இதுமுதற் பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும் மாச்சீர்களும், மற்றவையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். (298) 239.-கர்ணன் உள்ளேவந்தஇந்திரனை வணங்கி உபசரித்தல். அடுத்ததானமும்பரிசிலுமிரவலர்க்கருளுடன் முற்பகலளவுங், கொடுத்துநாயகன் புகுந்தனனாளைநீர்குறுகுமினென்றவன்கோயிற், றடுத்தவாயிலோர்மீளவுமுணர்த்தலிற்றலைவனுந்தருகென விரைவின், விடுத்தநான்மறை முனியைமுன் காண்டலும் வேந்தனுந் தொழுதடிவீழ்ந்தான். |
(இ -ள்.) (இங்ஙனம் இந்திரன் பெருங்கிழவனாய் மிகமெதுவாகச்சிரமப்பட்டுச் சென்று சேர்கையில் காலதாமதப்பட்டதனால்), 'இரவலர்க்கு - யாசகர்களுக்கு, அடுத்த தானமும் - செய்தற்கு உரிய தானங்களையும், பரிசிலும் - வெகுமானங்களையும், அருளுடன் - கருணையுடனே, முன் பகல் அளவும் - பகலின் முற்பொழுது கழியும் வரையிலும், கொடுத்து -, நாயகன் - எங்கள் தலைவனான கர்ணன், புகுந்தனன் - உள்ளே சென்றுவிட்டான்; (ஆதலால்), நாளை நீர் குறுகுமின்- நாளைக்கு நீர் வாரும்,' என்று - என்று சொல்லி, தடுத்த - (முதலில்) தடைகூறின, அவன் கோயில் வாயிலோர் - அக்கன்னனது அரண்மனையின் வாசற்காவலாளர்கள், மீளவும் - மறுபடி சென்று, உணர்த்தலின் - (இந்த விருத்த வேதியனது வருகையைக் கன்னனுக்குத்) தெரிவித்ததனால், தலைவனும்- எசமானனான கர்ணனும், தருக என - (அவரை உள்ளே) வர விடுங்களென்றுசொல்ல, விரைவின் விடுத்த - துரிதமாக உள்ளே யழைத்து வந்துவிடப்பட்ட, நால்மறை முனியை - நான்கு வேதங்களும் வல்ல அம்முனிவனை, முன் காண்டலும் - எதிரிற் பார்த்தவளவிலே, வேந்தனும் - கர்ணமகாராஜனும், தொழுது - கைகூப்பி அஞ்சலிசெய்து, அடி வீழ்ந்தான் - (அவனது) திருவடிகளில் வீழ்ந்து (சாஷ்டாங்கமாக) நமஸ்கரித்தான்; (எ - று.) தடுத்தவாயிலோர் மீளவும் உணர்த்துதற்குக் காரணம், இவனது மூப்பின் முதிர்ச்சியை நோக்கி யெழுந்த இரக்கம். நீர் குறுகுமின் - சிறப்புப்பன்மை. முற்பகல் - பின்முன்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை; இலக்கணப்போலி யெனப்படும். முற்பகல் - பகலின் முன்பாதி. முன்றிலினிடத்திலிருந்து கொடுத்தல் இயல்பாதலால், 'கொடுத்துப் புகுந்தனன்'என்றார். (299) 240.-'நீ விரும்பியவற்றைக்கொடுப்பேன்' என்று கர்ணன் இந்திரனுக்குக் கூறுதல். என்னமாதவம் புரிந்தனன் பரிந்துநீ ரீண்டெழுந்தருளுதற் கென்று, பொன்னினாசனத் திருத்திமெய் யருளுடன் பூசையுமுறை முறைபுரிய, அன்னவேதியன் றளர்ந்தவென்னடையினாலானதே பிற்பக |
|