உண்மையையுணர்த்து எடுத்துக் கூறின உயர்வை நோக்கி இதற்கு 'தனி' என்றஅடைமொழி ஏற்கும். சூரியனது தொழில் எதனாலுந் தடைப்படாததுபோல,இவனது தொழிலும் எதனாலுந் தடுக்கப்படாதது என்ன, 'தினகரன் சிறுவன்'என்றார். (302) 243.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: இந்திரன்கர்ணனுக்கு வேல் கொடுத்தல். அண்டர்யாவருமலர்மழைபொழிந்தனரந்தரதுந்துபியார்ப்பக், கொண்டல்வாகனன் கொண்டமெய்யொழிந்துதன்கோலமெய்யுடன் வெளிநின்றான், கண்டுமாமனமுருகியேகளித்திடுங்கன்னனுக்கந்நெடுங்கடவுண், மண்டுபோரினில் வயந்தருமிதுவென மற்றோரு கொற்றவே லெடுத்தே. |
(இ-ள்.) (அங்ஙனங்கொடுத்தபொழுது), அண்டர் யாவரும் - தேவர்களெல்லோரும், அந்தர துந்துபி ஆர்ப்ப - ஆகாயத்திலுள்ள தேவதுந்துபி வாத்தியங்கள் முழங்க, அலர் மழை பொழிந்தனர் - புஷ்பவருஷத்தைச் சொரிந்தார்கள்; கொண்டல்வாகனன்-மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன், கொண்ட மெய் ஒழிந்து - (தான் கபடமாக) எடுத்த கிழப்பிராமண வடிவம் நீங்கி, தன் கோலம் மெய்யுடன் வெளி நின்றான்- தனது அழகிய இயற்கையாகிய வடிவத்துடனே வெளிப்பட்டுநின்றான்;கண்டு-(அங்ஙனம் தேவராசனான இந்திரன் தன்னிடம் வந்து இரந்துபெற்றதைப்) பார்த்து, மா மனம் உருகி - பெருமைக் குணமுடைய தனது மனங்கரைந்து, களித்திடும் - மிக மகிழ்கிற, கன்னனுக்கு - கர்ணனுக்கு, அ நெடுங்கடவுள் - அந்தச் சிறந்த தேவனான இந்திரன், மற்று-பின்பு, மண்டு போரினில்வயம் தரும் இது என - 'கொடுமையாகிய மிக்க யுத்தத்தில் வெற்றியைக்கொடுக்கும் இவ்வாயுதம்' என்று கூறி, ஒரு கொற்றவேல் எடுத்து -வெற்றியைத்தருவதொரு வேலாயுதத்தைக் கையிலெடுத்து, (எ - று.) -'கொடுப்ப'என மேற்கவியோடு தொடரும். அலர்மழை பொழிதல் - பூக்களை மழைபோல மிகுதியாகச் சொரிதல்; அந்தர துந்துபி - வடசொற்றொடர். வாஹநம்-வகிப்பதென்று பொருள். வகித்தல் - சுமத்தல். காளமேகத்தை இந்திரனுக்கு வாகன மெனக் கூறுதல் கவிசமயம். தெய்வத்தன்மையால், நினைத்தலும் வேல் இந்திரன் கைக்கு வந்தது. யாவரும் மலர் என்றும்பிரிக்கலாம். (303) 244. | வெலற்கருந் திறல்விசயன்மேலொழித்துநீ வெஞ்சினமடங்கல் போனெஞ்சிற், கலக்கமொன்றறப்பொருதிறல்புனைந்திடுகடோற்கசக்காளை தன்னுயிரே, யிலக்குவந்தெதிர்மலைந்தபோதிதற்கெனவே வெனமறையையுமியம்பிச், சொலற்கரும்புகழ்ச்சுரபதிகொடுப்பவத்தோன்றலுந்தொழுதுகைக் கொண்டான். |
(இ -ள்.) '(இந்த வேலாயுதத்தை), நீ-, வெலற்கு அருந்திறல்விசயன் மேல் ஒழித்து - (எவராலும்) வெல்லுதற்கு முடியாத வல்லமையையுடைய அருச்சுனன்மேற் பிரயோகிப்பதை விட்டு, வெம் சினம் மடங்கல்போல்- கொடியகோபத்தையுடைய ஆண்சிங்கம் |