பக்கம் எண் :

282பாரதம்உத்தியோக பருவம்

றையதினம்முதல், இன்று அளவும் - இன்றைவரையிலும், என்னை -,
ஆர்உயிர் துணை என கருதி - அருமையான உயிரோடொத்த
நண்பனாகநினைத்து, (துரியோதனன்), கொற்றம் மா மகுடம்புனைந்து -
வெற்றியை விளக்குகிற சிறந்தகிரீடத்தை (எனக்கு)ச் சூட்டி, அரசு அளித்து -
(அங்கதேசத்து) அரசாட்சியையுங் கொடுத்து, கூட உண்டு  (என்னை)
உடன்வைத்துக்கொண்டு புசித்து, உரிய தம்பியரும் சுற்றமானவரும் என் அடி
வணங்க - (அவனுக்கு) உரிய தம்பிமார்களாகிய துச்சாதனன் முதலியோரும்
(மற்றும் அவனுடைய) உறவினரானவர்களும் எனது பாதங்களை நமஸ்கரிக்க,
தோற்றமும் ஏற்றமும் அளித்தான் - பிரசித்தியான பேரையும்  உயர்வையும்
(எனக்குக்) கொடுத்தருளினான்; (எ - று.)

     இவள்பழிநாணி விடுத்தது, அன்பில்லாது விடுத்ததுபோலுமாதலால்
இதுவோ அதுவோ என விகற்பித்தான்.  அன்று + நாள் = அற்றைநாள்.
தோற்றம் - தோன்றுவதான புகழுக்குக் காரணப்பெயர்.             (314)

255.மடந்தைபொற்றிருமேகலைமணியுகவே மாசறத்திகழுமே காந்த,
விடந்தனிற்புரிந்தேநானயர்ந்திருப்பவெடுக்கவோகோக்கவோ
                                        வென்றான்,
திடம்படுத்திட வேலிராசராசனுக்குச்செருமுனைச் சென்று
                                     செஞ்சோற்றுக்,
கடன்கழிப்பதுவேயெனக்கினிப் புகழுங் கருமமுந்தரு
                                     மமுமென்றான்.

    (துரியோதனனுக்குத் தன்னிடத்தில் மிகுந்த விசுவாசம் [நம்பிக்கை]
எனத்தெரிவித்தற்கு, முன்னே நடந்ததொரு அந்தரங்கமான செய்தியைக்
கர்ணன்எடுத்துக் கூறுகின்றான்.)

     (இ -ள்.) மாசு அற திகழும் ஏகாந்தம் இடந்தனில் - குற்றமில்லாமல்
விளங்குவதொரு இரகசியமான இடத்திலே, நான்-, மடந்தை பொன் திரு
மேகலை மணி உக புரிந்து - (துரியோதனன் மனைவியான) பாநுமதியினது
பொன்னினாலாகிய அழகிய மேகலாபரணத்தின்மணிகளைச் சிந்தும்படி செய்து,
அயர்ந்து இருப்ப - செயலற்றுச் சிந்தித்திருக்க, (அப்பொழுது துரியோதனன்
வந்து), எடுக்கவோ கோக்கவோ என்றான் - (இம்மணிகளை நான்)
எடுத்துக்கொடுப்பேனாகவா? கோத்துக்கொடுப்பேனாகவா? என்று (எனக்கு
அச்சம்நீங்கும்படி அன்போடு) கேட்டான்; (அப்படிப்பட்ட), வேல்
இராசராசனுக்கு - வேலில்வல்ல துரியோதனராசனுக்கு, திடம்படுத்திட -
உறுதியை உண்டாக்குதற்கு, செருமுனை சென்று - (நான்) போர்க்களத்திலே
போய், செம் சோறு கடன்கழிப்பதுவே - (அவன்) செவ்வையாகப் போகட்டு
வந்த சோற்றுக்கு உரிய கடனைத்தீர்ப்பதே, எனக்கு இனி புகழும் கருமமும்
தருமமும் - எனக்கு இனிமேல் கீர்த்தி தருவதும் செய்தக்கதொழிலும்
அறமுமாம், என்றான் - என்று (கன்னன் குந்தியைநோக்கிக்) கூறினான்;
(எ -று.) இங்ஙனஞ் சொல்லித் துரியோதனனைவிட்டுப் பாண்டவரிடம்
வரமாட்டேனென்று கன்னன் தடுத்தான்.

    "வெஞ்சோற்றே டினிதருந்தி யமுதருந்தும் விண்ணவர்போலிந்நெடு
நாள்விழைந்துவாழ்ந்தேன், செஞ்சோற்றுக்கடனின்றே