பக்கம் எண் :

289

ஐந்தாவது

படையெழுச்சிச் சருக்கம்.

    பாண்டவர் துரியோதனாதியர் என்னும் இருவரது சேனைகள் போரின்
பொருட்டுத் தனித்தனி திரண்டெழுந்துநின்ற செய்தியைக் கூறுகின்றதொரு
நூற்கூறுபாடென்பது பொருள்.  படையெழுச்சி என்பது - படை எழுதல் என
எழுவாய்த்தொடராகவாயினும், படையினது எழுதல் என ஆறாம்வேற்றுமைத்
தொகைநிலைத் தொடராகவாயினுங் கொள்ளத்தக்கது.  எழுச்சிச் சருக்கம் -
எழுச்சியைக் கூறுஞ்சருக்கமென இரண்டனுருபும்பயனும் உடன்தொக்கதொகை;
இனி, எழுச்சியினது சம்பந்தமான சருக்கமென விரித்து, ஆறாம்
வேற்றுமைத்தொகை யென்றுங் கொள்ளலாம்.  படை - (பகைவரைப்)
படுத்தற்குக்கருவியானது எனக் காரணப்பெயர்; படு - பகுதி: படுத்தல் -
அழித்தல்:  ஐ - கருவிப்பொருளீறு.  எழுச்சி - தொழிற்பெயர்.  சி - விகுதி.
இச்சருக்கத்தில் முதற்பதின்மூன்று பாடல்கள் - கண்ணன் தூதுசென்று
வந்தவுடனே தருமபுத்திரன் பகை முடித்தற்பொருட்டுச் சேனைதிரட்டின
செய்கையையும், பின் பதினொரு பாடல்கள் அங்ஙனமே துரியோதனன்
சேனைதிரட்டின வரலாற்றையுங் கூறுதல் காண்க.

1.-கடவுள் வணக்கம்.

படர்ந்தகானகந்திரிந்துமீண்டன்புடன்பணிந்தபஞ்சவர்க்காகக்
கடந்தஞானியர் கடவுளர் காண்கலாக் கழலிணைசிவப்பேறத்
தொடர்ந்தநான்மறைபின்செலப்பன்னகதுவசன் மாநகர்த்தூது
நடந்தநாயகன்கருமுகில்வண்ணமென்னயனம்விட்டகலாதே.

     (இ -ள்.) படர்ந்த - பரவியுள்ள, கான் அகம் - காட்டினிடத்திலே,
திரிந்து - (பலவருஷகாலம்) அலைந்து, மீண்டு - திரும்பிவந்து, அன்புடன்
பணிந்த - அன்போடு (தன்னை) வணங்கின, பஞ்சவர்க்கு ஆக -
பஞ்சபாண்டவர்கள் பொருட்டு,-கடந்த ஞானியர் - (இவ்வுலகப்பற்றுக்களை)
வென்ற தத்துவஞானமுள்ள முனிவர்களும், கடவுளர் - தேவர்களும்,
காண்கலா- (உள்ளபடி) காணவொண்ணாத, கழல் இணை - (தனது)
திருவடிகளிரண்டும்,சிவப்பு ஏற - செந்நிறம் மிகப்பெறவும்,-தொடர்ந்த -
(தன்னைத்)தேடுந்தன்மையுள்ள, நால் மறை - நான்கு வேதங்களும், பின்
செல -(காணமாட்டாமல்) விடாது தன் பின்னேவரவும்,-பன்னக துவசன்
மாநகர் -பாம்புக்கொடியையுடைய துரியோதனனது பெரிய
அஸ்தினாபுரியிலே,தூதுநடந்த - தூதனாய் நடந்து சென்ற, நாயகன் -
(எல்லாவுயிர்க்குந்)தலைவனான கண்ணபிரானது, கருமுகில் வண்ணம் - கரிய
மேகம்போன்றதிருமேனிநிறம், என் நயனம் விட்டு அகலாது -
(எப்பொழுதும்) எனதுகண்களைவிட்டு நீங்காது; (எ - று.) - ஏகாரம் -
தேற்றம்; ஈற்றசை யெனினும்அமையும்.