போன்றதிருமேனி நிறத்தையுடைய கண்ணபிரான், மேல் - தங்கள் மீது, வலிஉற்று - மிகவலிமை கொண்டு, எதிர் வீசி - எதிராகவீசி, கால் - திருவடிகளால், விசையின்பட - உக்கிரமாகப்படும்படி, மோதுதலின் - தாக்குதலினால், பொரு காமர் புயம் துணை போய் - போர் செய்தற்கு உரிய அழகிய (தமது) தோள்களிரண்டும் அற்று, நீலம் நிறம் கவின் வாசவன் நீள் வச்சிரம் படையின் சிறகு ஈர் மால் வரை ஒத்தனர் - நீலநிறத்தையும் அழகையுமுடைய இந்திரனால் பெரிய தனது வச்சிராயுதத்தைக்கொண்டு இறகறுக்கப்பட்ட பெரிய மலைகளைப் போன்றனர்; (எ - று.) இந்திரன் வச்சிராயுதத்தால் மலைகளின் சிறகறுத்த வரலாறு:- முன்னொருகாலத்தில் மலைகளெல்லாம் பறவைகள்போல இறகுடையன வாயிருந்துஅவற்றால் உலகமெங்கும் பறந்துதிரிந்து பலவிடங்களின்மேல் உட்கார்ந்துஅவ்விடங்களையெல்லாம் பிராணிகளுடனே அழித்துவர, அதனை முனிவர்முதலியோராலறிந்த தேவேந்திரன், சினந்துசென்று தனது வச்சிராயுதத்தால்அவற்றின் இறகுகளை அறுத்துத்தள்ளிவிட்டானென்பதாம்.
இந்திரன் நீலநிறமுள்ளவனாதலை "வில்லாலொளிர் மேகமெனப் பொலிவான்" என்ற கம்பராமாயணத்தாலும் அறிக. வாகையென்னும் மரத்தின்பெயர், அதன் மலரினாலாகிய மாலைக்கு இருமடியாகு பெயர். வாகை -காட்டுவாகையென்னும் மரம்: வாகைப் பூமாலை பகைவரை வென்றோர்சூடுவதாதலை, "வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம், வட்கார்மேற்செல்வது வஞ்சியாம் - உட்கா, தெதிரூன்றல் காஞ்சி யெயில் காத்தல் நொச்சி,யதுவளைத்தலாகு முழிஞை யதிரப், பொருவது தும்பையாம் போர்க்களத்துமிக்கோர், செருவென்றது வாகையாம்" என்பதனாலும் அறிக. மலைகள் -பெரு வடிவுகொண்ட வீரர்க்கும், அம்மலைச் சிறகுகள் அவர்களதுகைகளுக்கும், கருநிறமுடைய இந்திரன் - கருநிறமுடைய கண்ணனுக்கும்,தவறாது பகைவரை யழிக்கும் இந்திரனது வச்சிராயுதம் அப்படிப்பட்டஎம்பிரான் திருவடிக்கும் உவமை. ஈர்வரை - வினைத்தொகை. (255) 196. | வெயில்விடுபைத்தலையமளிமிசைத்துயில்விபுதர்களுக்கரியோன் பயிலவுதைத்தலினவர்களுரத்திடைபதமலர்பட்டுருவா மயில்கடவிக்கடவுளர்பகையைக்கதிர்மகுடமுருக்கியவேள் அயில்கொடுகுத்தியநெடுவரையொத்தனரயில்களெடுத்தவரே. |
(இ -ள்.) அயில்கள் எடுத்தவர் - வேலாயுதங்களை யேந்தி நின்ற வீரர்கள்,- வெயில் விடு பை தலை அமளிமிசை துயில்விபுதர்களுக்கு அரியோன் பயில உதைத்தலின் - (மாணிக்கத்தால்) ஒளியை வீசுகிற படத்தையுடைய தலைகளையுடைய (ஆதிசேஷனாகிய) சயனத்தின்மேல் யோகநித்திரை செய்தருள்பவனும் தேவர்கட்கு (அறிதற்கு) அருமையானவனுமாகியகண்ணபிரான் உறுத்தும்படி உதைத்திடுதலால்,- அவர்கள் உரத்திடை பதம் மலர்பட்டு உருவா - தந்தமது மார்பினிடையிலே (அப்பிரானது) தாமரைமலர்போலுந்திருவடிபட்டு ஊடுருவித்துளைக்கப் பெற்று, (அதனால்), மயில் கடவி |