாபமொழிந்து மனமகிழும் மயில் - கண்ணனைத் தரிசித்துத்
துயரந்தணிந்து மனமகிழ்ந்த குந்திக்கும் உவமை.  நிறம்பற்றித் திருமாற்கு
மேகமும், சாயல்பற்றிப் பெண்ணுக்கு மயிலும் உவமையாம்.  மண்டலமதியம்-
கலைகள் நிறைந்து வட்டவடிவமாய்  பூர்ணமாகவேயுள்ள சந்திரன், இனி,
மண்தலம் மதியம் எனப் பிரித்து - நிலவுலகத்தில் வந்ததொரு
சந்திரனென்றுஇல்பொருளுவமையாக்கி உரைப்பாரு முளர்.  பல நாளாகப்
புத்திரரைப்பிரிந்துசெல்வத்தையிழந்து சோகமுற்று வாடியிருந்த குந்தியின்
முகம்கண்ணன்வந்தானென்ற மாத்திரத்தில் மிகத் தெளிவையடைந்த
தென்பார், இங்கு'மாசறுமுகத்தினாள்' என்றார்; இதில் நெற்றியில்
திலகமற்றிருந்த தன்மையும்தோன்றும்.  குந்திக்கு உடன் பிறந்த முறையாகிய
வசுதேவரது குமாரனாதலால்,கண்ணன் மருகனாவன்.            (208)

149.-குந்தி மகிழ்ந்துகண்ணனை வந்த காரியம் வினாவுதல்.

யானுறையில்லின்வந்ததென்னமாதவமென்றேத்திக்
கானுறைமைந்தர்தம்மைக்கண்டனள்போன்றாளாகித்
தேனுறைதுளவினான்றன்செய்யமாமுகத்தைநோக்கி
வானுறைபுரிசைமூதூர்வந்ததென்னருடியென்றாள்.

     (இ -ள்.) 'யான் உறை இல்லின் வந்தது - நான் வசிக்கிற இவ்வீட்டில்
(நீ) வந்துசேர்ந்தது, என்ன மா தவம் - (யான்செய்துள்ள)
எந்தப்பெருந்தவத்தின்பயனோ?' என்று ஏத்தி - என்று (கண்ணனை
நோக்கிக்)கூறித் துதித்து, (குந்திதேவி), கான் உறை மைந்தர் தம்மை
கண்டனள்போன்றாள் ஆகி - (கண்ணனைப் பார்த்தமாத்திரத்தில்)
வனவாசஞ்செய்த தன்புத்திரரைப் பார்த்தவள்போல மகிழ்ந்தவளாய், தேன்
உறை துளவினான்தன்செய்ய மாமுகத்தை நோக்கி - தேன்பொருந்திய
திருத்துழாய் மாலையையுடையகண்ணனது சிவந்த அழகிய திருமுகத்தைப்
பார்த்து, வான் உறை புரிசைமுதுஊர் வந்தது என் அருடி என்றாள் -
ஆகாயத்தை யளாவிப் பொருந்தியமதில்களையுடைய பழமையான இவ்வூர்க்கு
(நீ) வந்தது என்ன காரணம்?சொல்லியருள்வாய்' என்று கூறினாள்; (எ - று.)

    இரண்டாமடியில், தன்மக்களிடத்து எவ்வளவு அன்போ அவ்வளவு
அன்பு குந்திக்குக் கண்ணனிடமென்பது விளங்கும்.  அன்றியும், அவயவியான
கண்ணனை நோக்கின மாத்திரத்தில், அவயவமானபாண்டவரைப்
பார்த்தாற்போன்றவளானாள்; "மாலோனுயிர்போல்வான்" என்றிறே
பாண்டவரைக் கூறுமாறு.  தேன் உறை துளவு - வண்டுகள் மொய்க்குந் துளசி
யென்றும், வான் உறை புரிசை-மேகந்தங்கும் மதிலென்றும் உரைக்கலாம்.
அருடி - ஏவலொருமைமுற்று; அருள் - பகுதி, இ - விகுதி, த்-எழுத்துப்பேறு.
தகரம் டகரமானவிடத்து ளகரம்கெட்டது சந்தி;  இதில், ட் -