பக்கம் எண் :

28பாரதம்உத்தியோக பருவம்

காரியம் பிறரெவராலும்ஆகமாட்டாதென்ற உறுதி வீடுமனுக்கு இருத்தல்
கூடுமென்று கருதி, கர்ணன் அதனை யெடுத்துக் காரணங்காட்டிக் கண்டித்துப்
பேசுகிறான்.  தசரதராமன் சீதையை மணம் புரிந்து மிதிலையினின்று
மீண்டுவருகையில், அவனை வலியச்சென்று எதிர்த்துப் பரசுராமன் அவனால்
வெல்லப்பட்டு அப்பொழுது எல்லா வலிமைகளையுமிழந்தன னாதலாலும்,
'பாம்பின் கால் பாம்பறியும்' என்றபடி அவனது வில்வித்தையிலுள்ள
அந்தரங்கமான பொருள்களை யெல்லாம் அவனிடம் நீ மாணாக்கனாயிருந்து
அறிந்தவனாதலாலும், நீ அவனுடன் பொருதகாலத்திலும் அவன் பிராயம்
முதிர்ந்தவனும் நீ நல்ல தருண வயதுடையவனுமாதலாலும், அவனை வென்றது
ஒரு வெற்றியாகச் சிறிதும் மதிக்கத்தக்க தன்றென்று இகழ்ந்தவாறு.  கர்ணன்
இளம்பிராயத்திற் பிராமண வடிவங்கொண்டு பரசுராமனிடஞ்சென்று
வில்வித்தையைக் கற்றுக் கைதேர்ந்துவருகையில், க்ஷத்திரியவம்ச நாசகனான
அவன், இவனை க்ஷத்திரியசாதியானென்று அறிந்து கடுங்கோபங்கொண்டு
'யான் உனக்குக் கற்றுக்கொடுத்த கல்வியனைத்தும் தக்க சமயத்தில்
உதவாதபடி மறந்துபோய்விடக்கடவது' என்று சாபங்கொடுத்ததுபற்றிக் கர்ணன்
பரசுராமன் மீது துரபிப்பிராயமுடைய வனாதலால்,  இங்கே வீடுமனைப்
பழிக்கிற சந்தர்ப்பத்தில் அவனையும் பழித்தான்.  காசிராஜனது பெண்கள்
மூவரைத் தன் தம்பியான விசித்திரவீரியனுக்கு மணம் புரிவிக்கும் பொருட்டுச்
சுயம்வரத்தில் வீடுமன் வலியத்தேரேற்றிக் கொண்டு செல்லுகையில், அரசர்கள்
பலர் வந்து பொருது தோல்வியடைய, அவர்களுள் சிறிது போரில் முன்னிட்ட
சாலுவனிடத்து அம்பை யென்பவள் மனத்தைச்செலுத்தி வீடுமனினின்று
நீங்கிச் சாலுவனிடஞ் சென்று சேர, அவன் 'பகைவர் கவர்ந்து போன உன்னை
யான் தொடேன்' என்று மணம்மறுத்துவிட்டதனால், அவள் பின்னர் வீடுமனை
மணஞ்செய்யும்பொருட்டுப் பலவாறு முயன்றும் பயன்படாமையால், முடிவில்
பரசுராமனைச் சரணமடைய, அப்பிரான் அருளால் விரைந்துவந்து வீடுமனை
மணஞ்செய்யும்படி வற்புறுத்த, விரதவுறுதியையுடைய வீடுமன் அதனை
மறுக்கவே, அவன் கோபங்கொண்டு அறைகூவிப் பெரும்போர்செய்ய,
அப்போரில் வீடுமன் பரசுராமனை வென்றிட்டனனென்பது வரலாறு; இதனைக்
கீழ்க் குருகுலச் சருக்கத்திலும் காணலாம்.

     முதலடிஉவமையணி.  பரசுராமனுக்குப் புலியும், வலிமைக்கு உகிரும்
உவமை.  சேவகம் - வீரமாதலை "சார்ங்கவிற் சேவகன்" எனப் பெரியாழ்வார்
திருமொழியிலும், "ஏறுசேவகன்" எனக் கம்பராமாயணத்திலுங் காண்க.  மற்று
- இடைச்சொல்; இங்கு, பிற்பொருள் தந்தது.  காங்கெயன் - விகாரம்;
காங்கேயன் தந்திதாந்த நாமம்.  கண் சிவத்தல் - கோபக்குறிப்பு.  புலிக்கு
மற்றையுயிர்களை வருத்துதற்குக் கருவி நகமாதலால், அதனைப் பரசுராமனது
வலிமைக்கு உவமை கூறினார்.  வெம் புலியென உபமானத்தை விசேடித்தது,
உபமேயமான பரசுராமன் முன்பு பல அரசர்களைக் கருவறுத்த
வீரமுடையவனாதலின்.  ஆவேசாவதாரம் அம்சாவதாரத்தினுங்
குறைவுபட்டதாதலால், ஆவேசாவதாரமான பரசுராமனுடைய சக்தி