ஆயுதங்களும்,வெம்பும் உலக்கைகள் - பயங்கரமாகவுள்ள உலக்கைகளும், போர் பொங்கிய வச்சிரம் - போர்த்தொழிலில் மிகுந்த வச்சிராயுதங்களும், உந்து கலப்பைகள் - செலுத்தப்படுகிற கலப்பைகளும், புண் கழு வர்க்கம் - (பகைவரது) தசை தோய்ந்த இருப்பு முட்படைகளின் கூட்டமும், அயில் - பெருவேல்களும், எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் - எவ்விடத்தும் போர்செய்து சிறக்கின்ற (குருதி தோய்தலாற்) சிவந்த உடை வாள்களின் கூட்டமும், தண்டம் - கதாயுதங்களும், இவற்றினொடும் - (ஆகிய) இப்படைகளுடனே, தங்கிய சக்கரம் பந்தி - தனக்கு ஏற்ற சக்கராயுதங்களின் வரிசைகளையும், தரித்தன - தாங்கியிருந்தன; (எ - று.) சக்கரபாணியாதலால், 'தங்கியசக்கரபந்தி' என்றார். பந்தி, சுரிகை - பங்க்தி, க்ஷு ரிகா என்பவைகளின் திரிபு. முந்து எனப் பதம் பிரித்து, சிறந்த என்றும், அலைத்து எனப் பதம் பிரித்து, வருத்தி என்றும் உரைப்பினுமாம். (265) 206. | மேலெழுமங்கதிர்வாளுறைபோம்படிவீசினவான்புடையே தோலினமேந்தினநீள்கவணேந்தினசோரிகள்சோர்ந்திடவே ஞாலமெலாம்பொருதோமரம்வாங்கினநாவொருமூன்றனவாஞ் சூலமொடோங்கினபாசமொடோங்கினசூழ்சிலபூங்கரமே. |
(இ -ள்.) சூழ் சில பூ கரம் - சுற்றிலுமுள்ள சில அழகிய கைகள், - மேல் எழும் அம் கதிர் வாள் - மேலே எழுந்து விளங்குகின்ற அழகிய ஒளியையுடைய வாளாயுதங்களை, உறைபோம்படி - உறைகழியும்படி, வீசின - எடுத்து மேலெறிந்தன; வான் புடையே - ஆகாயத்தினிடத்தே [மிகஉயரத்தி லென்றபடி], தோல் இனம் ஏந்தின - தோலினாலமைந்த பல கேடகமென்னும் ஆயுதங்களைத்தரித்தன; நீள் கவண் ஏந்தின -நெடுந்தூரஞ்செல்லுந் தன்மையனவான கவண்கற்களை எறிதற்கு எடுத்தன;சோரிகள்சோர்ந்திட - (பகைவருடல்களில்) இரத்தவெள்ளமொழுகும்படி, ஞாலம்எலாம் பொரு தோமரம் வாங்கின - உலகத்தவரெல்லாரோடும் போர்செய்துஅழிக்கவல்ல தோமரமென்னும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டன; நா ஒருமூன்றன ஆம் சூலமொடு ஓங்கின - மூன்றுநாக்குகளையுடையனவாகியசூலாயுதங்களோடு உயர்ந்தன; பாசமொடு ஓங்கின - கயிற்று வடிவமானபாசமென்னு மாயுதங்களோடு உயர்ந்தன; (எ - று.) இப்பாட்டில் எல்லா வாக்கியங்களுக்கும் 'சிலகரம்' என்பதே எழுவாய். கீழ்ப்பாட்டில், சுரிகை என உடைவாள் வந்ததனால், இங்கே வாள் என்றது - பெரிய வாளை. மேலெழும் அங்கதிர்வாள் என்பதற்கு - ஆகாயத்தில் விளங்குகின்ற சூரியன்போல் ஒள்ளிய வாளெனினும் அமையும். தோல் - கருவியாகுபெயர். ஞாலம் - இடவாகுபெயர். கவண் - எறிகல். தோமரம்- பேரீட்டி. நாவொரு மூன்றனவாஞ் சூலம் - முத்தலைவேல். (266) 207. | சிலசிலகைத்தலமடுகழலிற்பலதிணிகழல்கட்டினவே சிலசிலகைத்தலமறுகுபுயத்திடைசெறிதொடையிட்டனவே |
|