பக்கம் எண் :

288பாரதம்உத்தியோக பருவம்

பின்னேதொடர்ந்துவருகிற அரசர்களையும் ஒருவரொருவராக நிற்கச் செய்து,
பண் அமை தட தேர் மீது கொண்டு - அலங்காரம் அமைந்த பெரிய தனது
தேரின்மே லேறிக்கொண்டு, அன்றே பாண்டவர் உறைநகர் அடைந்தான் -
அப்பொழுதே புறப்பட்டுப் பாண்டவர்கள் வசிக்கிற (உபப்பிலாவிய)
நகரத்தைச்சேர்ந்தான்; (எ - று.)                 (323)

264.-கண்ணன் நடந்தவற்றைப்பாண்டவர்க்கு உரைத்தல்.

தூதுபோயரவத்துவசனோடுறுதிசொன்னது மறுத்தவன்சினந்து,
மோதுபோர்புரியத்துணிந்ததும்விதுரன் மூரிவில்லிறுத்ததுங்கங்குற்,
போதுபோர்வஞ்சம் விளைத்ததுங்கன்னன் புரந்தரற்கீந்ததும்
                                              பயந்த,
மாதுபோய்வரங்கள்பெற்றவையொழியமற்றெலாமைத்துனர்க்
                                          குரைத்தான்.

     (இ -ள்.) தூது போய் - (தான்) தூதுசென்று, அரவம் துவசனோடு -
துரியோதனனுடனே, உறுதி சொன்னதும் - நன்மைதருவதான சமாதான
வார்த்தையைக் கூறியதையும், அவன் - அத்துரியோதனன், மறுத்து -
(அதனைஉடன்படாது) தடுத்து, சினந்து - கோபித்து, மோது போர் புரிய
துணிந்ததும் -தாக்குகின்ற யுத்தத்தைச் செய்ய நிச்சயித்ததையும், விதுரன் -,
மூரிவில்இறுத்ததும் - வலிமையையுடைய [அல்லது பழைய] தனது வில்லை
யொடித்துப்போகட்டுவிட்டதையும், கங்குல் போது - இராக்காலத்தில்,
(ஆலோசித்துத்துரியோதனன்), வஞ்சம் போர் விளைத்ததும் -
வஞ்சனையான யுத்தத்தை(நிலவறையில்) அமைத்துவைத்ததையும், கன்னன் -,
புரந்தரற்கு ஈந்ததும் -இந்திரனுக்குக் (கவசகுண்டலங்களைக்) கொடுத்ததையும்,
பயந்த மாது போய்வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் - பெற்றதாயான
குந்தி சென்று(கர்ணனிடத்து) வரங்கள் பெற்றவற்றைத் தவிர மற்றுமுள்ள
எல்லாச்செய்திகளையும், மைத்துனர்க்கு உரைத்தான் - (ஸ்ரீகிருஷ்ணபகவான்
தனது)மைத்துனர்களாகிய பாண்டவர்களுக்குக் கூறியருளினான்; (எ - று.)

     பயந்தமாது போய் வரங்கள் பெற்றவற்றைக் கூறாததற்குக் காரணம்
கீழே விளக்கப்பட்டது.  அத்தைமகனை மைத்துனனென்பது - முற்காலத்து
வழக்கம்போலும்.  மற்றெலாம் என்றதில், அசுவத்தாமனைப் பேதித்தது
அடங்கும்.                                              (324)

கிருட்டிணன் தூதுசருக்கம் முற்றிற்று.

-------