எண்ணம்முடியுமென்ற தெளிவால். முந்தக் கருதுகின்ற - முன்னமே தொடங்கி எண்ணி வருகின்ற என்றும், தவிசினிடையே உடனிருத்தி - தானிருந்த ஆசனத்திலேயே உடன் வீற்றிருக்கச்செய்து என்றும் உரைக்கலாம். முந்தக் கருதுகின்ற வினை - கர்ணனாற் போரில் அருச்சுனன் கொல்லப்படாதபடி காத்தல் கருதுகின்ற வினை. பெயரெச்சம், செயப்படுபொருள் கொண்டது. (291) 232.- இதுமுதல் ஆறு கவிகள் -ஒரு தொடர்: கண்ணன் இந்திரனுக்கு உபாயங் கூறுதல். கிரியின்சிறகையரிபடையாய்கேண்மோவாண்மைக்களமீதில் வரிவெஞ்சிலைக்கைவிசயனுக்குமாறாய்முனிந்துவருகின்ற வெரியுங்கனல்வாய்விடவரவொன்றிவனுக்குற்றபகையான அரியின்புதல்வன்றனக்கொருபேரம்பாகியதாரறியாதார். |
(இ -ள்.) கிரியின் சிறகை அரி படையாய் - மலைகளின் இறகுகளை அறுத்திட்ட வச்சிராயுதமுடையவனே! கேண்மோ - (யான் சொல்வதைக்) கேட்பாயாக; ஆண்மை களம் மீதில் - பராக்கிரமத்தைக் காட்டுதற்கிடமான போர்க்களத்து முனையில், வரி வெம் சிலைக்கை விசயனுக்கு மாறு ஆய் - கட்டமைந்த கொடிய வில்லையேந்திய கையையுடைய அருச்சுனனுக்குச் சத்துருவாகி, முனிந்து வருகின்ற - (நெடுநாளாகக்) கறுக்கொண்டுவருகிற, எரியும் கனல் வாய் விடம் அரவு ஒன்று - பற்றியெரிகிற நெருப்புப்போன்ற நுனியையுடையதொரு விஷப்பாம்பு, இவனுக்கு உற்ற பகை ஆன அரியின் புதல்வன் தனக்கு - இவ்வருச்சுனனுக்கு மிகுந்த பகையாளியாகிய சூரிய புத்திரனான கர்ணனுக்கு, ஒரு பேர் அம்பு ஆகியது - ஒரு பெரிய அஸ்திரமாயமைந்திருப்பதை, அறியாதார் ஆர் - (உலகத்தில்) அறியாதவர் எவர்? [யாருமில்லை; மிகப் பிரசித்தமாக எல்லோரும் அறிவர் என்றபடி]; (எ -று.) எரியுங் கனல்வாய் அரவு என்பதற்கு - (காண்டவவனத்தில்) எரிகிற அக்கினியினின்று எழுந்த பாம்பென்றும் உரைக்கலாம். கேண்மோ, மோ - முன்னிலை யசை. அரியென்னும் பலபொருளொரு சொல், இங்கே சந்தருப்பத்திற்கேற்பச் சூரியனைக் குறித்தது: (இருளை) அழித்தல்பற்றி, ஹரியென்று சூரியனுக்குப் பெயர். இனி, ஆய் என்பதை ஆகவென்பதன் திரிபெனக்கொண்டு, மாறு ஆய் - சத்துருவாதற்கு என்றுமாம். (292) 233. | கன்னன்விசயன்றனைக்கொல்லிற்கடற்பார்முழுதுங்கண்ணில்லா மன்னன் புதல்வன்றனக்கேயாமொழிந்தோர் தாமுமடிந்திடுவார் முன்னஞ்சூதின் மொழிந்தபகை முடியாதிருக்கினவர்க்கன்று நின்னெஞ்சறியயானறிய நினக்கேவசையுநிலையாமே. |
(இ - ள்.) (அந்த அம்பைக்கொண்டு), கன்னன் விசயன்தனை கொல்லின்- கர்ணன் அர்ச்சுனனைக் கொன்றிட்டால், கடல் பார் முழுதும் - கடல் சூழ்ந்த பூலோகம் முழுதும், கண் இல்லா மன்னன் புதல்வன் தனக்கே ஆம் - திருதராட்டிர புத்திரனான துரியோதன |