பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 253

213 - கண்ணன் விசுவரூபத்தைஅடக்கிக்கொள்ளுதல்.

தேவரும்வாசவனுந்தவருந்திசைமுகனுநராதிபரும்
யாவருமன்பினொடாயிரநாமமுமெண்ணியிறைஞ்சுதலான்
மூவருமொன்றெனநின்றருணாதனுமுனிவுதவிர்ந்தருளா
மீவருமண்டமுறுந்திருமேனியொடுங்கினன்மீளவுமே.

     (இ -ள்.) தேவரும் - தேவர்களும், வாசவனும் - (தேவர்களுக்கு
அரசனான) இந்திரனும், தவரும் - தவஞ்செய்துள்ள முனிவர்களும்,
திசைமுகனும் - நான்கு திக்கையும் நோக்கின நான்கு முகத்தையுடைய
பிரமனும், நர அதிபரும் - மனிதர்களுக்குத் தலைவரான அரசர்களும்,
யாவரும் - (மற்றும்) எல்லோரும், அன்பினொடு - பக்தியுடனே, ஆயிரம்
நாமமும் எண்ணி - (எம்பெருமானது) ஆயிரந்திருப்பெயர்களையுந்
தியானித்து,இறைஞ்சுதலால், - வணங்கினதனால், - மூவரும் ஒன்று என
நின்றருள்நாதனும் - திரிமூர்த்திகளும் ஏக மூர்த்தி யென்னும்படி
(அவ்வவ்வடிவமாய்)நின்றருளுகிற தலைவனான கண்ணனும், முனிவு தவிர்ந்து
அருளா -கோபந்தணிந்தருளி, மீவரும் அண்டம் உறும் திருமேனி -
மேன்மைபொருந்திய அண்ட கோளமுழுவதிலும் பரந்த (தனது) பெரிய
அவ்விசுவரூபம்,மீளவும் ஒடுங்கினன் - மறுபடி ஒடுங்கப்பெற்றான்; (எ - று.)

    ஆயிரநாமம் - ஸஹஸ்ர நாமம்.  இறைஞ்சுதலால் ஒடுங்கினன் என்று
இயையும்.  தவர் என்பதற்கு - தபோலோகத்தவரென்று உரைப்பாரு முளர்.
சர்வசங்கார காலத்தில் பிருமருத்திரர் திருமாலின் திருமேனியில்
ஒடுங்குதலால்,'மூவருமொன்றென நின்றருள் நாதன்' என்றார்.    (273)

214.-துரியோதனன் சிறிதும்மனஞ்சலியாமை.

தன்னிலுயர்ந்தவர்யாருமிலாமுகில்சதுர்மறையின்படியே
யெந்நிலமுந்திருவடியின்மறைந்திடவிப்படிநின்றிடவும்
பின்னையுமஞ்சியயர்ந்திலனெஞ்சுபெயர்ந்திலனாசனமும்
சென்னியிலுங்கரம்வைத்திலன்வண்புகழ்சிறிதுமொழிந்திலனே.

     (இ -ள்.) தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் -
தன்னைக்காட்டிலுஞ் சிறந்தவ ரெவரையும் பெறாத காளமேகம்போன்ற
கண்ணபிரான், சதுர்மறையின்படியே - நான்கு வேதங்களிற் கூறியுள்ளபடியே,
எந்நிலமும் திரு அடியில் மறைந்திட - பூலோகம் முழுவதும் தனது
திருவடியின்கீழ் மறைந்தபோம்படி, இப்படி நின்றிடவும் - இவ்வாறு (பெரிய
விசுவரூபத்தைக்கொண்டு) நிற்கையிலும், பின்னையும் - அவ்வடிவமொடுங்கிய
பின்பும், (துரியோதனனொருவன்), அஞ்சி - பயந்து, நெஞ்சு அயர்ந்திலன் -
மனம் சோர்ந்தானில்லை; ஆசனமும் பெயர்ந்திலன் - (தான் வீற்றிருந்த)
சிங்காதனத்தினின்று சிறிது எழுந்தானுமில்லை; சென்னியிலும் கரம்
வைத்திலன்- (தன்) தலையின்மேற் கைகளைவைத்தானுமில்லை; வள் புகழ்
சிறிதும்மொழிந்திலன் - சிறந்த (அப்பிரானது) கீர்த்தியைச் சிறிதாயினுங்