பக்கம் எண் :

216பாரதம்உத்தியோக பருவம்

முறைமையை(அவனும்) அறிகின்றானில்லை; (ஆதலால், அவனுக்கு), இதனை
- இவ்வுறவுமுறைமையை, சிந்தையின் ஐயம் தீர - மனத்திற் சந்தேகம்
நீங்கும்படி, தெளிய நீ சொல்லி - நம்புதலோடு அறியும்படி நீ (சென்று) கூறி,
கொந்து அவிழ் அலங்கலானை - பூங்கொத்துக்கள் விரியப்பெற்ற
மாலையையுடைய அக்கர்ணனை, விரைவின் கூட்டுக - சீக்கிரத்தில்
(பாண்டவர்களோடு) கூடும்படி செய்வாயாக; (எ - று.)- அம்மா என்பதை -
ஈற்றசையென்றாவது, கேட்பித்தற் பொருளதாகிய அம்மவென்னும் முன்னிலை
யிடைச்சொல் நீட்டப்பெற்ற தென்றாவது, மரியாதைபற்றிய அம்மையென்பதன்
ஈறுதிரிந்த விளியென்றாவது கொள்க.

     உறவு -தொழிற்பெயர்; உறுதல், தொடர்ச்சி: உறு - பகுதி, அ -
சாரியை,உ - விகுதி.  மற்று - வினைமாற்று: மலையநின்றான்,
உறவறியமாட்டான் எனவேறுபட்ட வினைகளின் இடையே வந்ததனால்.
முன்னே கர்ணன்அருச்சுனன் விஷயமாக "முனைந்தபோரின் முடிதுணித்
துன்முகசரோருகத்தினாற், சினந்தணிந் தரங்கபூசை செய்வன்" என்று
வீரவாதமும், கர்ணன் விஷயமாக அருச்சுனன், "பகலவன்றன் மதலையுயிர்
பகைப்புலத்துக் கவர்வன்" என்று சபதமுஞ் செய்துள்ளமை முதலியன பற்றி
'மலைய நின்றான்' என்றது.  தனக்கும் இவனுக்குமுள்ள உறவை அறிந்தால்
இங்ஙனஞ் செய்யான் என்பது தோன்ற 'உறவுமற்றறிய மாட்டான்' என்றார்.
'சிந்தையினையந்தீர' என்றது, இதற்குமுன் பல மகளிர் தாம்தாம் கர்ணனுக்குத்
தாயென்று சொல்லி அவனிடம் மிகுந்த பொருள்பெற விரும்பி வந்து
வீண்போயின ராதலால்.  கொந்து - எதுகை நோக்கியமெலித்தல்.     (216)

157.

தம்பியரைந்துபேருந்தனித்தனியேவல்செய்ய
வம்பவிழலங்கலோடுமாமணமகுடஞ்சூட்டி
அம்புவிமுழுதுநீயேயாளலாம்வருகவென்றால்
உம்பர்காவனையகையானுன்னுரைமறுத்தானாகில்.

     (இ -ள்.) 'தம்பியர் ஐந்து பேரும் - (பஞ்சபாண்டவராகிய) தம்பிமார்
ஐவரும், தனி தனி ஏவல் செய்ய - வெவ்வேறாகப் பணிவிடை புரிய, வம்பு
அவிழ் அலங்கலோடு - நறுமணம்வீசும் மலர்மாலையுடனே, மா மணி மகுடம்
சூட்டி - பெரிய இரத்தினகிரீடத்தைத் தரித்து, அம் புவி முழுதும் - அழகிய
பூலோக முழுவதையும், நீயே ஆளலாம் - நீயே தனிப்பட அரசாளலாம்;
(ஆகையால்), வருக - (பாண்டவர்பக்கல்) வந்துசேர்ந்திடுவாயாக,' என்றால் -
(என்று சொல்லி)  (ஆசைகாட்டி) அழைத்தால், (அப்பொழுது) உம்பர்கா
அனைய கையான் - (தானத்தில்) தேவர்களது.  கற்பகச் சோலையை யொத்த
கையையுடைய கர்ணன், உன் உரை மறுத்தான் ஆகில் - உனது
வார்த்தைக்குஇசையாமல் தடுத்திடுவானானால்,- (எ- று.)- "விசயன்மேல்
மறுகணைதொடுக்காவண்ணம் வரம் வேண்டுக" என மேற்கவியோடு
குளகமாகத்தொடரும்.

    கர்ணன் மிகக் கொடையாளியாதலால், அவனுக்குக் கற்பக விருஷங்களை
உவமை கூறினர்.                               (217)