பக்கம் எண் :

278பாரதம்உத்தியோக பருவம்

249.-குந்தி கர்ணனைநோக்கி'நான் உனக்குத் தாய்' என்றல்.

அன்னைவந்ததென்னருந்தவப்பயனெனவன்பினாலின்புறவணங்கி,
யென்னைவந்தவாறென்னமற்றவளுமே யீன்றதாயானுனக்கென்று,
முன்னைவந்தொருமந்திரந்தவமுனி மொழிந்ததுங் கதிரவனருளாற்,
பின்னைவந்ததும்பேழையில்விடுத்ததும் பிழையிலா துரைத்திடக்
                                            கேட்டே.

இதுமுதல் மூன்று கவிகள் - ஒரு தொடர்.

     (இ -ள்.) 'அன்னை - தாயே! வந்தது - (நீ என்னிடம்) வந்தது, என்
அருதவம் பயன் - எனது அருமையான தவத்தின் பயனாம்', என - என்று
சொல்லி, அன்பினால்-, இன்பு உற வணங்கி - மகிழ்ச்சி பொருந்த (அவளை)
நமஸ்கரித்து, வந்த ஆறு என்னை என்ன - '(நீ இங்கே) வந்த காரியம்
என்ன? என்று கேட்க,- மற்று - பின்பு, அவளும் - அக்குந்தியும், யான்
உனக்கு ஈன்ற தாய் என்று - 'நான் (உடனே), - தவம் முனி - தவத்திற்
சிறந்ததுர்வாசமுனிவன், முன்னை - இளம்பிராயத்திலே, வந்து-, ஒரு
மந்திரம் - ஒருமந்திரத்தை, மொழிந்ததும் - (தனக்கு)
உபதேசித்தருளினதையும், கதிரவன்அருளால் - சூரியனது அனுக்கிரகத்தால்,
பின்னை - பின்பு, வந்ததும் -(கன்னன்) பிறந்ததையும், பேழையில்
விடுத்ததும் - (தான் அவனைப்)பெட்டியில் (வைத்து நதியிற்)
செலுத்தினதையும், (ஆகிய வரலாறுகளை), பிழைஇலாது உரைத்திட -
தவறுதலில்லாமற் சொல்ல, கேட்டு - (கர்ணன்)செவியுற்று,-(எ - று.) -
'மதித்து' என மேற்கவியோடு குளகமாக இயையும்.

     அன்னை- அண்மைவிளி; அன்னையாகிய நீ என முன்னிலைப்
படர்க்கையுமாம்.  "சாபத்தாலுஞ் சாபமொழிதன்னால் வளருந்தவத்தாலுங்,
கோபத்தாலும் பேர்படைத்த கொடிய முனிவன் துருவாசன்,' ஆதலால்,
'தவமுனி'  என்றார்.  உனக்கு ஈன்ற தாய் - நான்காம் வேற்றுமை
முறைப்பொருளது.                                       (309)

250.-கர்ணன் சில கூறி அதனைமறுத்தல்.

மாயனார்விரகிதுவென மனத்தினின் மதித்துவந்தளித்திடும்
                                       வள்ளல்,
நீயநாளெனைப் பயந்தவளென்னினு நின்மொழி நெஞ்
                                   சுறத்தேறேன்,
பேயனார்சிலர் பேரறிவின்மையாற் பெற்றதாயெனக் கெனவந்து,
தூயநாகரினமைந்ததோர் துகிலாற்றுன்பமுற்றென்புரு வானார்.

     (இ -ள்.) உவந்து அளித்திடும் வள்ளல் - (தன்னை வந்து
அடைபவர்க்கு வேண்டிய பொருள்களை) மகிழ்ச்சியோடு கொடுத்திருக்கிற
உதாரணகுணமுள்ளவனாகிய கர்ணன்,- இது மாயனார் விரகு என மனத்தினில்
மதித்து - (இங்ஙனம் இவள் சொல்லும்) இது கண்ணபிரானது வஞ்சனையாக
இருத்தலுங் கூடுமென்று மனத்திலே