போல,நெஞ்சில் கலக்கம் ஒன்று அற - மனத்தில் நிலைகலங்குதல் சிறிதுமில்லாமல், பொரு - போர்செய்கிற, திறல் - வல்லமையை, புனைந்திடு- மேற்கொண்டுள்ள, கடோற்கசன் காளை தன் - (வீமன் மகனாகிய) கடோற்கசனென்னும் இளவீரனது, உயிரே - பிராணனே, எதிர் வந்து மலைந்தபோது - (அவன்) எதிரில் வந்து போர்செய்த பொழுது, இதற்கு இலக்கு என - இந்த ஆயுதத்துக்குக் குறியாக இருக்க, ஏவு - (இதனை அவன்மீது) பிரயோகிப்பாய்,' என - என்று சொல்லி, மறையையும் இயம்பி - (அதற்குஉரிய) மந்திரத்தையும் உபதேசித்து, சொலற்கு அரும்புகழ் சுரபதி - (எவராலுஞ்) சொல்லுதற்குமுடியாத கீர்த்தியையுடைய தேவராசனான இந்திரன், கொடுப்ப-(அந்தவேலைக்) கொடுக்க, அ தோன்றலும் - அந்தக்கர்ணராசனும், தொழுது - (இந்திரனை) வணங்கி, கைக்கொண்டான் - (அவ்வாயுதத்தைப் பணிவோடு) பெற்றுக்கொண்டான்; (எ - று.) வீமசேனன், மற்றைப் பாண்டவர்நால்வரையுங் குந்தியையுந் தோளிலேந்திக்கொண்டு, அரக்குமாளிகையினின்று தப்பிப் பிழைத்து, இடிம்பவன மென்னும் பெருங்காட்டை யடைய, அங்கு இடிம்பியென்னும் இராக்கதப்பெண் வந்து வீமனைக்கண்டு காதலித்து விவாகஞ் செய்துகொள்ளவேண்டுகையில், அவளது அண்ணனான இடிம்பனென்னும் இராக்கதன் வந்து வீமனை யெதிர்த்துப் போர்செய்ய, வீமன் தனது வலிமையால், அவனைக் கொன்றுதள்ளி விட்டு, அவளை மணந்து, அவளிடம் கடோத்கசனென்னுங் குமாரனை யுண்டாக்கினானென்பது கீழ் வேத்திரகீயச்சருக்கத்திற் காண்க. அக்கடோற்கசன் பாண்டவர்க்குத் துணையாகவந்து போர் செய்யுமாறும், அப்பொழுது இவ்வேலினால் கன்னன் அவனைக் கொல்லுமாறும், மேற் பதினான்காம்போர் நாளிரவில் நிகழும். மடங்கல் - பிடரிமயிர் மடங்குதலையுடையதெனத் தொழிலாகுபெயராகிய காரணக்குறி யென்பர்; அடிக்கடி பின்னே திரும்பிப்பார்ப்பதென்றதனால் வந்தபெயரென்பாருமுளர். (304) 245.-இந்திரன்கண்ணனிடம்சென்று நடந்ததைக் கூறுதல். நிரந்தரம்புகழ்நிலைபெறுங்கன்னனை நெஞ்சுறமகிழ்ந் தவணிறுத்திப், புரந்தரன்பசுந்தண்டுழாயணிந்திடும் புயல்வணனிருந்துழிப் போந்தே, யிரந்துசென்றுதான் மொழிந்ததுமவ்வளவீந்ததுமாங்கவற்கிசைத் தான், வரந்தருந்திருமாலதைவினவியவ் வாசவன்றனக்குரை வழங்கும். |
(இ-ள்.) (பின்பு), புரந்தரன் - இந்திரன், நெஞ்சு உற மகிழ்ந்து-மனம் மிகமகிழ்ச்சிபெற்று, நிரந்தரம் புகழ்பெறும் கன்னனை அவண் நிறுத்தி- இடைமாறாமல் [எப்பொழுதுங்] கீர்த்திநிலைபெற்ற கர்ணனை அவ்விடத்திலே நிற்கச்செய்து [தான் விடைபெற்றுக்கொண்டு], பசுந்தண் துழாய் அணிந்திடும் புயல்வணன் இருந்த உழி போந்து - பசுநிறமான குளிர்ந்த திருத்துழாய்மாலையைத் தரித்திட்ட காளமேக வர்ணனாகிய கண்ணபிரான் எழுந்தருளியுள்ள இடத்தை அடைந்து, -தான் சென்று இரந்து மொழிந்ததும்- தான் (கன்னனிடம்) போய் |