பக்கம் எண் :

214பாரதம்உத்தியோக பருவம்

153.

கதிரவனருளினாலோர்கணத்திடைக்காதல்கூர
மதலையங்கொருவன்றன்னைப்பயந்தபின்வடுவென்றஞ்சி
மிதவையம்பேழைதன்னிற்பொதிந்துநீவிடவப்போதந்
நதியுமம்மகவைக்கங்கைநதியிடைப்படுத்ததன்றே.

     (இ -ள்.) கதிரவன் - ஆயிரங்கிரணங்களையுடைய சூரியன்,
அருளினால்- கருணையினால், ஓர் கணத்திடை - ஒருகணப்பொழுதிலே,
காதல்கூர -இன்பமடைய, (அதனால்), அங்கு - அப்பொழுது [அவ்விடத்தில்]
மதலைஒருவன் தன்னை - ஒருபுத்திரனை, பயந்தபின் - (நீ) பெற்றபின்பு,
வடு என்றுஅஞ்சி - (இது உனக்கும் உன்மரபுக்கும்) பழிப்பாமென்று பயந்து,
நீ -, மிதவைஅம் பேழைதன்னில் பொதிந்து - நீரில் மிதக்குந்
தன்மையதாகிய ஒருமரப்பெட்டியிலே (அக்குழந்தையை) அடக்கஞ்செய்து,
விட - (அப்பெட்டியையமுனாநதியிலே) செலுத்திவிட, அப்போது-, அ
நதியும் - அவ்யமுனையாறும்,அ மகவை கங்கை நதியிடை படுத்தது -
அக்குழந்தையை (ப் பெட்டியுடனே)கங்காநதியிற் கொண்டுபோய்ச் சேர்த்தது;
(எ - று.) - அன்றே - தேற்றம்;ஈற்றசையுமாம்.

    தேவர்களது அநுக்கிரகத்தா லுளதாங்கருப்பம் காலதாமதமின்றி உடனே
பிறந்திடு மென்பது மரபு.  பேழைதன்னில் அம்மகவை அப்போது பொதிந்து
கங்கைநதியிடை விட (அப்பேழையை) அன்றே [அன்றைய தினமே]
அந்நதியும் படுத்தது [கொண்டுவந்தது] என்று அந்வயித்தும் உரைக்கலாம்.
மிதவை, ஐ - கருத்தாப் பொருள்விகுதி.  பேழை - பேடிகா என்னும்
வடமொழியின் சிதைவென்பர்.                               (213)

154.

காதனின்புதல்வன்றன்னைக்கண்ணிலாவரசன்பொற்றேர்ச்
சூதன்வந்தெடுத்துக்கொண்டுசுதனென வளர்த்தகாலை
ஆதபனிவனையாருங்கன்னனென்றழைக்கவென்றான்
தாதையும்விசும்பிற்சொன்னநாமமேதக்கதென்றான்.

     (இ -ள்.) காதல் நின் புதல்வன் தன்னை - அன்புக்கு உரிய உனது
புத்திரனை, கண் இலா அரசன் பொன் தேர் சூதன் - திருதராட்டிர ராசனது
பொன்மயமான இரதத்தைச் செலுத்தும் பாகனான அதிரதனென்பவன், வந்து
எடுத்துக்கொண்டு - அக்கங்கையாற்றுக்கு வந்து எடுத்துக்கொண்டு சென்று,
சுதன் என வளர்த்த காலை - தன்புத்திரனாகப்பாவித்து வளர்த்த காலத்தில்,
ஆதபன் - சூரியன் - இவனை யாரும் கன்னன் என்று அழைக்க -
'இப்புதல்வனை எல்லோரும் கர்ணனென்று அழைப்பாராக,' என்றான் -
என்று(அசரீரி வாணியாகச்) சொன்னான்; தந்தையும் - (வளர்க்கிற)
தந்தையானஅதிரதனும், விசும்பின் சொன்ன நாமமே தக்கது என்றான் -
ஆகாயத்திற்சொல்லப்பட்ட பெயரே தகுதியுடையது என்று கூறினான்;
(எ - று.)

    இப்புத்திரன் பிறந்தபொழுதே கர்ணகுண்டலங்களோடு
கூடியிருந்தமைபற்றி கர்ணனென்ற பெயர் இவனுக்குத் தகும்.  குழந்