பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 227

துரியோதனனைநோக்கியதென்றாவது கொள்க.  இது - பூத்து எரி
எனப்பிரிந்து, அமங்கலப் பொருள் தருமாறுங் காண்க.              (233)

174.

பழியுடைப்பகைஞரேனுந்தன்பெரும்பதியில்வந்தால்
அழிவுறக்கோறல்பாவமாண்மையுமன்றாமென்பார்
கழிகடற்சேனைசூழக்கங்குலின்வளைந்திட்டாலும்
எழிலுடைக்கொண்டல்வண்ணனகப்படானெவர்க்குமென்றான்.

     (இ -ள்.) (இன்னும் அவ்விகர்ணன்), 'பழி உடை பகைஞர் ஏனும் -
(தன்னைப்) பழித்தலையுடைய பகைவர்களாயிருப்பினும், தன் பெரு பதியில்
வந்தால் - (அவர்கள்) தனது பெரிய ஊருக்கு வந்தால், அழிவு உற கோறல்-
(அவர்களை) அழிவையடையும்படி கொல்லுதல், பாவம் - தீவினையாம்; (அது),
ஆண்மையும் அன்று ஆம் - ஆண்தன்மைக்கு  உரியதும் ஆகாது; என்பார்-
என்று (அறிவுடைய பெரியோர்கள்) கூறுவார்கள்; கழி கடல் சேனை சூழ -
மிகுந்த கடல் போற் பெரிய சேனைகள் வந்து சுற்றிலும் நிற்க, கங்குலின்
வளைந்திட்டாலும், - இராத்திரிகாலத்தில் சென்று சூழ்ந்திட்டாலும், எழில்
உடைகொண்டல் வண்ணன் - அழகையுடைய மேகம் போன்ற
நிறமுடையவனான கண்ணன், எவர்க்கும் அகப்படான் - எப்படிப்பட்ட
வலிமையுடை யோர்க்கும் (கொல்லக்) கிடைக்கமாட்டான்', என்றான் -;(எ-று.)

    பழிஉடை - எல்லாராலும் பழிக்கப்படுதலையுடைய என்றும் பொருள்
கொள்ளலாம்.  கழிகடல், கழி - மிகுதியுணர்த்தும் உரிச்சொல்; ஆனது
பற்றியே,வருமொழிமுதல்வலி இயல்பாயிற்று; [நன் - மெய் - 36.]
கீழ்த்திருதராட்டிரன்'மாயன் தன்னைக்கரும்பொழுதகலு முன்னே கொல்வது'
எனக் கரியோனைக்காரிருளிலேயே கொல்ல வேண்டுமென்பது படக்
கூறியதனை மறுத்து, இவன்'கங்குலின் வளைந்திட்டாலு மெழிலுடைக்
கொண்டல் வண்ணனகப்படான்'என்றதனால், கறுத்தவனைக் கரிய இருளிற்
கண்டுபிடிப்பது கஷ்டமென்பதுபடக்கூறி, கண்ணனது வெல்லுதற்கரிய மாயை
நிலையை வெளியிட்டவாறு.பகைஞர், ஞ் - பெயரிடைநிலை.        (234)

175.-இதுவும், அடுத்தகவியும்- துச்சாதனன் வார்த்தை.

வெம்புயவலியான்மாதைவிரிதுகிலுரிந்தவீரன்
தம்பியைமுனிந்துசீறித்தமையனைநோக்கிச்சொல்வான்
வம்பவிழலங்கன்மார்பமந்தணமுரைக்கலுற்றால்
இம்பர்மற்றியாதுசொல்லவிளைஞரையழைத்ததென்றான்.

     (இ -ள்.) (இங்ஙனம் விகர்ணன் சொல்லக் கேட்டவளவில்),- வெம்
புயம்வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் - கொடிய தோள்களின்
வலிமையால் அழகிய திரௌபதியினது பெரிய ஆடையை அவிழ்க்கலுற்ற
துச்சாதனன்,- தம்பியை முனிந்து சீறி - தம்பியாகிய அவ்விகர்ணனை
மிகக்கோபித்து, தமையனை நோக்கி சொல்வான் - தமையனான
துரியோதனனைப்பார்த்துச் சொல்பவனாய்,