பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 219

     (இ -ள்.) தேக்கு - தேக்குமரங்களை, உந்தி - தள்ளி, அகிலும் -
அகிற்கட்டைகளையும், சாந்தும் - சந்தனமரங்களையும், சிந்தும் -
அடித்துக்கொண்டுவருகின்ற, நீர் - நீர்வளமுள்ள, நதி - ஆற்றினால், சூழ் -
சூழப்பட்ட,செல்வம் கோ - பொருளையும் சிறப்பையுமுடைய, குந்தி -
குந்திதேசத்து,அரசன் - அரசனுடைய, பாவை - பெண்ணான குந்திதேவி,
குலைந்து -மனநிலை கலங்கி, அழும் - புலம்புகிற, கொடுமை - கொடிய
நிலைமையை,கண்டு - பார்த்து,- மீ குந்தி - (உயரமான ஏணி உரல்
முதலியவற்றின்) மேல்ஏறி உட்கார்ந்து, உறிகள்தோறும் வெண்ணெயும்
தயிரும் உண்ட -(இடையர்களது) உறிகளிலெல்லா முள்ள வெண்ணெயையுந்
தயிரையும் அமுதுசெய்தருளிய, வாக்கு - திருவாய்மலரையும், உந்தி
மலரோன் -திருநாபித்தாமரை மலரையுமுடைய கண்ணன், பின்னும் மனம்
தளர்வுஅகற்றினான் - மீண்டும் (அவளது) மனத்தளர்ச்சியை
நீக்கியருளினான்;

     கீழ்151-ம் கவியில் அவளது துன்பத்தைத் தேற்றினமை ஒருகால்
கூறப்பட்டதனால், இங்கு 'பின்னும்' என்றார்.  தேக்கு முதலியன - மலைபடு
பொருள்கள்.  மலையிலிருந்து உற்பத்தியாகும் நதியாதலால், குறிஞ்சிப்
பொருள்களை அங்குநின்று கொழித்துக்கொண்டு வருவதாயிற்று.  குந்தி -
யதுகுலத்துச் சூரராசனது மகள்; இவளைத் தந்தை தனது நண்பனும்
புத்திரனுமாகிற குந்தி போச தேசத்தரசனான குந்தியென்பவனுக்குத் தத்துக்
கொடுத்திருந்ததனால், 'குந்தியரசன்பாவை' என்றார்.  இவளுக்கு, இதுபற்றியே,
குந்தி யென்று பெயர்; பிருதை யென்பது, இவளது இயற்பெயர்.  உறி -
உறப்படுவதென்னும் பொருளில், இ என்னுஞ் செயப்படுபொருள்விகுதிபெற்ற
பெயரென்பர்.  வாக் - வடசொல்.  வாக்குமலர், உந்தி மலர் என
இரண்டுக்கும்மலர் என்பதைக் கூட்டுக.                         (221)

162.

பைவருந்தலைகளைந்துபடைத்தபன்னகமேபோல
வைவரும்படுதனன்றோவங்கர்கோன்படுதனன்றோ
உய்வருஞ்சமரிலாவியொருவர்போயொருவருய்யார்
நைவருந்துயரமாறிநடப்பதேகருமமென்றான்.

     (இ -ள்.) (மனத்தளர்வகற்றின கண்ணன் அக்குந்தியை நோக்கி), - 'பை
வரும் - படத்தோடு பொருந்தின, ஐந்து தலைகள் - ஐந்து தலைகளை,
படைத்த - பெற்ற, பன்னகமே போல - பாம்புபோல, ஐவரும் - பாண்டவர்
ஐந்துபேரும், படுதல் - இறத்தல், நன்றோ - நல்லதோ? அங்கர் கோன் -
அங்கநாட்டார்க்கு அரசனாகிய கர்ணனொருவன், படுதல் - இறத்தல், நன்றோ
- நல்லதோ? உய்வு அருஞ் சமரில் ஆவி ஒருவர்போய் ஒருவர் உய்யார் -
தப்பிப் பிழைத்தலரிதாகப் பெற்ற யுத்தத்தில் (பஞ்சபாண்டவருள்) ஒருவர்
இறக்க (மற்றை நால்வரில்) ஒருவரும் பிழைத்திரார்; (ஆதலால்), நைவரும்
துயரம் மாறி நடப்பதே - (நீ) மனந்தளர்கிற துன்பம் நீங்கி(க் கர்ணன்
பக்கல்)செல்வதே, கருமம் - (செய்தற்குரிய) தொழிலாம்,' என்றான் - என்று
கூறினான்;(எ - று.)