பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 281

     மிக்கஅன்பினால், இப்பொழுது தனங்களிற் பால் சுரந்தது.
"அன்றன்போ டெடுத்தணைத்து முலைக்கணூற லமுதூட்டி,' என்பர்
மேற்கன்னபருவத்தும்.  மோயினள் - முற்றெச்சம்;
"மோயினளுயிர்த்தகாலை"என்றார் பிறரும்.  மோ - பகுதி, ய் -
எழுத்துப்பேறு, இன் - இறந்தபாலஇடைநிலை, அள் - பெண்பால்விகுதி.
உடம்பில் மயிர் சிலிர்த்தல், அன்பின்மெய்ப்பாடு.  ஆதரம், புளகம், பாக்யம்
- வடசொற்கள்.  பாக்கியம் -அதிருஷ்டம்; நல்லூழ்ப்பேறு.  இறுகுற -
அழுந்த.  'பால்சுரந்தாள்' என்றும்பாடம்.                     (312)

253.வருகவென்மதலாயிளைஞரைவருநின் மலரடியன்பினால்
                                   வணங்கி,
யுரிமையான்மனமொத்தேவலேபுரியவொருதனிச்செய்ய
                                கோலோச்சி,
யரசெலாம்வந்துன்கடைத்தலைவணங்க வாண்மையுஞ்செல்வமும்
                                  விளங்கக்,
குருகுலாதிபர்க்குங்குரிசிலாய்வாழ்வு கூர்வதே கடனெனக்
                                  குறித்தாள்.

     (இ -ள்.) (பின்பு குந்தி கர்ணனைப்பார்த்து), 'என் மதலாய் - எனது
புத்திரனே! வருக - (என்னுடன்) வருவாயாக; இளைஞர் ஐவரும் -
(பாண்டவர்களாகிய உன்) தம்பியரைந்துபேரும், நின்மலர் அடி அன்பினால்
வணங்கி - உனது தாமரை மலர்போலும் பாதங்களை அன்பால் நமஸ்கரித்து,
உரிமையால் - க்ஷத்திரியதரும முறைப்படி, மனம் ஒத்து ஏவலே புரிய -
மனம்ஒருமித்து (நீயேவின) சிறுகுற்றேவல் தொழில்களையே செய்ய,
ஒருதனி -ஒப்பற்ற தனியாய், செய்ய கோல் ஓச்சி - (நீ) செங்கோலை நடத்தி,
அரசுஎலாம் வந்து உன் கடைத்தலை வணங்க - அரசர்களெல்லாரும் வந்து
உனதுவாயிற்புறத்தில் நின்று வணங்கவும், ஆண்மையும் செல்வமும்
விளங்க -வீரமும் செல்வமும் விளங்கவும், குருகுல அதிபர்க்கும் குரிசில்
ஆய் -குருகுலத்து அரசர்கட்கெல்லாம் அரசனாய், வாழ்வு கூர்வதே -
வாழ்க்கை மிகவேண்டுவதே, கடன் - (நீ செய்தற்கு உரிய) கடமை,' என -
என்று, குறித்தாள்- குறிப்பிட்டுக் கூறினாள்; (எ - று.)

    மதலாய் - மதலையென்பது ஈறுதிரிந்த விளி.  ஏவலே - புரிய -
அரசுபுரியாம லென்றபடி.  ஒருதனி - தன்னந்தனியே.  தலைக்கடை -
கடைத்தலை; இலக்கணப்போலி.                            (313)

254.-இதுவும் மேற்கவியும்ஒருதொடர்: அதுகேட்டுக் கர்ணன்
குந்தியை நோக்கிக் கூறுவன.

பெற்றநீர்மகவன்பிலாமையோவன்றிப்பெரும்பழிநாணியோவிடுத்தீர்,
அற்றைநாட்டொடங்கி யென்னையின்றளவு மாருயிர்த்துணை
                                        யெனக்கருதிக்,
கொற்றமாமகுடம்புனைந்தரசளித்துக் கூடவுண்டுரியதம்பியருஞ்,
சுற்றமானவருமென்னடிவணங்கத்தோற்றமுமேற்றமுமளித்தான்.

     (இ -ள்.) பெற்ற நீர் - (என்னை) ஈன்ற நீர், மகவு அன்பு இலாமையோ
- புத்திரவாற்சலிய மில்லாமையினாலோ? அன்றி அல்லது, பெரு பழி
நாணியோ - பெரியலோகாபவாதத்துக்கு வெட்கப்பட்டோ? விடுத்தீர் -
(என்னை) விட்டுவிட்டீர்; அற்றை நாள் தொடங்கி - அன்