(இ -ள்.) (அதுகேட்டு), சௌபலன் - (காந்தாரநாட்டரசனான) சுபலனென்பவனது புத்திரனாகிய சகுனி,- '(இக்கண்ணன்), பதிபெயர்ந்து ஏகி- இவ்வூரைவிட்டு நீங்கிச்சென்று, நாளை - நாளைக்கு, பகைவரை கூடும் ஆயின்- பகைவர்களான பாண்டவர்களைச் சேர்ந்திடுவானானால், விதிபயன் என்ன -(முற்பிறப்பிற்செய்த கொடிய) ஊழ்வினைப் பயன்போல, நம்மை வெம் சமர்வெல்ல ஒட்டான் - நம்மைக் கொடியபோரிற் சயிக்க விடமாட்டான்; (ஆதலால்), வேறு மதிப்பது என் - வேறே ஆலோசிக்கவேண்டுவது என்ன? கள்ளம் மாயனை - வஞ்சனையையுடைய கண்ணனை, மனையில் கோலி - (நம்முடைய) வீட்டிலே (வரவழைத்து) வளைந்துகொண்டு, சதிப்பதே - வஞ்சனையாக வெல்வதே, கருமம் - செய்தொழிலாம்,' என்று - என்று சொல்லி, பின்னும் சொல்வான் - மறுபடியுங் கூறுவான்; (எ - று.) விதிப்பயன் தவறாததுபோல, இவன் நம்மை வெற்றியடைவியாமை தவறாதென்பான், 'விதிப்பயனென்ன நம்மைவெஞ்சமர் வெல்ல வொட்டான்' என்றான். கள்ளம் - தொழிற்பெயர்; கள் - பகுதி, அம் - விகுதி: இது - வேறுவிகுதிபெற்று, களவு எனவும் வரும்; இதன் எதிர்மறை - கள்ளாமை. கோலுதல் - அகப்படச் செய்தலும், சூழ்தலுமாம். 'மனையிற் கோலிச்சதிப்பது' என்பதற்கு, விதுரன் வீட்டிலேயே வளைந்து கொல்லுவதென உரைப்பினுமாம். (238) 179. | கொல்லுவதியற்கையன்றுகுழிபறித்தரக்கரோடு மல்லரையிருத்திமேலோராசனம்வகுத்துநாளை எல்லிடையழைத்துவீழ்த்தியிகலுடன்விலங்குபூட்டித் தொல்லருஞ்சிறையில்வைத்தறூதருக்குரிமையென்றான். |
(இ -ள்.) 'கொல்லுவது - (தூதரைக்) கொல்லுதல், இயற்கை அன்று - (நல்லரசர்க்குத்) தக்கதன்று; குழி பறித்து - பெரும்பள்ளந் தோண்டி, அரக்கரோடு மல்லரை இருத்தி - இராக்கதர்களையும் மற்போர் வீரரையும் (அதனுள்ளே மறைவாக) இருக்கவைத்து, மேல் - மேலே, ஓர் ஆசனம் வகுத்து- ஒரு ஆசனத்தை அமைத்து, நாளை எல்லிடை அழைத்து - நாளைப்பகலிலேவரவழைத்து, வீழ்த்தி - (அக்குழியிலே) விழும்படிசெய்து, இகலுடன் -வலிமையோடு, விலங்கு பூட்டி - விலங்கைப்பூட்டி, தொல் அருஞ் சிறையில்வைத்தல் - பழமையான பொறுத்தற்கரிய சிறைச்சாலையிலே வைத்திடுதலே,தூதருக்கு உரிமை - தூதர்களுக்குச் செய்தற்குரிய தண்டனை,' என்றான் -என்று சொன்னான், (சகுனி); (எ - று.) இயற்கை - தொழிற்பெயர்; இயலுதலென்க; இயல் - பகுதி, கை - விகுதி. நிலத்திற் குழிந்துள்ளது, குழி. (239) 180.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: துரியோதனன் படுகுழியமைத்ததைக் கூறும். மாதுலனுரைத்தமாற்றமருகனுமிசைந்துகங்குற் போதிடையனேகமல்லர்வருகெனப்புகன்றுதானும் |
|