கறுத்தவர் -எதிரிற் கோபித்துநின்ற பகைவர்களை, கண் இணை சிவப்ப - இரண்டு கண்களும் சிவக்கும்படி, உருத்த - உக்கிரமாகச் செய்கிற, போரினில் - யுத்தத்தில், புறம் தரு - முதுகு கொடுத்துச் செல்கிற, நிருபர் - அரசர்கள் போய்ச் சேர்கிற, பதம் - துர்க்கதியை, உறுவன் - அடைவேன்', என்று உரைத்தான் - என்று கூறினான்; (எ - று.) கருத்தின்றிக் கொடுத்தல், சிறப்புடைய தானமாகாது. கருமை யென்ற பண்படி திரிந்து வினைப்பகுதித் தன்மைப்பட்ட கறுத்தல் என்பது -ஒருவகை நிறத்தை மாத்திரமே யன்றிக் கோபத்தையும் உணர்த்துவதாதலை, "கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப்பொருள" என்னுந் தொல்காப்பியத்தாலும் அறிக. வீரர்க்கும்போரில் புறந்தருதல் மிகப்பாவம். இங்கே, நகைத்தல் - தன்னைப்பிறன்இகழ்ந்தது காரணமாக வந்தது. அளித்தியோ, ஓகாரம் - வினாவோடுஎதிர்மறை குறிக்கும். விருத்தன் - வருத்தன்; வடமொழி.(301) 242.- கர்ணன்இந்திரனுக்குக் கவசகுண்டலங்களை அளித்தல். வந்தவந்தணன் கவசகுண்டலங்களை வாங்கிநீவழங்கெனக்கென்னத் தந்தனன்பெறுகெனவவன்வழங்கவிண்டலத்திலோர் தனியசரீரி யிந்திரன்றனைவிரகினான் மாயவனேவினான்வழங்கனீயெனவுஞ் சிந்தையின்கணோர்கலக்கமற் றளித்தனன்செஞ்சுடர்த்தினகரன் சிறு [வன். |
(இ -ள்.) (அதுகேட்டு), வந்த அந்தணன் - (இரப்பதற்கு) வந்த அந்த பிராமணன், கவசகுண்டலங்களை வாங்கி நீ எனக்கு வழங்கு என்ன - ('கூடப்பிறந்த) கவசத்தையுங் குண்டலங்களையும் (உன் உடம்பினின்று) கழற்றி நீ எனக்குக்கொடு' என்று கேட்க, (உடனே), அவன் - அக்கன்னன், 'தந்தனன் பெறுக என வழங்க - கொடுத்து விட்டேன் பெற்றுக்கொள்வாயாக' என்று சொல்லி (அவற்றை) அவனுக்குக் கொடுக்கலுறுகையில், விண்தலத்தில் - ஆகாயத்தினிடத்திலே, ஓர் தனி அசரீரி - ஒப்பிலாததொரு ஆகாயவாணி, (கன்னனைநோக்கி), 'மாயவன் இந்திரன்தனை விரகினால் ஏவினான் - கண்ணன் இந்திரனை வஞ்சனையால் (இங்ஙனம் இரக்க) அனுப்பினான்; (ஆதலால்), நீ வழங்கல் - நீ கொடுத்திடாதே,' எனவும் - என்று சொல்லவும்,-(அதுகேட்டு இல்லை என்னாமல்), செம் சுடர் தினகரன் சிறுவன் - சிவந்தகிரணங்களையுடைய சூரியனது புத்திரனான கர்ணன், சிந்தையின் கண் ஓர்கலக்கம் அற்று - மனத்திற் சிறிது கலங்குதலு மில்லாமல், அளித்தனன் -(அவனுக்கு அவற்றைக்) கொடுத்திட்டான்; (எ - று.) இதனால், கர்ணனது வரம்புகடந்த வள்ளன்மை விளங்கும். வடமொழி முடிபான கவசகுண்டலமென்னும் உம்மைத்தொகை, பன்மையீறு பெற்றது. தந்தனன்-தெளிவும் விரைவும் பற்றி, எதிர் காலம் இறந்த காலமாயிற்று. அசரீரி - உடம்புடையதல்லாத சொல் தெய்வம்: ஓருருவமுங் கண்ணுக்குப் புலப்படாமல் பேச்சுமாத்திரங்கேட்பது. இது இங்குச் சூரியனேவலால் இங்ஙனம்கூறிற்று. |