பக்கம் எண் :

250பாரதம்உத்தியோக பருவம்

னுயிர்வரின்யகரமெய்தோன்றும்" என வழங்குஞ் சூத்திரத்தையும் உணர்க.
பாயிரம் என்றது - வேதத்தின் முதலிலுள்ள பிரணவ மகா மந்திரத்தை; இனி,
பாயிரம் - புகழ்ச்சி எனக்கொண்டு, பாயிரமறை - கடவுளைத் துதிப்பனவான
வேதமென்றுமாம்.  ஞாலமெலாம் வெளியாய் என்று எடுத்து - உலகமுழுவதும்
விளக்கமடைய என்று உரைப்பினும் அமையும்.  ஆய் - ஆக; எச்சத்திரிபு.
ஆயிரமாயிரம் - ஆயிரத்தாற் பெருக்கிய ஆயிரம்.                (268)

209.

ஆரணனேயரனேபுவனங்களனைத்தையுமன்றுதவுங்
காரணனேகருணாகரனேகமலாசனிகாதலனே
வாரணமேபொதுவேயொருபேரிடவந்தருளும்புயலே
நாரணனேமுனியேன்முனியேலெனநாகர்பணிந்தனரே.

     (இ -ள்.) 'ஆரணனே - பிரமரூபியே! அரனே - உருத்திர ரூபியே!
புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும் காரணனே -
உலகமெல்லாவற்றையும் அக்காலத்தில் [சிருஷ்டிகாலத்தில்] படைத்தருளிய
மூலகாரணக் கடவுளே! கருணா ஆகரனே - திருவருளுக்கு
இருப்பிடமாகவுள்ளவனே! கமலா ஆசனி காதலனே - தாமரை மலரைத்
தங்குமிடமாகவுடைய திருமகளுக்கு அன்புள்ளகொழுநனே! வாரணம் - ஒரு
யானை [கஜேந்திரன்], பொதுவே - பொதுவாகவே, ஒரு பேர் இட -
(ஆதிமூலமே என்று) ஒருபெயரை இட்டுக் கூவியழைக்க, வந்து - உடனே
எழுந்தருளிவந்து முன்நின்று, அருளும் - கருணைசெய்த, புயலே -
காளமேகம்போன்றவனே! நாரணனே - நாராயணனே!  முனியேல் முனியேல்
-கோபியாதே கோபியாதே', என - என்று கூறி, நாகர் - சுவர்க்கலோக
வாசிகளான தேவர்கள், பணிந்தனர் - வணங்கினார்கள்;(எ-று.)

     ஆரணம்- வேதம், பிரமன் எப்போதும் நான்குமுகங்களாலும் நான்கு
வேதங்களையும் ஓதுதல்பற்றி ஆரணன் என்று பெயர்.  திருமால்
பிரமரூபியாய்நின்று படைத்தலையும் தானானநிலையில் நின்று காத்தலையும்
உருத்திரரூபியாய் நின்று அழித்தலையுஞ் செய்கின்றனனென்பது
நூற்கொள்கையாதலால், 'ஆரணனே யரனே' என அபேதமாகக்கூறினர்;
"நீராய் நிலனாய்த்தீயாய்க் காலாய் நெடுவானாய்ச், சீரார்சுடர்க ளிரண்டாய்ச்
சிவனாயயனானாய்","முனியே நான்முகனே முக்கண்ணப்பா" என்றார்
திருவாய்மொழியிலும்."மூவர் காரியமுந் திருத்தும் முதல்வன்" எம்பிரான்
என்றபடி. கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று
பொதுப்படக்கூப்பிட்டபொழுதுஎம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும்
தாம்தாம் அச்சொல்லுக்குப்பொருளல்ல ரென்று கருதியொழிய திருமால்
தாமே வந்து அருள்செய்தனரென நூல்கள் கூறும். "அழைத்ததுசெவியிற்
கேட்டுமயனரனாதியாயோர், புழைக்கை வெங்கரிமுன்காப்பப்
புகுந்திலராதியாகித்,தழைத்த காரணனேயென்ற தனிப்பெயர்ப்பொருள்
யாமல்லோ, மிழைத்தகாரியம்யாமாவோ மென்செய்து மாலின் றென்றார்"
எனப்பாகவதத்திலுங் காண்க:"அண்டரெலாம் யாம் மூலமலேமென் றகல்
போழ்திற், புண்டரிகக்கட் புண்ணியனன்புள் ளரசின்மேற்,
கொண்டெதிரெய்திக்கரியர செய்துங்