பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 243

காரணியத்திலே வந்து, கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல் போது -
வாநரங்களுக்குத் தலைவனான சுக்கிரீவன் (இராமபிரானது) வலிமையை
அறிவதற்குக் கூறியபொழுது, என்பு மலைக்கு உறு பண்பை - (துந்துபியின்)
எலும்பு மலைக்கு நேர்ந்த தன்மையை, அடுத்தனர் - ஒத்தார்கள்; (எ - று.)

     பின்னிரண்டடியிற் கூறியவரலாறு:-இராமபிரான் அனுமான்
மூலமாகச் சுக்கிரீவனோடு சிநேகஞ்செய்து அவனது மனைவியைக்
கவர்ந்துகொண்டு அவனை இராச்சியத்தினின்று துரத்திவிட்ட அவனது
அண்ணனான வாலியை அவன் வேண்டுகோளால் தாம் கொல்வதாக
வாக்குத்தத்தஞ் செய்ய, வாலியைக் கொல்லவல்ல வலிமை இவருக்கு உளதோ
வென்று சுக்கிரீவன் சிறிது சந்தேகிக்க, அந்த ஐயத்தை அகற்றுதற்பொருட்டு
ஸ்ரீராமமூர்த்தி, அங்கே ஒரு பால் மலைபோலக் குவிந்துகிடந்த (முன்பு
வாலியாற் கொல்லப்பட்ட) துந்துபியென்னும் பேரரசனது உடம்பின்
என்புக்குவியலை அச்சுக்கிரீவன் கருத்தின்படி தமது கால் விரலால்
எடுத்தெறிந்து வெகு தூரத்தில் வீசி அவனுக்கு நம்புதலுண்டாக்கினா
ரென்பதாம்.

    கிருஷ்ணாவதாரமூர்த்திக்கு இராமாவதாரமூர்த்தியையும், கொடிய
பப்பரருக்குக் கொடிய அரக்கனென்பையும் உவமை கூறினார்.  பாம்பைக்
கருடன் எளிதில் அஞ்சுவித்தல்போல, பாம்புக்கொடியோனைக் கருடக்
கொடியோன் எளிதில் அஞ்சுவிக்கவல்லவனென்பார், இங்ஙனங் கூறினார். 
பதபற்பம் - முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை.  பற்பம் - பத்மம்
என்னும்வடமொழியின் திரிபு; 'பற்பநாபன்' என்பதிலுங் காண்க.    (257)

198.மைந்துபடைத்துயர்பஞ்சவர்சொற்படிவந்தமலர்க்கழலால்
உந்தியுதைத்துடலம்புதையப்பிலமொன்றியொளித்திடலால்
அந்தணன்முற்பகல்வந்துபுடைத்திடவஞ்சிநிலத்திடைவீழ்
விந்தமொடொத்தனர்வன்குழியிற்றிகழ்வெங்கணரக்கருமே.

     (இ -ள்.) மைந்து - வலிமையை, படைத்து - பெற்று, உயர் - சிறந்த,
பஞ்சவர் - பாண்டவர்களது, சொல் படி - சொல்லின்படி, வந்த - தூது வந்த,
மலர் கழலால் - தாமரைமலர்போன்ற திருவடிகளைக் கொண்டு, உந்தி
உதைத்து - (கண்ணபிரான்) தள்ளி உதைத்தலால், உடலம் புதைய -
உடம்புகள்அழுந்திடும்படி, பிலம் ஒன்றி ஒளித்திடலால் - நிலவறையினுட்
படிந்துமறைந்துவிடுதலால், வல்குழியில் திகழ் வெம் கண் அரக்கரும் -
வலியநிலவறைப் பெரும் பள்ளத்திலே விளங்கிய பயங்கரமான
கண்களையுடையஇராக்கதரெல்லோரும்,- அந்தணன் - அகத்தியமுனிவன்,
முன் பகல் - ஆதிகாலத்தில், வந்து புடைத்திட - அருகில்வந்து
அழுத்தியிட, அஞ்சி - பயந்து,நிலத்திடை வீழ் - பூமியிலே யொடுங்கிய,
விந்தமொடு - விந்தியமலையுடனே,ஒத்தனர் - போன்றார்கள்; (எ - று.)

     பின்னிரண்டடியிற் குறித்தவரலாறு:- முன்னொரு காலத்தில்
விந்தியமலை மேரு முதலிய எல்லா மலைகளினுந் தான் உயரவேண்டு