மன்னவர்ஐவரும் - பாண்டவராசர் ஐந்து பேரும், உன்னில் உனக்கு இளையோர் - ஆலோசித்துப் பார்க்குமிடத்து உனக்குத் தம்பியராவர்; (எவ்வாறெனின்), - பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை - பெண்மைக்குணங்களாற் சிறந்த குந்திதேவியினது வயிற்றிலே, பெருமையினால்இதயம் திண்மையினால் உயர் நின்னையும் - பெருந்தன்மையினாலும்மனவுறுதியினாலுஞ் சிறந்த உன்னையும், அன்பொடு - அன்புடனே, தினகரன்- சூரியன், நல்கினன் - (அவர்களுக்கு முன்பு) (பெற்றான்; (எ - று.) இதயத்திண்மை - தைரியம். வண்மை - ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். (278) 219. | ஏயுநெடுங்கொடிமுரசுடையோனையெழிற்றருமன்றரவே வாயுவழங்கினன்வீமனைநல்கினன்விசயனைவாசவனும் ஆயுநிகழ்ந்திடுவேதமருத்துவரன்பொடளித்தனர்செந் தேயுவெனுந்திறனகுலனையுஞ்சகதேவனையும்பெரிதே. |
(இ -ள்.) (உன்னைச் சூரியன் பெற்றபின்பு குந்தியினிடத்தில்), ஏயும் நெடு கொடி முரசு உடையோனை - பொருந்திய பெரிய முரசக்கொடியுடைய யுதிட்டிரனை, எழில் தருமன் - அழகிய யமதருமராசன், தர - உண்டாக்க, வாயு -, வீமனை - பீமசேனனை, வழங்கினன் - பெற்றான்; வாசவனும் - இந்திரனும், விசயனை - அருச்சுனனை, நல்கினன் - பெற்றான்; ஆயு நிகழ்ந்திடு வேதம் மருத்துவர் - ஆயுளைப் பற்றிக் கூறுகிற வேதத்தை யறிந்ததேவவைத்தியர்களான (இரட்டையராகிய) அசுவிநீதேவர்கள், செம் தேயு எனும்திறல் நகுலனையும் சகதேவனையும் - செந்நிறமுள்ள அக்கினியெனத்தக்கபராக்கிரமத்தையுடைய நகுலன் சகதேவன் என்னும் இரடடைப்பிள்ளைகளை,பெரிது அன்பொடு அளித்தனர் - மிகுதியான அன்புடனே பெற்றார்கள்;(எ -று.) மாத்திரியினிடம் பிறந்தவரான நகுலசகதேவரை இங்கே குந்தி மைந்தராகஅபேதமாகக் கூறியது - அந்தமாத்திரிக்கு அந்த மந்திரத்தை உபதேசித்தவள்குந்தி யாதலாலும், பாண்டுவோடு மாத்திரி சககமனஞ்செய்து இறந்துவிடஇவ்விருவரையும் குந்தியே அன்போடு வளர்த்தன ளாதலாலு மென்க. குந்திநினைத்த அப்பொழுது கூற்றுவன் கோரவடிவமின்றிச் சாந்தமானதொருவடிவங்கொண்டு வந்தமைதோன்ற, 'எழிற்றருமன்' என்றார். மருத்துவர் -மருந்தின் தன்மையறிந்து செய்துதருபவர்; இதில், பகுதி - மென்றொடர்வன்றொடராயிற்று. பராக்கிரமத்தைச் செந்நிறமுடையதென்று வருணித்தல்கவிமரபாதலாலும், பராக்கிரமம் பிறரையழிக்கவல்லதாதலாலும், 'செந்தேயுவெனுந்திறல்' எனப்பட்டது. வெற்றிக்கு ஏற்ற கொடியென்பார், 'ஏயுநெடுங்கொடிமுரசு' என்றார். (279) 220. | அந்தணன்முன்றருமந்திரமைந்தினிலறுவரையுங்கடவுட் குந்திபயந்தனள்யானினியென்பலகூறுவதுங்களினீர் |
|