பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 233

    ஏதுத்தற்குறிப்பேற்றவணி. இரவு இயல்பாகக் கழிந்ததைத்
துரியோதனனது கொடுமைக்கு அஞ்சி விரைவிற்போனதாக உத்பிரேக்ஷித்தார்.
ஆரிருள் - முச்சுடர்க்குந்தீராத இருளென்றபடி.  இருள் தீர்க்கும் நெடியவன்
இருக்கவென்று நிலவறை விரகின் கங்குலிற் செய்த என்றுமாம்.        (243)

184.சிரந்தருசுடிகைநாகத்திரண்மணிபலவுஞ்சிந்தி
நிரந்தரமருவிவீழுநிறந்திகழுதயக்குன்றிற்
பரந்தெழுமருக்கன்சூழ்ந்தபடரிருட்கங்குல்கண்டு
புரந்தரன்கோயிலிட்டபொங்கொளித்தீபம்போன்றான்.

     (இ -ள்.) சிரம் தரும் சுடிகை - தலையிற்பொருந்திய உச்சிக்
கொண்டையையுடைய, நாகம் - பாம்புகளின், திரள்மணி பலவும் -
தொகுதியான பல மாணிக்கங்களும், சிந்தி - சிதறப்பெற்று, நிரந்தரம் அருவி
வீழும் - இடைவிடாமல் சிந்தூர அருவி விழப்பெற்ற, நிறம் திகழ் -
(அதனாற்)செந்நிறம் விளங்குகிற, உதயம் குன்றில் - உதயகிரியிலே, பரந்து
எழும் -பரவிய வடிவமாய் உதித்த, அருக்கன் - சூரியன்,- சூழ்ந்த படர்
இருள் கங்குல்கண்டு - சுற்றிலும் பரவிய மிகுந்த இருளைப் பார்த்து,
புரந்தான்  - இந்திரன்,கோயில் - தன் அரண்மனையில்வைத்த,
பொங்குஒளிதீபம் - மிகுந்தஒளியையுடைய திருவிளக்கை, போன்றான் -
ஒத்தான்; (எ - று.)

    தற்குறிப்பேற்றவுவமையணி.  இந்திரன் கிழக்குத்திக்குப் பாலகனாதலால்,
கீழ்த்திசையிலுதித்த சூரியனை அவன் கோயிலிலிட்ட தீப மென்றார்.
அக்கினிவடிவமான தீபத்தினொளியினும் சூரியனொளிக்கு உள்ள மிகுதி
விளங்க, 'பொங்கொளி' என உபமானத்துக்கு அடைமொழி கொடுத்தது.
சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர், 'உதயகிரியிற் சிந்தூர அருவி வீழ்ந்த
சிந்தூராகரத்திற் பிறந்து பதினாறுசதுர்யுகஞ் சிவப்பேறின முழுமாணிக்கம்
இருளைக் கெடுத்தலின், இருள்பருகுமருமணி யென்றார்' என உரைத்தது
கொண்டு, இங்கே, அருவி - சிந்தூர அருவியெனப்பட்டது.  இனி,
நீரருவியுமாம்.  பரந்து - விரைந்து என்றுமாம்.  அந்தரம் - இடையீடு; அது
இன்மை, நிரந்தரம்.                                      (244)

185.

தொடர்ந்தொளிருதயராகத்தோடுறநெருங்கிமேன்மேல்
அடர்ந்தரிபரந்துகாமனாகமவேதம்பாடத்
தடங்கயன்மலைந்துலாவத்தாமரைமுகமுங்காதன்
மடந்தையர்முகமுஞ்சேரமணம்பெறமலர்ந்தமாதோ.

     (இ -ள்.) தொடர்ந்து ஒளிர் - (இடைவிடாது) தொடர்ச்சி பெற்று
விளங்குகிற, உதயம் ராகத்தோடு - சூரியோதயகாலத்துக்கு உரிய
பண்ணுடனே,உற - பொருந்த, நெருங்கி - சமீபித்து, மேல் மேல் அடர்ந்து-
மேலே மேலேநெருங்கி, அரி - வண்டுகள், பரந்து - விரைவாகப்பரவி, கா
மன் ஆகமம்வேதம் - சோலைகளிற் பொருந்தின மரங்களின்
பகுப்புக்களிலே, பாட -இசைபாடவும், தட கயல் - பெரிய கயல் மீன்கள்,
மலைந்து உலாவ - மேலேதாக்கிச் சஞ்சரிக்